Breaking News

மனிதர்களை ஒத்த குரலெழுப்பும் திமிங்கிலம்

ADSENSE HERE!

அமெரிக்காவில் திமிங்கிலங்கள் பற்றி ஆராய்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
அவர்கள் பெலுகா வகை திமிலங்கள் மனிதர்களைப் போன்று சப்தமிடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மனிதர்களின் குரல்வளையைப் போன்று அதன் அமைப்புகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். பொதுவாக டால்பின் வகை மீன்களை மனிதர்களைப் போன்று பழக்கப்படுத்தி மிமிக்ரி செய்யப் பயன்படுத்துவது உண்டு.

ஆனால் என்.ஓ.சி. எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த திமிங்கிலம் வாய் மூடிய நிலையில் மெதுவாக மனிதர்களைப் போன்று சப்தமிடுவதாக கூறியுள்ளனர். மனிதர்கள் சப்தத்தை ஞாபகம் வைத்து அதுபோன்று பேசுவதற்கு அவைகள் தனது குரல்வளை அமைப்புகளை மாற்றுவதாகவும் அவர்கள் கூறினர். பேசுவதற்கு ஏதுவான அமைப்பை பெற்றுள்ள இந்த என்.ஓ.சி. திமிங்கிலம், மிமிக்ரி செய்யப்பழக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment