ADSENSE HERE!
வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 1,870 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, செப்., 30ல் போட்டித் தேர்வு
நடக்கிறது. இதற்கு, 10 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில், இந்த தேர்வுக்குத் தான், அதிகபட்ச தேர்வர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு, 534 பேர் என்ற அளவில், கடும் போட்டி எழுந்துள்ளது. "தேர்வுக்கு விண்ணப்பிக்க, கடைசி நாளான, 10ம் தேதிக்குள் விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாதவர்கள், 14ம் தேதிக்குள் செலுத்தலாம்" என, தேர்வாணையம் தெரிவித்திருந்தது. கடைசி நாளில் விண்ணப்பித்தவர்கள் அனைவரும், கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கும் வகையில், 18ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, தேர்வாணையம் அறிவித்துள்ளது.
ADSENSE HERE!
No comments:
Post a Comment