ADSENSE HERE!
மாநில அரசின் கீழுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களை நியமிப்பதற்கான செட் தேர்வு, வரும் அக்டோபர் 7ம்
தேதி, மாநிலமெங்கும் 10 மையங்களில் நடக்கிறது. புதுச்சேரி மாநில உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் சேரவும் இத்தகுதி தேர்வு செல்லும். தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்களை பாரதியார் பல்கலைக்கழகம் வரவேற்கிறது.
யு.ஜி.சி. அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 27 பாடப்பிரிவுகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தப் பாடப்பிரிவுகள், மானுடவியல், சமூகவியல் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளைச் சார்ந்தவை. முதுநிலைப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வில் பங்கேற்கலாம்.
ADSENSE HERE!
No comments:
Post a Comment