Breaking News

ஆசிரியர் தகுதித்தேர்வு அதிகார பூர்வ கீ ஆன்சர் 10 நாளில் வெளியிடப்படும்

ADSENSE HERE!

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான `கீ ஆன்சர்' 10 நாளில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறினார்.


அரசு பள்ளிக்கூடங்களில் 23 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்காக நேற்று முன்தினம் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு காலையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு பிற்பகலும் நடந்தன. 61/2 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். கிட்டத்தட்ட 85 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டதால் அனைத்து கேள்விகளையும் நன்றாக படித்து பதில் அளிக்க முடிந்தது என்றும், முந்தைய தேர்வுடன் ஒப்பிடும்போது இந்த தேர்வு எளிதாக இருந்தது என்றும் தேர்வு எழுதிய பெரும்பாலான ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

எனினும் அறிவியல் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாகவும் ஒருசாரார் கூறினார்கள். இதேபோல், கலைப்பிரிவு (மொழி, சமூக அறிவியல் பிரிவு) ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் தமிழ் பாடமும், உளவியல் பாடமும் கொஞ்சம் கடினம்தான் என்ற கருத்து நிலவியது.

பொதுவாக போட்டித்தேர்வு எழுதுவோர் தேர்வு முடிந்ததும் தங்களுக்கு எத்தனை மதிப்பெண் கிடைக்கும்? என்று கணக்குப்போட்டுப் பார்ப்பது வழக்கம். அதே நிலையில்தான், தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள், தேர்வில் பாஸ் மார்க் (90 மதிப்பெண்) வாங்கிவிடுவோமா? என்றும், ஓரளவு நன்றாக தேர்வு எழுதியவர்கள் எத்தனை மார்க் வருமோ? என்றும் மண்டையைப் போட்டு குழம்பிக்கொண்டிருக்கிறார்கள். கேள்விகளுக்கு அதிகாரபூர்வமான சரியான விடை தெரியாததே அவர்களின் குழப்பத்திற்கு காரணம்.

தகுதித்தேர்வுக்கான `கீ ஆன்சர்' வெளியிட உள்ளதாக பல்வேறு தனியார் பயிற்சி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இருந்தபோதும் ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரபூர்வமாக வெளியிடும் `கீ ஆன்சர்'-ஐ மட்டுமே விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால் தேர்வு எழுதிய அனைவரும் அதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தகுதித்தேர்வுக்கான `கீ ஆன்சர்' 10 நாளில் வெளியிடப்படும் என்றும், தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அதனை தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார். கடந்த தகுதித்தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த தடவை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை தேர்ச்சி விகிதம் முன்பு போல மிகவும் குறைவாக இருந்தால் தேர்ச்சி சதவீத மதிப்பெண் குறைப்பது பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கக்கூடும். மத்திய அரசின் இலவச, கட்டாய கல்விச்சட்டத்தின்படிதான் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

அந்த சட்டத்தில், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு (பி.சி., எம்.சி.பி., எஸ்.சி., எஸ்.டி.) தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதம் வரை குறைக்கலாம் என்று தெளிவாக கூறப்பட்டு உள்ளது. அதன்படி, 60 சதவீத மதிப்பெண் என்றிருப்பதை இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 55 சதவீதம் (82.5 மார்க்) வரை குறைக்க முடியும்.

இதற்கிடையே, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பணிஅனுபவம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) ஆகியவற்றுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பிளஸ்-2 தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 மதிப்பெண்ணை முழுவதுமாக அல்லது 5 மதிப்பெண்ணை பணிஅனுபவத்திற்கும், சீனியாரிட்டிக்கும் ஒதுக்க வேண்டும் என்றும் அரசு வேலைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ADSENSE HERE!

1 comment:

  1. நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் C series வினா எண் 149 ல் தமிழில் புவியின் மிகப்பரந்த சுூ ழ்தொகுதி என உள்ளது அதற்கு பதில் உயிர்க்கோளம் என்பது ஆகும். ஆனால் ஆங்கிலத்தில் The broadcasting earth ecosystem is என உள்ளது அதற்கு பதில் வாயுக்கோளம் atmosphere ஆகும் என‌வே அந்த வினாவிற்கு இரண்டு பதில்களுக்கும் மதிப்பெண்களை அளிக்கும்படி வேண்டுகிறோம்

    ReplyDelete