Breaking News

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 15

ADSENSE HERE!

தொகா நிலைத்தொடர்கள்:
1. எழுவாய்த்தொடர், விளித்தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர்,
வேற்றுமை தொகாநிலைத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர் என தொகா நிலைத்தொடர்கள் ஒன்பது வகைப்படும்.
2. கபிலன் வந்தான் - இதில் கபிலன் என்னும் எழுவாயைத் தொடர்ந்து வந்தான் என்னும் பயனிலை வந்துள்ளதால், இது எழுவாய்த்தொடர்.
3. கதிரவா வா - இது விளித்தொடர்
4. கண்டேன் சீதையை - வினைமுற்று முதலில் வந்து பெயரைத் தொடர்கிறது. அதனால், இது வினைமுற்றுத் தொடர்.
5. விழுந்த மரம் - விழுந்த என்னும் எச்சவினை மரம் என்னும் பெயர்ச்சொல்லோடு முடிவதால் இது பெயரெச்சத் தொடர்.
6. வந்து போனான் - வந்து என்னும் எச்சவினை போனான் என்னும் வினைமுற்றைக்கொண்டு முடிந்துள்ளதால், இது வினையெச்சத் தொடர்.
7. வீட்டைக் கட்டினான் - இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்துள்ளதால், இது வேற்றுமைத் தொகா நிலைத்தொடர் எனப்படும்.
8. மற்றொன்று - மற்று + ஒன்று. மற்று என்னும் இடைச்சொல்லை அடுத்து ஒன்று என்னும் சொல் தொடர்ந்து வந்ததால் அது இடைச்சொற்றொடர் எனப்படும்.
9. மாமுனிவர் - இத்தொடரில் மா என்பது உரிச்சொல். இதைத் தொடர்ந்து முனிவர் என்னும் சொல் வந்துள்ளதால் இது உரிச்சொற்றொடர்.
10. வாழ்க வாழ்க வாழ்க - ஒரே சொல் இங்கு பலமுறை அடுக்கி வந்துள்ளதால் இது அடுக்குத்தொடர்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment