ADSENSE HERE!
1. ஆற்றுப்படை இலக்கியங்களின் எண்ணிக்கை
அ. 5
ஆ. 6
இ. 4
ஈ. 3
2. புனிதவதியார் என்றழைக்கப்பட்டவர்
அ. திலகவதியார்
ஆ. காரைக்காலம்மையார்
இ. நாச்சியார்
ஈ. மங்கையர்க்கரசியார்
3. ஓரின மன்னர்கள் பற்றிய சங்க இலக்கியம்
அ. புறநானூறு
ஆ. பரிபாடல்
இ. பதிற்றுப்பத்து
ஈ. பத்துப்பாட்டு
4. கபிலர் இயற்றியது
அ. இனியவை நாற்பது
ஆ. களவழி நாற்பது
இ. கார் நாற்பது
ஈ. இன்னா நாற்பது
5. ‘நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்’ என்று கூறியவர்
அ. திருத்தக்க தேவர்
ஆ. இளங்கோ
இ. கம்பர்
ஈ. சேக்கிழார்
6. ‘அருள்மொழித்தேவர்’ என்னும் இயற்பெயரினர்
அ. சேக்கிழார்
ஆ. சாத்தனார்
இ. கம்பர்
ஈ. திருத்தக்க தேவர்
7. விருத்தப்பாக்களால் ஆன காப்பியம்
அ. சிலம்பு
ஆ. மேகலை
இ. சிந்தாமணி
ஈ. வளையாபதி
8. ‘கவிராட்சதன்’ எனப்பட்டவர்
அ. புகழேந்தி
ஆ. ஔவையார்
இ. காளமேகம்
ஈ. ஒட்டக்கூத்தர்
9. வச்சணந்திமாலை என்பது
அ. சிற்றிலக்கியம்
ஆ. சித்திரகவி
இ. வெண்பாப் பாட்டியல்
ஈ. சமயநூல்
10. வீரசைவம் சார்ந்தவர்
அ. இராமலிங்க அடிகள்
ஆ. குமரகுருபரர்
இ. தாயுமானவர்
ஈ. அருணகிரிநாதர்
11. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
அ. மறைமலையடிகள்
ஆ. ரா.பி.சேதுப்பிள்ளை
இ. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை
ஈ. பேராசிரியர் சுந்தரம்பிள்ளை
12. ஆய்வேட்டின் அடிப்படையில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர்
அ. அ.சிதம்பநாதன் செட்டியார்
ஆ. டி.கே.சிதம்பரநாத முதலியார்
இ. பம்மல் சம்பந்த முதலியார்
ஈ. டாக்டர் வா.செ.குழந்தைசாமி
13. தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியர்
அ. பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை
ஆ. வீரமாமுனிவர்
இ. ஜி.யூ.போப்
ஈ. தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
14. ‘இராசராசன்’ விருதினைப் பெற்றவர்
அ. மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
ஆ. சுத்தானந்த பாரதியார்
இ. பாரதிதாசன்
ஈ. கவிமணி
15. தமிழில் வெளிவந்த முதல் இதழ்
அ. சுதேசமித்திரன்
ஆ. குயில்
இ. தினமணி
ஈ. தமிழ் மேகசீன்
16. கப்பல் கட்டும் தொழில் நடைபெற்ற அரசர் காலம்
அ. சேரர்
ஆ. பல்லவர்
இ. சோழர்
ஈ. பாண்டியர்
17. ‘மொழி முதற்காரணமாம்’ அணுத்திரள் ஒலி என்பது
அ. எழுத்து
ஆ. சொல்
இ. மாற்றொலி
ஈ. உருபன்
18. ‘முட்டாச்சிறப்பின் பட்டினம்’
அ. பூம்புகார்
ஆ. தூத்துக்குடி
இ. உறையூர்
ஈ. காயல்பட்டினம்
19. போர்ச் செய்திகளைத் தரும் நூல்
அ. கார் நாற்பது
ஆ. களவழி நாற்பது
இ. இன்னா நாற்பது
ஈ. இனியவை நாற்பது
20. யாண்டு பலவயினும் நரையின்றி வாழ்ந்தவர்
அ. ஔவையார்
ஆ. முடத்தாமக் கண்ணியார்
இ. பிசிராந்தையார்
ஈ. காரைக்காலம்மையார்
21. உறுதிக்கூற்று : சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனப்படும்.
காரணம் : சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் உரை எழுதியுள்ளார்.
அ. (உ), (கா) இரண்டும் சரி
ஆ. (உ) சரி, (கா) சரியன்று
இ. (உ), (கா) இரண்டும் சரியல்ல
ஈ. (உ) சரியன்று, (கா) சரி
22. உறுதிக்கூற்று : திவாகரம் ‘பூரண நிகண்டு’ எனப்படும்.
காரணம் : நிகண்டுகளுக்குரிய முப்பெரும் தொகுதிகள் திவாகரத்தில் இடம் பெற்றுள்ளன.
அ. (உ), (கா) இரண்டும் சரி
ஆ. (உ) சரி, (கா) சரியன்று
இ. (உ) தவறு, (கா) சரி
ஈ. (உ), (கா) இரண்டும் சரியல்ல
23. உறுதிக்கூற்று : வேத்தியல் என்பது பண்டைய நாடக வகைகளுள் ஒன்று.
காரணம் : அரச குடும்பத்தினர் பார்ப்பதற்காக நடத்தப்பட்டது.
அ. (உ), (கா) இரண்டும் தவறு
ஆ. (உ) சரி, (கா) தவறு
இ. (உ) தவறு, (கா) சரி
ஈ. (உ), (கா) இரண்டும் சரி
24. உறுதிக்கூற்று : ‘வாடாமலர்’ என்பதில் உள்ள ‘வாடா’ என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும்.
காரணம் : இறுதி எழுத்து ஒழிந்தது; உடன்பாட்டுப் பொருளில் வருவது; பெயரை அவாவி நிற்பது.
அ. (உ), (கா) இரண்டும் சரி
ஆ. (உ), (கா) இரண்டும் தவறு
இ. (உ) சரி, (கா) தவறு
ஈ. (உ) தவறு, (கா) சரி
25. உறுதிக்கூற்று : பாரதி தன் படைப்பொன்றுக்குப் ‘பாஞ்சாலிசபதம்’ எனப் பெயரிட்டார்.
காரணம் : இது திரௌபதியின் சபதத்தை மையமாகக் கொண்டது.
அ. (உ), (கா) இரண்டும் சரி
ஆ. (உ), (கா) இரண்டும் சரியல்ல
இ. (உ) சரி, (கா) சரியன்று
ஈ. (உ) சரியன்று, (கா) சரி
26. உறுதிக்கூற்று : தமிழ், உயர்தனிச்செம்மொழி என்னும் தகுதி சான்றது.
காரணம் : இந்திய அரசு தமிழுக்குச் செம்மொழித் தகுதியை வழங்கியுள்ளது.
அ. (உ), (கா) இரண்டும் சரி
ஆ. (உ), (கா) இரண்டும் சரியல்ல
இ. (உ) சரி, (கா) சரியன்று
ஈ. (உ) சரியன்று, (கா) சரி
27. உறுதிக்கூற்று : சிவப்பிரகாசர் தன் நூலொன்றுக்கு ‘நீரோட்டக யமக அந்தாதி’ எனப் பெயரிட்டார்.
காரணம் : இது இதழுகல் யமக அந்தாதி.
அ. (உ), (கா) இரண்டும் தவறு
ஆ. (உ) தவறு, (கா) சரி
இ. (உ) சரி, (கா) தவறு
ஈ. (உ), (கா) இரண்டும் சரி
28. உறுதிக்கூற்று : ஔவையார் இயற்றிய நீதிநூல் ஒன்றிற்கு ஆத்திச்சூடி என்று பெயர்.
காரணம் : ஆத்திமாலையைச் சூடியபடி அவர் அதனைப் பாடினார்.
அ. (உ), (கா) இரண்டும் சரி
ஆ. (உ), (கா) இரண்டும் சரியல்ல
இ. (உ) தவறு, (கா) சரி
ஈ. (உ) சரி, (கா) தவறு
29. உறுதிக்கூற்று : நொண்டி நாடகம் ‘ஒற்றைக்கால் நாடகம்’ எனவும் வழங்கப்படும்.
காரணம் : தீயவழிகளில் நடந்த ஒருவர் துன்புற்றுக் காலொன்று இழந்து வாடுவதாகப் பாவித்துப் பாடப்படுவது.
அ. (உ), (கா) இரண்டும் தவறு
ஆ. (உ) சரி, (கா) தவறு
இ. (உ), (கா) இரண்டும் சரி
ஈ. (உ) தவறு, (கா) சரி
30. தொல்காப்பிய எழுத்ததிகார வரிசை:
அ. நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல்
ஆ. பிறப்பியல், நூன்மரபு, மொழிமரபு, புணரியல்
இ. பிறப்பியல், புணரியல், மொழிமரபு, நூன்மரபு
ஈ. நூன்மரபு, பிறப்பியல், புணரியல், மொழிமரபு
31. இடமலைவின் வரிசை:
அ. ஆறு, மலை, நாடு
ஆ. ஆறு, நாடு, மலை
இ. நாடு, மலை, ஆறு
ஈ. மலை, நாடு, ஆறு
32. ஆழ்வார்களின் வரிசை:
அ. பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார்
ஆ. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
இ. பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார்
ஈ. பூதத்தாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார்
33. மொழியியல் பிரிவுகள்
அ. உருபனியல், தொடரியல், உருபொலியனியல், ஒலியனியல்
ஆ. உருபனியல், ஒலியனியல், உருபொலியனியல், தொடரியல்
இ. ஒலியனியல், உருபனியல், உருபொலியனியல், தொடரியல்
ஈ. ஒலியனியல், தொடரியல், உருபொலியனியல், உருபனியல்
34. தன்மையணியின் வகை :
அ. சாதி, தொழில், குணம், பொருள்
ஆ. பொருள், தொழில், சாதி, குணம்
இ. பொருள், குணம், சாதி, தொழில்
ஈ. தொழில், சாதி, குணம், பொருள்
35. தொல்காப்பியத்தின் நிலத் தெய்வ வரிசை :
அ. மாயோன், வேந்தன், சேயோன், வருணன்
ஆ. வருணன், வேந்தன், மாயோன், சேயோன்
இ. மாயோன், சேயோன், வேந்தன், வருணன்
ஈ. மாயோன், வருணன், வேந்தன், சேயோன்
36. சைவசித்தாந்த சாத்திரத்தை முன்நிறுத்தும் வெண்பாவில் காணலாகும் வரிசை :
அ. உந்தி, போதம், சித்தியார், களிறு
ஆ. உந்தி, களிறு, போதம், சித்தியார்
இ. களிறு, போதம், உந்தி, சித்தியார்
ஈ. சித்தியார், களிறு, உந்தி, போதம்
37. ஆற்றுப்படை குறித்த தொல்காப்பியர் நூற்பா :
அ. பாணர், விறலி, பொருநர், கூத்தர்
ஆ. பாணர், பொருநர், கூத்தர், விறலி
இ. விறலி, கூத்தர், பாணர், பொருநர்
ஈ. கூத்தர், பாணர், பொருநர், விறலி
38. பொருத்துக :
a. ஞான சம்பந்தர்
b. திருநாவுக்கரசர்
c. சுந்தரர்
d. மாணிக்க வாசகர்
1. வன்தொண்டர்
2. திருவாதவூரர்
3. தாண்டக வேந்தர்
4. திராவிடசிசு
அ. a - 4, b - 3, c - 1, d - 2
ஆ. a - 3, b - 4, c - 1, d - 2
இ. a - 4, b - 3, c - 2, d - 1
ஈ. a - 2, b - 4, c - 3, d - 1
39. பொருத்துக :
a. பெரும்பாணாற்றுப்படை
b. பொருநராற்றுப்படை
c. திருமுருகாற்றுப்படை
d. சிறுபாணாற்றுப்படை
1. நக்கீரர்
2. நத்தத்தனார்
3. முடத்தாமக்கண்ணியார்
4. உருத்திரங்கண்ணனார்
அ. a - 4, b - 2, c - 1, d - 3
ஆ. a - 1, b - 3, c - 4, d - 2
இ. a - 4, b - 3, c - 1, d - 2
ஈ. a - 3, b - 4, c - 1, d - 2
40. பொருத்துக :
a. அகவற்பா
b. கலிப்பா
c. வஞ்சிப்பா
d. வெண்பா
1. செப்பலோசை
2. தூங்கலோசை
3. துள்ளல் ஓசை
4. அகவலோசை
அ. a - 4, b - 2, c - 3, d - 1
ஆ. a - 4, b - 1, c - 2, d - 3
இ. a - 4, b - 3, c - 1, d - 2
ஈ. a - 4, b - 3, c - 2, d - 1
41. பொருத்துக :
a. வீரசோழியம்
b. இலக்கண விளக்கம்
c. தொன்னூல் விளக்கம்
d. சுவாமிநாதம்
1. வீரமாமுனிவர்
2. சாமிகவிராசர்
3. புத்தமித்திரர்
4. வைத்தியநாத தேசிகர்
அ. a - 3, b - 4, c - 1, d - 2
ஆ. a - 3, b - 1, c - 4, d - 2
இ. a - 3, b - 2, c - 1, d - 4
ஈ. a - 3, b - 4, c - 1, d - 1
42. பொருத்துக :
a. The Pilgrims Progress
b. The Light of Asia
c. The Secret way
d. As you like it
1. மனோன்மணீயம்
2. விரும்பிய வண்ணமே
3. ஆசிய ஜோதி
4. இரட்சணிய யாத்திரிகம்
அ. a - 4, b - 1, c - 3, d - 2
ஆ. a - 4, b - 3, c - 1, d - 2
இ. a - 4, b - 3, c - 2, d - 1
ஈ. a - 4, b - 2, c - 1, d - 3
43. பொருத்துக :
a. திவாகரம்
b. கரித்துண்டு
c. அவிநயம்
d. நீலகேசி
1. இலக்கணம்
2. காப்பியம்
3. நிகண்டு
4. நாவல்
அ. a - 3, b - 1, c - 2, d - 4
ஆ. a - 3, b - 2, c - 1, d - 4
இ. a - 3, b - 4, c - 1, d - 2
ஈ. a - 3, b - 2, c - 4, d - 1
44. பொருத்துக :
a. குறுந்தொகை
b. நற்றிணை
c. அகநானூறு
d. ஐங்குறுநூறு
1. உப்பூரிகுடிகிழார்
2. கூடலூர்கிழார்
3. பன்னாடுதந்த பாண்டியன்
4. பூரிக்கோ
அ. a - 4, b - 1, c - 3, d - 2
ஆ. a - 4, b - 2, c - 3, d - 1
இ. a - 4, b - 1, c - 2, d - 3
ஈ. a - 4, b - 3, c - 1, d - 2
பின்வரும் பகுதியைப் படித்துப் பார்த்துத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள வினாக்களுக்கு ஏற்ற விடையைச் சுட்டுக.
பிள்ளைத்தமிழ்
சாதகத்தை முதலாக வையாது பிள்ளைக்கவியை முதலாகக் கொண்டு எண்ணுவதும் உண்டு. இதனைப் பிள்ளைப்பாட்டு எனவும் பிள்ளைத்தமிழ் எனவும் வழங்குவர்.
குழவி மருங்கினும் கிழவதாகும் என்ற தொல்காப்பியப் புறத்திணையியல் நூற்பாவே இதன் அடிப்படை என்பர்.
கண்ணனைக் குழந்தையாக எண்ணிப் பழவாறாகப் பாடிய பெரியாழ்வாரும், இராமனைக் குழந்தையாக எண்ணிப் பாடிய குலசேகராழ்வாரும் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள். பெரியாழ்வார் திருமொழியில் தாலப்பருவம் அம்புலிப் பருவம், செங்கீரை, சப்பாணி, தளர்நடை, அச்சோப் பருவம், புறம்புல்கள், பூச்சிகாட்டல், முலையுண்ணல், காதுகுத்தல், நீராட்டல், குழல்வாரக் காக்கையை வாவெனல், கோல் கொண்டு வா எனல், பூச்சூட்டல், காப்பிடல் முதலிய பிள்ளைத்தமிழ்ச் சாயற்பகுதிகள் உள. குலசேகராழ்வார் இராமனின் தாலப்பருவமும் கண்ணனின் வருகைப் பருவமும் பாடினார். நாச்சியார் திருமொழியில் சிற்றில் சிதைத்தல் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் சப்பாணிப் பருவம், வெண்ணையை உண்ட மாட்சி ஆகியன கூறப்பட்டுள்ளன.
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் இயற்றிய குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்தான் முதலில் தோன்றிய முழுமையான - தனித்த பிள்ளைத்தமிழ் நூல். இதுவரை 150-க்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள் தோன்றியுள்ளன. பாட்டியல் நூல்களில் பிள்ளைத்தமிழ் இலக்கணம் பற்றிய நூற்பாக்கள் 42 உள.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பத்து.
பெண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல் ஆகிய பத்து.
3ஆம் திங்கள் தொடங்கி 21ஆம் திங்கள் வரை பருவத்துக்கு 2 திங்களாகக் கொண்டு பிள்ளைத்தமிழ் பாடப்பெறும் என்பர். இக்காலவரையறை மாறுபடுதலும் உண்டு. பொதுவாக ஒரு பருவத்துக்குப் பத்துப்பாடல்கள் எனப் பத்துப் பருவத்துக்கும் சேர்த்து நூறு பாடல்கள் பிள்ளைத்தமிழில் இடம்பெறும்.
பிள்ளைப்பாட்டே தெள்ளிதின் கிளப்பின்
மூன்றுமுதலா மூவேழ் அளவும்
ஆன்ற திங்களின் அறைகுவர்நிலையே.
- பன்னிருபாட்டியல்
பத்து உறுப்பாய் ஒவ்வொன்று விருத்தம்
பப்பத்தாகப் பாடல் என்ப
- தொன்னூல் விளக்கம்.
சிலர் கடைசி மூன்று பருவங்கட்கும் முறையே 3, 5, 7 ஆம் ஆண்டுகள் உரியவை என்பர். பிள்ளைத்தமிழ்ப் பாடல் எண்ணிக்கை தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்ணூறும், அரசருக்கு எண்பதும், வைசியருக்கு எழுபதும், வேளாளருக்கு அறுபதும், ஆம் என்னும் பிரபந்த மரபியல் (3).
பிள்ளைத் தமிழுக்குரிய யாப்புவகை
பெரும்பலும் விருத்தமே. பிறவும் வரலாம்.
அகவல் விருத்தமும் கட்டளை ஒலியும்
கலியின் விருத்தமும் கவின்பெறு பாவே
- பன்னிரு பாட்டியல்
பிறவா யாக்கைப் பெரியோனாதலின் சிவனுக்குப் பிள்ளைத்தமிழ் பாடுவதில்லை. விநாயகர், முருகன், திருமால், உமை, அனுமான் எனத் தெய்வங்களின் மேல் பாடப்பட்டவை மிகுந்துள்ளன.
அம்பலவாணர் பிள்ளைத்தமிழ் என்பது ஆசிரியர் மேலது. சிவந்தெழுத்த பல்லவராயன் பிள்ளைத்தமிழ் புலவர் பற்றியது. இராசாசி பிள்ளைத்தமிழ் தலைவர் மேலது.
பிள்ளைத்தமிழ் நூல்களில் சிறந்தவை :
குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் ஆகியவை. காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு.
45. ஆண்பாற் பிள்ளைத் தமிழில் இடம் பெறுபவை
1. அம்புலி
2. சிறுதேர்
3. சப்பாணி
4. கழங்கு
கீழே தரப்பட்டுள்ள விடைதெரி குறிப்பிலிருந்து விடையைக் கண்டுபிடிக்கவும். அ. (1)ம், (2)ம் சரி
ஆ. (1)ம், (2)ம், (3)ம் சரி
இ. (1)ம், (3)ம், (4)ம் சரி
ஈ. (2)ம், (3)ம், (4)ம் சரி
46. பெரியாழ்வார் திருமொழியில் இடம்பெறும் பகுதிகள்
1. தாலப்பருவம்
2. காதுகுத்தல்
3. ஊசல்
4. பூச்சூட்டல்
கீழே தரப்பட்டுள்ள விடைதெரி குறிப்பிலிருந்து விடையைக் கண்டுபிடிக்கவும். அ. (1)ம், (4)ம் சரி
ஆ. (1)ம், (2)ம், (4)ம் சரி
இ. (1)ம், (2)ம், (3)ம் சரி
ஈ. (1)ம், (3)ம் சரி
47. உறுதிக்கூற்று : சிவனுக்குப் பிள்ளைத்தமிழ் பாடுவதில்லை.
காரணம் : அவன் பிறவா யாக்கைப் பெரியவன்.
அ. (உ), (கா) இரண்டும் சரியல்ல
ஆ. (உ) சரி, (கா) சரியன்று
இ. (உ) சரியன்று, (கா) சரி
ஈ. (உ) (கா) இரண்டும் சரி
48. பிள்ளைத்தமிழின் முதன் மூன்று பருவங்கள்
அ. காப்பு, தால், செங்கீரை
ஆ. தால், காப்பு, செங்கீரை
இ. காப்பு, செங்கீரை, தால்
ஈ. தால், செங்கீரை, காப்பு
49. பொருத்துக :
a. கண்ணன்
b. குலோத்துங்கன்
c. இராமன்
d. மீனாட்சியம்மை
1. ஒட்டக்கூத்தர்
2. குமரகுருபரர்
3. பெரியாழ்வார்
4. குலசேகரர்
சரியான விடையைத் தெரிவு செய்க அ. a - 4, b - 3, c - 2, d - 1
ஆ. a - 3, b - 1, c - 4, d - 2
இ. a - 3, b - 2, c - 1, d - 4
ஈ. a - 3, b - 2, c - 4, d - 1
50. பொருத்துக :
a. நாச்சியார் திருமொழி
b. பெரியாழ்வார்
c. திருமங்கையாழ்வார்
d. குலசேகராழ்வார்
1. வெண்ணெய் உண்ட மாட்சி
2. வருகைப்பருவம்
3. சிற்றில்சிதைத்தல்
4. அம்புலிப்பருவம்
அ. a - 2, b - 4, c - 1, d - 3
ஆ. a - 2, b - 3, c - 4, d - 1
இ. a - 3, b - 4, c - 1, d - 2
ஈ. a - 3, b - 2, c - 1, d - 4
ADSENSE HERE!
No comments:
Post a Comment