ADSENSE HERE!
தொகை நிலைத்தொடர்கள்:
1. வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை,
அன்மொழித் தொகை என தொகை நிலைத்தொடர்கள் ஆறு வகைப்படும்.
2. பெயர்ப்பொருளை வேறுபடுத்திக் காட்டும் உறுப்புக்கு வேற்றுமை உருபு எனப்பெயர்.
3. வேற்றுமைகள் எட்டு வகைப்படும். இதில் முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை. மற்ற ஆறுக்கும் உருபுகள் உண்டு. அவை ஐ,ஆல், கு, இன், அது, கண்.
4. இரு சொற்களுக்கிடையே இவ்வேற்றுமை உருபு மறைந்து வருவதை வேற்றுமைத் தொகை என்கிறோம்.
5. எடுத்துக்காட்டுகள்: பால் பருகினான் - இரண்டாம் வேற்றுமைத்தொகை (பால் +ஐ+ பருகினான் - இங்கு ஐ என்னும் உருபு மறைந்துள்ளது).
6. தலை வணங்கினான் - மூன்றாம் வேற்றுமைத் தொகை (தலை +ஆல்+ வணங்கினான்).
7. வேலன் மகன் - நான்காம் வேற்றுமைத் தொகை (வேலன் +கு+மகன்).
ADSENSE HERE!
No comments:
Post a Comment