Breaking News

பச்சோந்தி மரமேறும் கணக்கு - கணிதப் புதிர்கள்

ADSENSE HERE!

நமது பழந்தமிழரின் கணித திறனை உலகிற்கு பறைசாற்றும் கணக்கதிகாரத்தில் இருந்து மேலும் ஒரு புதிரை பதிவிடுகிறேன்


         “ முப்பத்தி ரண்டு முழம்உளமுப் பனையைத்
          தப்பாமல் ஒந்தி தவழ்ந்தேரிச்-செப்பமுடன்
          சாணேறி நான்கு விரற்கிழியும் என்பரே
          நாணா தொருநாள் நகர்ந்து “

ஒரு பனைமரம் 32 முழம் உயரமுடையது .பச்சோந்தி  ஒன்று அதிலேற முயற்சி செய்தது.அது ஒரு நாளைக்கு சாண் ஏறி , நாலு விரல் கீழே இறங்குகிறது எனில் எத்தனை  நாளில் பச்சோந்தி பனைமரத்தை ஏறி முடிக்கும் ?

விளக்கம்
முதலில் பனை மர உயரமான 32 முழத்தை விரற்கடையாக மாற்ற வேண்டும்
12 விரற்கிடை= 1 சாண் ,
2 சாண் = 1 முழம் ,
இதன் மூலம் 24 விரற்கடை = 1 முழம் எனவும் நாம் அறிகிறோம்
எனவே 32 முழம்  ஆனது 32*24=768 விரற்கடை ஆகும் .

பச்சோந்தி நாள் ஒன்றுக்கு  12 விரற்கடை ( 1 சாண் ) ஏறி  நாலு விரற்கடை கீழிறங்குகிறது  .எனவே அது  ஒரு நாளுக்கு (12 – 4=8) 8 விரற்கடை ஏறும்.

பச்சோந்தி மரம் ஏற ஆகும் நாட்கள்
                 768/8 =96
ஆகவே பச்சோந்தி 96 நாட்களில் மரத்தை ஏறி முடிக்கும்
ADSENSE HERE!

No comments:

Post a Comment