Breaking News

பி.எட். பட்ட படிப்பில் ஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் இணைகிறது

ADSENSE HERE!

இந்த கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பில், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் சேர்க்கப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜுலை மாதம் 12-ந் தேதி ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது. 63/4 லட்சம் ஆசிரியர்கள் எழுதிய இந்த தகுதித்தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்வுக்கு நேரம் போதவில்லை என்று தேர்வு எழுதிய அனைத்து ஆசிரியர்களும் புகார் தெரிவித்ததை அடுத்து, தற்போது தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதோடு, தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம், அவர்களுக்கு அக்டோபர் மாதம் 3-ந் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், பி.எட். மாணவ-மாணவிகளை ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தயார்படுத்தும் வண்ணம் நடப்பு கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பில், தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் சேர்க்கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன்,

’’தற்போது ஆசிரியர் வேலைக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. எனவே, மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டத்தை பி.எட். படிப்பில் நடப்பு கல்வி ஆண்டில் இருந்து சேர்க்க உள்ளோம்.

ஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திற்கான தொழில்பாடம் என்று இது அழைக்கப்படும். இதன்மூலம் தகுதித்தேர்வில் தேர்ச்சி விகிதம் கணிசமான அளவு அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரையில் தற்போது சென்னை லேடி வெலிங்டன் கல்வியில் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. பல்கலைக் கழகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டில் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தைப் பார்த்து வருகிறோம். இடம் கிடைக்கப் பெற்றதும் கட்டிடப்பணிகள் தொடங்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் 658 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு (2012-2013) முதல் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பி.எட். மாணவர் சேர்க்கை அரசு மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பொது கலந் தாய்வு மூலமாக நடத்தப்படுகிறது. தனியார் கல்லூரிகள் விரும்பினால் அரசு ஒதுக்கீட்டிற்கு இடங்களை வழங்கும். எனினும், பெரும்பாலான கல்லூரிகள் தாங்களாகவே இடங்களை நிரப்பிக்கொள்கின்றன.

தனியார் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கு அரசு கல்விக்கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதன்படி, பி.எட். படிப்புக்கு ரூ.41,500-ம், தேசிய தர மதிப்பீட்டுக்குழு (நாக்) அங்கீகாரம் பெற்றிருந்தால் ரூ.46,500-ம் எம்.எட். படிப்புக்கு ரூ.47,500-ம் வசூலித்துக்கொள்ளலாம். அரசு நிர்ணயித்த இந்த கல்விக்கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரத்தையும் பல்கலைக்கழக இணைப்பு அனுமதியையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதும் 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஆசிரியர்கள் தேவை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில் சிபல் கூறி இருக்கிறார்.

அதேபோல், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கு புதிதாக 800 பல்கலைக்கழகங்களும், 5 ஆயிரம் கல்லூரிகளும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். எனவே, ஆசிரியர் பயிற்சி படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment