Breaking News

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 17

ADSENSE HERE!

நான்காம் வேற்றுமை உருபுகள்
1. கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.
2. புலவர்க்குப் பரிசு கொடுத்தார் - கொடை
3. நோய்க்குப் பகை மருந்து - பகை
4. பாரிக்கு நண்பர் கபிலர் - நட்பு
5. வீட்டுக்கு ஒரு பிள்ளை - தகுதி
6. வளையலுக்குப் பொன் - அதுவாதல்
7. கூலிக்கு வேலை - பொருட்டு
8. அனிதாவுக்கு மகன் அன்பரசு - முறை
9. திருத்தணிக்கு வடக்கு வேங்கடம் - எல்லை
ஐந்தாம் வேற்றுமை உருபு
10. இல், இன், இவை தம்மை ஏற்ற பெயர்ப்பொருளை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப் பொருள்களாக வேறுபடுத்தும்.
11. தலையின் இழந்த மயிர் - நீங்கல்
12. பாலின் நிறம் கொக்கு - ஒப்பு
13. சென்னையில் மேற்கு வேலூர் - எல்லை
14. அறிவில் மிக்கவர் ஔவை - ஏது
15. இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பன ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள் ஆகும்.
16. வேலன் ஊரிலிருந்து வந்தான் - இருந்து
17. கயல்விழி என்னைவிடப் பெரியவள் - விட
18. தமிழைக்காட்டிலும் சுவையான மொழி உண்டா? - காட்டிலும்
ADSENSE HERE!

No comments:

Post a Comment