ADSENSE HERE!
ஆறாம் வேற்றுமை உருபு:
1. அது, ஆது என்பன ஒருமைக்கும், அ என்பது பன்மைக்கும் வரும். இவ்வுருபுகள் கிழமைப் (உரிமை)
பொருளில் வரும்.
2. எடுத்துக்காட்டுகள்: எனது வீடு, எனது நூல், தை, மாசி எனத் தமிழ் மாதங்கள் பன்னிரெண்டு.
3. ஆறாம் வேற்றுமைக்கு ‘உடை’ய என்பது சொல்லுருபாக வரும்.
4. எடுத்துக்காட்டுகள்: என்னுடைய வீடு, நண்பனுடைய சட்டை.
ஏழாம் வேற்றுமை உருபுகள்:
5. கண், கால், மேல், கீழே, இடம், இல்.
6. மணியில் ஒலி - இல்
7. வீட்டின்கண் பூனை - கண்
8. அவனுக்கு என் மேல் வெறுப்பு - மேல்
9. பெட்டியில் பணம் உள்ளது - இல்
எட்டாம் வேற்றுமை உருபு:
10. விளிவேற்றுமை என்பது எட்டாம் வேற்றுமை எனப்படும்.
11. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்க இவ்வேற்றுமை பயன்படுகிறது. இதனை விளி வேற்றுமை என வழங்குவர். எடுத்துக்காட்டு; கண்ணா வா!, கிளியே பேசு!
12. திருக்குறளுக்கு வேறு பெயர்கள் - வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யாமொழி, தெய்வ நூல்.
13. திருக்குறளை லத்தீனில் எழுதியவர் - வீரமா முனிவர்.
14. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்
15. திருக்குறளின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் நூல் - திருவள்ளுவமாலை.
16. ஜி.யு.போப்
17. முழு பெயர் - ஜியார்ஜ் யுக்ளோ போப்
18. பெற்றோர் பெயர் - ஜான் போப், கெதரின் யளாபக்
19. தமிழ் மொழியைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிய ஏடுகள் - இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு.
20. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு - 1886
21. திருவாசகத்தின் பெருமையை ஆங்கிலத்தில் வெளியிட்ட ஆண்டு - 1900
ADSENSE HERE!
No comments:
Post a Comment