Breaking News

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 251

ADSENSE HERE!

1. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச்
செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர்

அ. மார்ஷல் டாப்ளர்
ஆ. ஸ்டீபன் டாப்ளர்
இ. ஐசக் டாப்ளர்
ஈ. கிறிஸ்டியன் டாப்ளர்
2. ஒலிப்பதிவு செய்யும் ஒலி நாடாவில் உள்ளது
அ. இரும்பு ஆக்ஸைடு
ஆ. குரோமியம் டை ஆக்ஸைடு
இ. இரண்டும் இருக்கும்
ஈ. மேற்சொன்ன இரண்டில் ஒன்று
3. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய

அ. 150 கி.மீ
ஆ. 200 கி.மீ
இ. 250 கி.மீ
ஈ. 300 கி.மீ
4. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்

அ. காலங்களின் விதி
ஆ. பரப்புகளின் விதி
இ. சுற்றுப்பாதைகளின் விதி
ஈ. தொலைவுகளின் விதி
5. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும்

அ. உட்கவரும்
ஆ. எதிரொளிக்கும்
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு

6. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை

அ. 100o C
ஆ. 110o C
இ. 120o C
ஈ. 130o C
7. ஒரு மின் விளக்கின் ஆயுள்

அ. 1,000 மணிகள்
ஆ. 1,500 மணிகள்
இ. 2,000 மணிகள்
ஈ. 2,500 மணிகள்
8. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம்

அ. வலக்கை பெருவிரல் விதி
ஆ. மின்காந்த தூண்டல்
இ. காந்த தூண்டல்
ஈ. இடக்கை விதி
9. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு
அ. ஆவியாதல்
ஆ. உருகுதல்
இ. உறைதல்
ஈ. பதங்கமாதல்
10. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும்
அ. திரவத்தின் நடுப்பகுதியில்
ஆ. திரவத்தின் அடிப்பகுதியில்
இ. திரவத்தின் மேற்பரப்பில்
ஈ. திரவத்தின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியில்
11. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி
அ. வேகமாக பரவும்
ஆ. மெதுவாக பரவும்
இ. மாற்றம் இல்லை
ஈ. அனைத்தும் தவறு

விடை: 1. ஈ 2. ஈ 3. ஆ 4. இ 5. அ 6. இ 7. அ 8. ஆ 9. ஈ 10. இ 11. அ
ADSENSE HERE!

1 comment:

  1. புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete