Breaking News

பி.எட் - எம்.எட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

ADSENSE HERE!

பி.எட்., - எம்.எட்., தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப் படுகின்றன.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
ஜெயகுமார் வெளியிட்ட அறிவிப்பு:பல்கலையின் இணைப்புப் பெற்ற, 649 கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., - எம்.எட்., தேர்வு முடிவுகள், 11ம் தேதி (இன்று), பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்படும். மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிகத் தேர்ச்சிச் சான்றிதழ், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில், இம்மாத இறுதி வாரத்தில் வழங்கப்படும்.மறுகூட்டல், மறு மதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் தேர்வர்கள், அதற்குரிய தனித்தனி விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணங்களை செலுத்தி, 24ம் தேதிக்குள், "தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, சென்னை-5' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை, பல்கலை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment