Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 163

ADSENSE HERE!

* வாழையைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும் பூச்சி மருந்து - கார்போ பியுரன்
* மாலத்தீயான் என்பது - பூச்சிக்கொல்லி

* ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல் மற்றும் நீராவிப் போக்கு ஆகிய மூன்று செயல்களையும் நிகழ்த்தும் தாவர உறுப்பு - இலை

* தொற்றுத் தாவரத்திற்கு உதாரணம் - வாண்டா

* கூட்டுயிர்த் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - லைக்கன்கள்

* கோடைக்காலத்தில் நீராவிப் போக்கைத் தடுக்க ிளைகளை உதிர்த்து விடும் தாவரம் - சவுக்கு

* இலைத் தொழில் தண்டு - சப்பாத்தி

* மார்சீலியா என்பது -நீர்த்தாவரம்

* தாவர செல்லின் செல்சுவரில் காணப்படுவது - செல்லுலோஸ்

* ஸ்கிளிரென்கைமா செல்களின் சுவரில் லிக்னின் காணப்பபடுகிறது.

* வரித்தசை நார்களின் மேலுறை - சார்கோலெம்மா எனப்படும்.

* தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளும் உயிரிகள் - உற்பத்தியாளர்கள் எனப்படும்.

* அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம் - சூரியன்

* உயற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை - தாவரங்கள்

* நரம்பு திசுவின் உடல் பகுதி - சைட்டான் எனப்படும்.

* கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வன விலங்கு பாதுகாப்பகம் - நீலகிரி வன விலங்கு பாதுகாப்பகம்.

* நிலம், நீர், காற்று மற்றும் உயிரிகளின் தொகுப்பு உயிரிக்கோளம் எனப்படும்.

* தொழிற்சாலை திண்மக் கழிவுகளை காற்றில்லா சூழலில் சிதைத்தல் முறையில் சிதைக்கலாம்.

* மரக்கட்டையின் கருநிற மையப் பகுதி - வன்கட்டை எனப்படும்.

* மண்ணிலுள்ள நூண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது - மண்புழு உரம்

* இலவங்க எண்ணெயிலுள்ள வேதிப்பொருள் - சின்னமால்டிஹைடு

* வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது - அனிராய்டு பாரமானி

* எலிடோரியா கார்டமோமம் என்ற தாவரம் - ஏலக்காய்

* சிஸிஜியம் அரோமேட்டிகம் என்ற தாவரத்தின் உலர்ந்த மலர் மொட்டு - கிராம்பு
ADSENSE HERE!

No comments:

Post a Comment