Breaking News

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 13

ADSENSE HERE!

சொற்கள்:
1. சொற்கள் நான்கு வகைப்படும் ; இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்
2. மற்றவர்களுக்கும் பொருள் புரியும் சொல் இயற்சொல் எனப்படும் எ.டு. தீ, காடு, மரம்.
3. பெயர் இயற்சொல், வினை இயற்சொல் என இயற்சொல் இரண்டு வகைப்படும்.
4. காற்று, நிலவு, ஞாயிறு, பலகை - பெயர் இயற்சொற்கள்
5. படித்தான், தூங்கினான், வந்தான் - வினை இயற்சொற்கள்
6. பொருள் தெரியாத ஆனால், கற்றவர்களுக்கு மட்டுமே புரியும் சொற்கள் - திரி சொல் எனப்படும்.
7. பீலி, உகிர், ஆழி - திரி சொல்லிற்கான எடுத்துக்காட்டுகள். (பீலி -மயில் தோகை, உகிர் - நகம், ஆழி - கடல், சக்கரம்).
8. பெயர் திரிசொல், வினைத் திரிசொல் என திரிசொல் இரண்டு வகைப்படும்.
9. எயிறு, வேய், மடி, நல்குரவு - பெயர்த் திரிசொல் (எயிறு - பல், வேய் - மூங்கில், மடி - சோம்பல், நல்குரவு - வறுமை).
10. வினவினான், விளித்தான், நோக்கினார் - வினை திரிசொல் (வினவினான் - கேட்டான், விளித்தான் - அழைத்தான், நோக்கினார் - பார்த்தார்).
11. தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிறபகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு; கேணி, பெற்றம் (கேணி - கிணறு, பெற்றம் -பசு).
ADSENSE HERE!

No comments:

Post a Comment