ADSENSE HERE!
மதர் தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்தின் சென்னை மையத்தில் புதிதாக 9 படிப்புகள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மணிமேகலை தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, மதர் தெரசா பெண்கள் பல்கலைக் கழகத்தின் சென்னை கல்வி இயக்ககத்தில், திறமை சார்ந்த சான்றிதழ்கள் படிப்புகள் 9 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டேலி, டெஸ்க்டாப் பப்ளிசிங், அடாப் போட்டோஷாப், ஜூவல்லரி தயாரிப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன், ஹார்டுவேர் மற்றும் மெய்ன்டனன்ஸ், சுயஉதவிக்குழு மேலாண்மை, ஜூவல்லரி டிசைனிங், தொழில்முனைவோர் மேம்பாடு உள்ளிட்டவைகள் அதில் அடங்கும். இவையனைத்தும் மூன்று மாதப் படிப்புகள். இவற்றின் கட்டணம் ரூ. 1500, ரூ. 5000, ரூ. 10,000 என பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு 10 மற்றும் 12ம் வகுப்புகள் கல்வித் தகுதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் சென்னை மையத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி நவ. 31. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இதற்கான வகுப்புகள் தொடங்கும் என்றார்.
ADSENSE HERE!
No comments:
Post a Comment