ADSENSE HERE!
தமிழகம் முழுவதும் உள்ள 1870 கிராம நிர்வாக அலுவலர் காலி இடங்களுக்கு போட்டி தேர்வை டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. வி.ஏ.ஓ. பதவிக்கான இந்த தேர்வுக்கு 10-ம்
வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதுமானது. ஆனால் இந்த தேர்வுக்கு இளநிலை பட்டதாரிகளும், முதுநிலை பட்டதாரிகளும், என்ஜினீயரிங் படித்தவர்களும் அதிக அளவில் விண்ணப்பித்தனர்.
9 லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்ததால் தேர்வு மையங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வி.ஏ.ஓ. போட்டித் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 3 மணி நேரம் தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 3483 மையங்களில் தேர்வு நடக்கிறது.
தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் வெளியாகாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை டி.என்.பி.எஸ்.சி. எடுத்துள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. மேலும் அனைத்து தேர்வு கூடங்களும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.
பிரச்சினைக்குரிய தேர்வு மையங்களில் நேரிடையாக வெப் கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. எந்தவித தவறுக்கும் இடம் அளிக்காமல் தேர்வை நடத்த பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அதிகாரிகள், கோட்டாட்சியர்கள் தலைமையில் இவர்கள் தேர்வு மையத்திற்கு சென்று கண்காணிப்பார்கள்.
தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு வேறு எந்த தேர்வோ, நேர்காணலோ கிடையாது. நேரிடையாக பணியில் நியமிக்கப்படுவார்கள். சென்னையில் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளில் வி.ஏ.ஓ. தேர்வு நடக்கிறது. டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.
ADSENSE HERE!
கட் ஆப் மார்க் வைத்து விரட்டி விடுவார்கள்.
ReplyDelete