ADSENSE HERE!
தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. காலையில் முதல் தாளுக்கும், மதியம் இரண்டாம் தாளுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இத்தேர்வுகளுக்கான முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாளை 2,88,588 பேரும், இரண்டாம் தாளை 3,88,175 பேரும் எழுதினர். இத்தேர்வில் தலா 150 கேள்விகளுக்கு ஒன்றரை மணி நேரம் வழங்கப்பட்டிருந்தது.
மொத்தமுள்ள மதிப்பெண்ணில் 60% மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ADSENSE HERE!
No comments:
Post a Comment