Breaking News

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 22

ADSENSE HERE!

*    மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.

*    மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் - மனவெழுச்சி.

*    சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது - பெரு மூளை.



*    ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை? - மூன்றாம் நிலை.

*    பிறந்த  குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது?  - உடல் தேவை

*    அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் யார? -எல். தர்ஸ்டன்.

*    தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? - ஏழு

*    நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை - உற்று நோக்கல் முறை.

*    மனவெழுச்சி என்பது -  உணர்ச்சி மேலோங்கிய நிலை

*    புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது?  - சூழ்நிலை.

*    ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவரு?  - மெண்டல்

*    ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது?  - அயோவா


*     உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் - மக்டூகல்

*    தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.

*    உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.

*    உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.

*    பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.


*    பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.

*    மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை

*    வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை

*    உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை -  பரிசோதனை முறை

*    அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை


*    கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.

*    சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்.

*    உடலால் செய்யப்படும் செயல்கள் எத? - நீந்துதல்.

*    அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே

*    மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.

*    வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.

*    கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு எத? - கல்வி உளவியல்

*    பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை -  அகநோக்கு முறை.

*     தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய்விளக்கவியல்.


*    'உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ்

*     உற்றுநோக்கலின் படிகள் - ஏழு

*    உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்திய ஆய்வு செய்தல்

*    வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? -  உற்று நோக்கல் முறை.

*    பரிசோதனை முறைக்கு வேறு பெயர் என்ன? - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.

*    மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்

*    அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.

*    குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்

*    அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல்

*    குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ்

*    குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்

*    திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் - சூழ்நிலை

*    ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி

ADSENSE HERE!

No comments:

Post a Comment