ADSENSE HERE!
இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு:
வேலு நாச்சியார்:
1. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி.
2. பெற்றோர் - செல்லமுத்து சேதுபதி, சக்கந்தி முத்தாத்தாள்
3. பிறப்பு - கி.பி.1730
கடலூர் அஞ்சலையம்மாள்:
4. கடலூரில் 1890ஆம் ஆண்டு முதுநகரில் பிறந்தார்.
5. 1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதுதான் அஞ்சலையம்மாள் தனது பொதுவாழ்க்கையை தொடங்கினார்.
6. நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக்காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களில் கலந்துகொண்டவர்.
7. ‘தென்னாட்டின் ஜான்சிராணி’ என்று காந்தியடிகளால் புகழப் பெற்றவர்.
அம்புஜத்தம்மாள்:
8. 1899ஆம் ஆண்டு பிறந்தவர். வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட வசதியான வீட்டுப் பெண்.
9. வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக்கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
10. தந்தையின் பெயரோடு, காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் சீனிவாச காந்தி நிலையம் என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தார்.
ADSENSE HERE!
No comments:
Post a Comment