Breaking News

VAO தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு

ADSENSE HERE!

வரும், 30ம் தேதி நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது. வி.ஏ.ஓ., தேர்வுக்கு, ஜூலை 9ம் தேதி முதல், ஆகஸ்ட் 10ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளத்தில், தேர்வர்கள் பதிவு செய்தனர். பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி நிலையிலான தேர்வு என்பதால், போட்டி போட்டுக் கொண்டு, தினமும் 50 ஆயிரம், 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.


இதற்கான போட்டித் தேர்வு வரும் 30ம் தேதி, மாநிலம் முழுவதும் 4,000த்திற்கும் மேற்பட்ட மையங்களில் நடக்கிறது. மொத்தமுள்ள ஆயிரத்து 870 பணியிடங்களுக்கு, 9.55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் காரணமாக ஒரு இடத்திற்கு, 570 பேர் போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ADSENSE HERE!

No comments:

Post a Comment