Breaking News

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 16

ADSENSE HERE!

இரண்டாம் வேற்றுமை உருபு
1. இதனை செயப்படுபொருள் வேற்றுமை எனவும் வழங்குவர்.
2. ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய அறுவகைப் பொருள்களில் வரும்.
3. வளவன் பள்ளியைக் கட்டினான் - ஆக்கல்
4. சோழன் பகைவரை அழித்தான் - அழித்தல்
5. தேன்மொழி கோயிலை அடைந்தாள் - அடைதல்
6. குழகன் சினத்தை விடுத்தான் - நீத்தல்
7. கயல்விழி குயிலைப் போன்றவள் - ஒத்தல்
8. கண்ணன் செல்வத்தை உடையவன் - உடைமை
மூன்றாம் வேற்றுமை உருபுகள்
9. ஆல், ஆன், ஒடு, ஓடு என பல பொருள்களில் இது வரும்
10. ஆல், ஆன் உருப்புகள் கருவி கருத்தா ஆகிய இருபொருள்களிலும் வரும். கருவி முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.
11. நாரால் கயிறு திரித்தான் (முதற் கருவி காரியமாக மாறி அதுவாகவே இருப்பது) கையால் கயிறு திரித்தான்.
12. துணைக்கருவி (காரியம் செயல்படும்வரை துணையாக இருப்பது) இதேபோல் கருத்தாவும் இயற்றுதல், கருத்தா, ஏவுதல் கருத்தா என இருவகைப்படும்.
13. கோயில் அரசனால் கட்டப்பட்டது என்பது ஏவுதல் கருத்தா (தான் செய்யாமல் பிறரைச் செய்ய வைப்பது).
ADSENSE HERE!

No comments:

Post a Comment