Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 162

ADSENSE HERE!

*  எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)
*  ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

*  வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4

*  உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

*  ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.

*  காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு

*  அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு

*  காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.

*  குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0

*  சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்

*  ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்

* தாவர செல்லில் இல்லாத உறுப்பு - சென்ட்ரோசோம்

* தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.

* கோலன்கைமா திசுவில் காணப்படுவது - பெக்டின்

* தாவர உடலம் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.

* புளோயம் ஒரு கூட்டு திசு

* வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.

* தாவர உடலத்தின் புறத்தோல் செல்களின் மீது காணப்படும் மெழுகுப் பொருள் - கியுட்டிக்கிள்

* நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.

* பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.

* கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.

* சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு - புளோயம்

* மியுஸா பாரடிசியாகா என்பது வாழையின் தாவரவியல் பெயர்

 * கரும்பைத் தாக்கும் பூச்சிகளின் முதன்மை யானது - கரும்பு கரையான் பூச்சி
ADSENSE HERE!

No comments:

Post a Comment