Breaking News

அரசாங்க ஆசிரியர் பணிகளில் சேரவேண்டுமா?

ADSENSE HERE!

அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர இயலாத அரசு, தகுதியானவர்களுக்கு மட்டும் வேலை என்று ஒருபுறமும் பதவி மூப்பு (சீனியார்ட்டி)
அடிப்படையில் வேலை என்று மறுபுறமும் இருவித கொள்கையை உருவாக்கியது. தகுதியை சோதிக்க போட்டித்தேர்வுகளை நடத்தி வேலைவாய்ப்புகள் வழங்கப் பட்டது. பதவி மூப்பு தகவல்களை கவனிக்க வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அனுமதிக்கப்பட்டன. இதற்கிடையில் இரண்டாயிரம் ஆண்டு இந்திய சமூகத்தில் கல்வி பொருளாதாரங்களில் பின்தங்கிய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடும், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடும் வழங்கப்பட்டன. இது ஒரு பொருளாதார  நலம்சார்ந்த சமூக நீதிக்கான ஏற்பாடு. இதன் மூலம் அரசின் இடஒதுக்கீடு கொள்கைகள் வகுக்கப்பட்டன. இவைகளை தாங்கிய அரசாணைகள் வெளியிடப்பட்டன. 

இன்னொரு புறம் நாட்டிற்கு சேவைபுரிந்த முன்னாள் இராணுவவீரர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளி களுக்கும் சிறப்பு இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன.  அவைகளுக்காகவும் அரசாணைகள் வெளியிடப்பட்டன. மேலும் படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த அரசாணைகள், சட்டத்திட்டங்கள், நெறிமுறைகள் என வகுக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டன.  

இருப்பினும் நேர்மையற்றவர்களால் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளிலும் பல்வேறு முறைகேடுகளும் குளறுபடிகளும் தொடர்ந்தவாரே உள்ளன. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசு பணிகளில் நடக்கும் முறைகேடுகள் குறைவதில்லை. ஒரு சிலரின் திருட்டுத்தனத் தால் பல இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளில் சிக்கல்கள் எழுகின்றன. இந்த முறைகேடுகளை எதிர்த்து நீதிமன்றங்களுக்கு செல்கின்றனர். அவ்வாறு நீதிமன்றங் களுக்கு சென்றவர்கள் மட்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கை 2010-11 படி, மொத்த வழக்குகள் 1385. 

இந்தாண்டில் மட்டும் டி.என்.பி.எஸ்.சி மீது ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளும், டி.ஆர்.பி மீது முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளும் நீதிமன்றங்களில் உள்ளதாக தெரிகிறது.

அண்மையில் வேலைவாய்ப்புகளை வழங்கிய தமிழ்நாடு மருத்துவ பணியாளர் ஆணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் வாரியம் என மூன்று மீதும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டாலும் எதார்த்தமான உண்மைகளை சொல்வது நமது கடமை. தொடர்ந்து அரசின் நெறிமுறைகள், சட்டங்கள், அரசாணைகள் மீறப்பட்டு வருவதால் அதைசார்ந்த புரிதலை ஏற்படுத்த வேண்டும் என எண்ணினோம். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கிய அரசாணைகளை தொகுத்து வழங்கியுள்ளோம். இதை தெரிந்து கொள்வதன் மூலம் உங்களின் உரிமைகளை புரிந்து கொள்ள முடியும். உங்களுக்கான உரிமைகள் பறிக்கப்படும் போது உரிமை குரல் எழுப்புவீர்கள் என  நம்புகிறேன்.        

விகிதாச்சார முறை

அரசு பணிகளில் விகிதாச்சாரம் எப்படி  பின்பற்றப் படுகிறது என்பதை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை (நிலை) எண்.20 / 2008 தெரிவிக்கிறது. "வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பணி நியமனங்கள் மேற்கொள்ளும்போது, முன்னுரிமைப் பெற்றோர் மற்றும் முன்னுரிமையற்றோருக்கான 1: 4 என்ற விகிதாச்சாரத்தோடு உடன்கழிவாக (Simultaneous Application)   இனச் சுழற்சி முறையையும் பின்பற்ற வேண்டும் என்றும், மேற்சொன்ன 1: 4 என்ற விகிதா சாரத்தை பொதுப் போட்டி, ஆதிதிராவிடர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகிய இனங்களில் ஒவ்வொரு இனத்திலும் முதலிலிடம் முன்னுரிமை பெற்றோருக்கும் அதே இனத்தைச் சார்ந்த அடுத்துவரும் நான்கு இடங்கள் முன்னுரிமையற்றோருக்கும் ஒதுக்கீடு செய்யப்படல் வேண்டும். இதன்படி முன்னுரிமை பெற்றோருக்கும், முன்னுரிமையற்றோருக்கும் இடையேயான 1:4 என்ற விகிதாச்சாரம் இனவாரியாக கடைபிடிக்க வேண்டும்' என தெளிவுபட கூறுகிறது.      

திறந்தவெளிப் பல்கலைக்கழக பட்டங்கள்

இந்தியாவெங்கும் பல்கலைக்கழகங்கள் திறந்தவெளி வழி படிப்பை வழங்குகின்றன.  நாட்டிலேயே மிகப் பெரிய திறந்தவெளி பல்கலைக்கழகமான இந்திராகாந்தி தேசிய பல்கலைக்கழகம் இயங்குகிறது. ஆனால் இந்த வழியில் பெறப்படும் பட்டங்கள் அரசு பணிக்கு தகுதியுல்லை என முடிவுசெய்யப்பட்டுள்ளது. இது ஏற்புடையதாக எனக்கு தோன்றவில்லை. பள்ளி கல்வியில் இடைநிற்றலை ஊக்குவிக்கும் அரசு உயர் கல்வியில் தடை செய்வதேன். சிறை கைதிகள் அதிகளவில் படித்து பட்டம் பெறும் இக்காலத்தில் இந்த விதிமுறைகளில் மாற்றம் செய்யக் கூடாதா? குறைந்தபட்சம் நேரடித் தேர்வுகள் எழுத  திறந்தவெளி வழி பட்டதாரிகளை அனுமதிக்கலாமே. 

திறந்தவெளி படிப்பு பிரச்சினையானது 2004-இல் தான். அதற்கு முன்னர் தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை (நிலை) எண் 180/2000 படி, 

பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களால் திறந்தவெளி பல்கலைக்கழக முறை மூலம் வழங்கப்படும் பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை, அப்பல்கலைக்கழங்களால் முறையாக (Regular stream)  வழங்கப்படும் பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு ஆகியவற்றுக்குச் சமமாக கருதி பொதுப்பணிகளில் வேலைவாய்ப்பிற்கு அங்கீகாரம் அளித்து ஆணையிட்டது'. இந்த அரசாணையை பின்பற்றியே அரசு பணிகள் வழங்கப்பட்டு வந்தன. 

இதற்கிடையில் பி.எஸ்.என்.எல் நிறுவன தமிழ்நாடு வட்ட தலைமை பொது மேலாளர் திறந்தவெளியில் பெறப்படும் பட்டங்களை ஏற்பது சம்மந்தமாக தமிழக  அரசுக்கு கடிதம் ஒன்றை 17-4-2004 அன்று அனுப்பினார். இந்த சந்தேகத்தை மத்திய அரசுக்குதான் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் மாநில அரசுக்கு ஏன் அனுப்பினார் என புரியவில்லை. இந்த கடிதத்தை இணைக் கல்வி நிர்ணய பரிசீலிலிப்பு குழுவின் (டி.என்.பி.எஸ்.சி செயலர், டி.ஆர்.பி. தலைவர் மற்றும் கல்வித்துறை செயலர்கள்) ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இணைக் கல்வி நிர்ணய பரிசீலிலிப்பு குழுவின் பரிந்துரைப்படி, அரசாணை (நிலை) எண் 180/2000 திருத்தப்பட்டு அரசாணை (நிலை) எண்.107/ 2009 வெளியிடப்பட்டது. அதில், "பள்ளி இறுதித் தேர்வு (பத்தாம் வகுப்பு) மற்றும் பள்ளி' மேல்நிலைக் கல்வி தேர்வு (பிளஸ் டூ) ஆகியவைகளில் தேர்ச்சிப் பெற்றப்பின், திறந்தவெளிப் பல்கலைக்கழகங் களின் வழியாகப் பெறப்படும் பட்டயம்/பட்டம்/ முதுகலைப் பட்டங்களை மட்டும் பொதுபணிகளில் நியமனம் / பதவி உயர்வு பெற ஆணையிடப்படுகிறது.' இது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. என்றாலும் மத்திய மாநில அரசுகள் ஏன் பரிசீலிலிக்கக் கூடாது. இது தவறு என்றால் முனைவர் பட்டம் பெறாத, நிபுணத்துவம் இல்லாத, பட்டப்படிப்புக்கூட இல்லாதவர்கள் டாக்டர் பட்டம் பெறுவதும் ஏற்புடையதா?     

பின்னடைவு பணியிடங்கள்

தமிழக அரசு பல ஆண்டுகளாக எஸ்.சி/ எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்களுக்கான பல ஆயிரக்கணக்கான பின்னடைவு பணியிடங்கள் (Backlog Vacancies) நிரப்பப்படாமலேயே உள்ளன. இது அரசின் திட்டமிட்ட மெத்ததனமாகும். பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை எழுந்ததால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக இருந்த இரா.கிருத்துதாசு காந்தி ஐ.ஏ.எஸ் முயற்சியால் 1997- இல் பின்னடைவு பணியிடங்களை கண்காணிக்கும் குழு ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இதற்கென சிறப்பாக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அரசாணை (நிலை) எண்.156 /1997  வெளியிடப் பட்டது. அதில்,

"அரசுப் பணிகளில் உள்ள பல்வேறு பணியிடங்களில் விதிமுறைகளின்படி ஆதிதிராவிடர், பழங்குடியினர் பங்கேற்பு / நியமனம் 19% (18% + 1%) இருக்க வேண்டும். எனினும் பல்வேறு பணித் தொகுதிகளில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் பங்கேற்பு விதிக்கப்பட்ட விழுக்காட்டை எட்டவில்லை என்ற மன நிறைவற்ற நிலையை அரசு நன்கு உணர்ந்துள்ளது. ஆகவே, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கென்று ஒதுக்கப் பட்டுள்ள பணியிடங்கள் முறையாக நிரப்பப்படுவதைக் கண்காணிப்பதற்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு நிரப்பப்படாது உள்ள பணியிடங்களை ஒரு கால வரையறைக்குள் நிரப்பப் படுவதற்குரிய வழிமுறைகளைக் கண்காணிப்பதற்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அமைச்சர் தலைமையில் சட்டமன்றப் பேரவை உறுப்பினர் கொண்ட குழுவை அமைப்பது பற்றி அரசு ஆய்வு செய்து அவ்வாறே அமைக்க முடிவு செய்துள்ளது. 

அவ்வாறே கூறியவாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அமைச்சரைத் தலைவராகக் கொண்ட மாநில ஆதிதிராவிடர், பழங்குடியினர் இடஒதுக்கீட்டுக் கண்காணிப்புக் குழு ஒன்றினை அமைத்து அரசு ஆணையிடுகிறது. இந்த கண்காணிப்புக் குழு  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் செய்து வரும் நியமனத் தேர்வு களிலும் ஒதுக்கீட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது இக்குழு கூர்ந்தாய்வு செய்யும். அரசுச் செயலர்கள், பொது நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரிகள் / தலைவர்கள் / மேலாண்மை இயக்குநர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் ஆகியோருடன் தக்க ஆய்வு களை மேற்கொள்ளலாகும், கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த போது இந்த காணிப்புக்குழு பரிந்துரையின் பேரில் 2010-ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கான பின்னடைவு பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சியால் நேரடி தேர்வு நடத்தப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர். அ.தி.மு.க ஆட்சி வந்த பின்னர் இந்த காணிப்புக்குழு அமைக்கப்படவில்லை. அதேபோல ஆதிதிராவிடர் நலத் துறையும் எஸ்.சி/ எஸ்.டி பின்னடைவு பணியிடங்கள் குறித்த தகவல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே இருக்கிறது. 

மேலும் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மாற்றுத்திறனாளிகளுக்கு நிரப்பப்படாத பணியிடங்களை சிறப்பு போட்டித்தேர்வு நடத்தி நிரப்பப்படும் என்று 2009- இல் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அரசு துறைத் தலைவர் களிடமிருந்து காலிலியிடங்கள் பற்றிய தகவல்களை பெற்று சிறப்புத்தேர்வை நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டதன் பேரில், 2010-இல் மாற்றுத்திறனாளி களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 இளநிலை உதவியாளர் சிறப்பு போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.  அதேபோல மீண்டும் தமிழக முதல்வர், மாற்றுத் திறனாளிகள் ஆணையம் மனது வைத்தால் மீண்டும்  சிறப்புத்தேர்வை நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம்.

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் பல்லாண்டு காலமாக பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக் கென இடஒதுக்கீடு கொள்கை வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. இடஒதுக்கீட்டின் அளவு, பெரும்பான்மை மக்களின் தேவைக்கேற்ப படிப்படியாக உயர்ந்து தற்போது 69 விழுக்காடு இடஒதுக்கீடு நடை முறையில் உள்ளது. (இடஒதுக்கீடு சம்மந்தமான விரிவான கட்டுரையை இவ்விதழின் 18-ஆம் பக்கம் பார்க்கவும்) மண்டல் வழக்கு என்று அழைக்கப்படும் இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இச்சிக்கலை சமாளிக்க, தமிழகத்தில் சமூகத்தின் நலிலிவுற்ற பிரிவினருக்காக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வகைச் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க சட்டம் (தமிழ்நாடு சட்டம் 45/1994) இயற்றப்பட்டு அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாம் அட்டவணையில் இடம்பெறச் செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு சட்டம் 45/1994-ஐ எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 13.07.2010 அன்று உச்சநீதி மன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி ஓராண்டு காலக் கெடுவிற்குள், இடஒதுக்கீட்டின் அளவு மற்றும் வளமான பிரிவினர் நீக்கம் ஆகியன குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரையினை அரசு ஏற்றுக் கொண்டு கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கை மற்றும் மாநில அரசின் கீழ்வரும் பணிகளில் நியமனங்கள் ஆகியவற்றில் வளமான பிரிவினரை (பொதுப்பிரிவினர்) நீக்கம் செய்யாமல் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினை உறுதி செய்து அரசாணை 11.07.2011 அன்று வெளியிடப்பட்டது ஒர் வரலாற்று நிகழ்ச்சியாகும். 

இடஒதுக்கீடு தமிழகத்தில் மட்டுமே 50 சதவீதத்தை தாண்டி 69 சதவீதம் அமுலிலில் உள்ளது. 1993-ஆம் ஆண்டு மண்டல் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை தொடர்ந்து தமிழகத்தில் அமுலிலில் இருந்த 69 சதவீதத்திற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் 88 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப் பட்ட மக்கள் இருக்கும் காரணத்தால் 50 சதவீத இடஒதுக்கீடு போதாது என்று வாதாடப்பட்டது. பின்னர் இவ்வழக்கில் 2010-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் தமிழகத்தில் அமுலிலில் இருந்து வரும் 69 சதவீத இடஒதுக்கீடு மேலும் ஒரு வருடத்திற்கு மட்டும் தொடரலாம் என்றும் மாநில அரசு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு தேவை யான புள்ளி விபரங்களை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 69 சதவீத இடஒதுக்கீடு தேவைதான் என்று கண்டறியும் பட்சத்தில் மாநில அரசு 50 சதவீதத்திற்கு தடை பற்றிய மண்டல் வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள நிர்பந்த சூழ்நிலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வரையறையை தளர்த்திக் கொள்ள அனுமதித்துள்ள விதிவிலக்கினை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது.

ஆக இங்கே நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று தீர்ப்பு கூறியிருந்தாலும் ஒரு விதிவிலக்கையும் சேர்த்துத்தான் கூறியுள்ளது. இந்த விதிவிலக்கை பயன்படுத்தி தமிழகம் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கி வருகிறது.

2010-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட நியாயமான காரணங்களை தெரிவிக்க வேண்டும். திமுக அரசு இதற்காக நீதியரசர் எம்.எஸ். ஜனார்தனன் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தது. அக்கமிஷனும் 2011-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி அன்று தமிழக அரசிடம் தன் அறிக்கையை சமர்ப்பித்தது. அவ்வறிக்கையின் அடிப்படையில் ஜூலை 13-ஆம் தேதி அன்று கூடிய மாநில அமைச்சரவை 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்வது என்றும் கிரிமிலேயர் என்ற ஒன்று தமிழகத்திற்கு பொருந்தாது என்றும் திமுக அரசால் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்தது. 

இந்நிலையில் 2012 ஜூலை 14,  அன்று 12 மாணவ- மாணவியர்கள் சேர்ந்து 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பிறகும் 69 சதவீத இடஒதுக்கீட்டி னால் தங்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 50 சதவீத இடஒதுக்கீடு இருக்கும் பட்சத்தில் தங்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்றும் முறையிட்டனர். மேலும் 2010-ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாநில அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கை நகலை வெளியிடுமாறும் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி மாநில அரசு 12 வாரத்திற்குள் அறிக்கையை வெளியிடு மாறு உத்தரவு பிறப்பித்தார். பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது. இதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத்தில் 69 சதவீதத்திற்கெதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஆக பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு ஆபத்தில் உள்ளது. அதை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்குள்ளது. 

தலிலித் கிருத்துவர் இடஒதுக்கீடு

இந்திய நாட்டில் இந்துமதத்தில் இருக்கும் தலிலித்துகள் அட்டவணை வகுப்பினராகவும், கிருத்துவ மதத்தில் இருக்கும் தலிலித்துகள் பிற்படுத்தப்பட்டவராகவும் அரசு பிரித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை மைய அரசின் உள் விவகார அமைச்சகம் கடித எண்.35(நாள் 2.5.1975.) மற்றும் உச்ச நீதிமன்ற எஸ்.எல்.பி (ஊ) எண்.27571/95-ல் வழங்கிய தீர்ப்பு (நாள்.25.1.96) ஏற்று இதனையும் அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 

இதற்கென வெளியிடப்பட்ட அரசாணையில்,

ஆதிதிராவிடர் கிருத்துவ (Scheduled Caste Christians)  பெற்றோர்களுக்கு மகனாக / மகளாகப் பிறந்த, அதாவது பிறப்பால் கிருத்துவராக இருப்பினும் (Born Christians)  பின்னாளில் இந்து / சீக்கியம் / புத்த மதங்களுக்கு மாறும் (Conversion) நிலையிலும் மற்றும் பிறப்பால் இந்து / சீக்கியம் / புத்த மதங்களைச் சார்ந்து இதர மதங்களுக்கு மாறி பின்னர் மீண்டும் இந்து/சீக்கியம்/புத்த மதங்களைத் தழுவும் (Reconverts)  நிலையிலும், அவர்களை, அவர் சார்ந்த இனமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்களுக்கு ஆதிதிராவிடர் (Scheduled Caste) சாதிச்சான்று வழங்கலாம் எனவும், தற்போது, இந்து/ சீக்கிய / புத்த மதங்களைப் பின்பற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகளை வழங்கலாம் எனவும் ஆணையிடப்படுகிறது'.  

ஆக இந்துமதத்தை சாராத தலிலித்துகளுக்கு இடஒதுக்கீடு இல்லை என சட்டம் தெளிவாக கூறுகிறது. இது இந்துமத்தை பாதுகாப்பதற்கான ஏற்பாடு ஆகும். 

பொது அறிவு உலகம் , 2012 ஆகஸ்ட் மாத இதழில் பி.எஸ். கிருஷ்ணன் கட்டுரையில் முஸ்லீம் இடஒதுக்கீடு பற்றி விரிவாக வெளியிடப்பட்டிருந்தது. அது கிருத்துவ மத்தினருக்கும் பொருத்தமானதாகும். அந்த கட்டுரையில்,

"மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது என்ற கருத்து தவறான ஒன்றாகும்.  இவ்வொதுக்கீடு என்பது சிறுபான்மையினருக்கோ இஸ்லாமியருக்கோ  அன்று!  இது புதிய இடஒதுக்கீடும் அன்று!  மாறாகப் பிற்படுத்தப்பட்டோரில் சமூக நிலை, கல்வி நிலை ஆகியவற்றில் பின்தங்கியுள்ள குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு ஆகும். சிறுபான்மையினருள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 1993-ஆம் ஆண்டு வாக்கிலேயே மாநிலவாரியாக எடுக்கப்பட்டு மையப் பட்டியலிலிலில் சேர்க்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான  தேசிய ஆணையம் (என்.சி.பி.சி) மாநிலப் பட்டியல், மாநிலங்களின் மண்டலப் பட்டியல் ஆகியவற்றில் காணப்படும் பொதுத்தன்மையைக் கருத்தில் கொண்டு 1993, 2000 ஆகிய ஆண்டுகளில்  சில சட்ட அறிவுரைகளை வழங்கியது.  இவ்வறிவுரைகள், 1992-ஆம் ஆண்டு வந்த "மண்டல்' தீர்ப்பை அடிப் படையாகக் கொண்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுடன் அமைந்தன.  இவை அனைத்தும் இந்திய அரசியல் சட்டம் குறிப்பிடும் "சமூக நிலை, கல்வி நிலை ஆகிய வற்றில் பின்தங்கியுள்ள நிலை'யை மட்டுமே கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டன.  இவற்றில் மதங்கள் எவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை.

ஒரு மதத்தில் உள்ள எல்லாச் சமூகத்தினருக்கோ எல்லாச் சாதியினருக்கோ இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டால் மட்டும்தான் அதை மத அடிப்படையிலான இடஒதுக்கீடு என்று கருத முடியும். இஸ்லாமிய சாதிகள் என்றோ இஸ்லாமிய சமூகங்கள் என்றோ சொல்லப்படுகின்ற செய்யது, பதான், மொகல், அரபு, இரானி, கட்சி-மெமோன், போரா, கோஜா ஆகியனவும்; கிறித்தவ சாதிகள் (அல்லது சமூகங்கள்) ஆன சிரியன் கிறித்தவர்கள்,  சீக்கிய மதத்தைச் சேர்ந்த சாதிகளான ஜட்சிக், கத்ரி சிக் ஆகியனவும் மாநில வாரியான மையப்பட்டியலிலிலில் சேர்க்கப்படவில்லை.  ஏனென்றால் அவை இந்து மதத்தில் உள்ள சில சாதிகளைப் போலச் சமூக நிலையில் பின் தங்கிய நிலையில் இல்லை.  இவ்வாறு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிலில் உள்ள சாதிகளும் சமூகங்களும் மதத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என அறியலாம்.

தென் இந்தியத் திருச்சபையின் திருச்சி மண்டல ஆயர் முனைவர் துரைராஜ் தனது ஆய்வில், "1950-க்குப் பிறகு தலிலித் கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் கல்வி, வேலைவாய்ப்புகள் பறிபோயின. தனித் தொகுதிகளில் தேர்தலிலில் போட்டியிடும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. தங்கள் மீது இழைக்கப்படும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை (1989) பயன்படுத்தவே முடியாமல் போனது. குறிப்பாக, அரசியல் சட்டத்தின் விதிகள் 330, 332, 334, 335, 338, 341, 366(24) இன்படி, அனைத்துத் துறைகளிலும் பெற வேண்டிய உரிமைகள் எதிராளிக்குச் சேர்ந்தன. பவுத்த, சீக்கிய மதங்கள் அடிப்படையில் சாதியை தங்களின் சமயத் தளங்களில் அங்கீகரிப்பதில்லை; வழிபடுவதும் இல்லை. ஆனாலும், சீக்கியர்களும் (1956), பவுத்தர்களும் (1990) தாழ்த்தப்பட்டவர்களின் பட்டியலிலில் இடஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர். பல போராட்டங்களினாலும், நெருக்கடி யினாலும் இவை சாத்தியமாயின. அதுபோலவே, தலிலித் கிறித்துவர்களுக்கும் இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே கடந்த 55 ஆண்டுகால கோரிக்கை. மதம் மாறிய கிறித்துவ பழங்குடியினர்கூட,  அட்டவணை வகுப்பினர் பட்டியலிலில் (எஸ்.டி) சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, தலிலித் கிறித்துவர்களுக்கு மட்டும் இதை மறுப்பதில் எந்த நியாயமும் இல்லை. 

ஒட்டுமொத்த கிறித்துவர்களில் முக்கால்வாசி தலிலித்து களைப் பிடித்து வைத்திருக்கின்ற திருச்சபைகள், அவர்களின் இடஒதுக்கீட்டு உரிமைக்காகத் தொடர்ந்து வருத்தப்பட்டு பாரம் சுமக்கவில்லை. தஞ்சாவூர், திருச்சி, கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் கும்பல் கும்பலாகக் கிறித்துவத்தைத் தழுவிய அருந்ததியர்கள், ஆதி திராவிடர்கள் கிறித்துவத்தின் எந்த நலனையும் அனுபவிக்க முடியாமல் மீண்டும் இந்து மதத்திற்கும் போக முடியாமல் சிக்கித் தவிக்கும் பல தலைமுறையினரைப் பற்றி, திருச்சபைகள் கவலைப்பட்டதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். ஆக இடஒதுக்கீடு என்பது மக்களின் சமூக பொருளாதாரத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட ஒன்று. அதை மதத்தோடு தொடர்பு படுத்துவது சமூகநீதிக்கு எதிரானதும் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானதுமாகும். இந்து மதத்தில் இருந்தால் இடஒதுக்கீடு இல்லையென்றால் இடஒதுக்கீடு இல்லை என்றால், இந்தியா மத சார்பற்ற நாடு என்பது கேள்விகுறியாகி விடுகிறது. 

சிறப்பு ஒதுக்கீடுகள்

பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை (நிலை) எண் 188/1976 இல், "முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு வேலைவாய்ப்பகம் மூலம் பரிந்துரைக்கப் பட்டு, பணி நியமனம் செய்யப்படும் பதவிகளில், முன்னுரிமை வழங்கும் பொருட்டு, முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து ஆணைகள் வெளியிடப்பட்டன. மேற் சொன்னவாறு முன்னுரிமை முறை அளிக்கப்படுவதால், அரசின் இடஒதுக்கீடுக் கொள்கையை, இம்முன்னுரிமை முறை பாதிக்கிறது என்பதாலும், இதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது (இப்போது அதிகளவிலான குற்றச்சாட்டுகள் இந்த மாதிரிதான் எழுகின்றன) என்பதாலும்,  ஆட்தேர்வு செய்யும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறை ஆகியவற்றை கலந்தாலோசித்து முன்னுரிமை முறையை முற்றிலும் மறு ஆய்வு செய்யப்படலாம் என்றும் இம்முன்னுரிமை முறை 1976-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டதாலும், மேற்படி பிரிவினருக்கு நியாயமான இடஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டது. பின்னர், இதன் பயன்பாடு அற்றுப்போய் விட்டதாலும், இடஒதுக்கீடு கொள்கையுடன் சேர்த்து முன்னுரிமை முறையை இனி பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தனது கடிதங்களில் தெரிவித்து அரசின் தெளிவுரையை கோரியிருந்தார். இந்நிலையில், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் ஆதரவற்ற சூழ்நிலையில் இருப்பதாலும் அவர்களின் சமூக, பொருளாதார நிலை மோசமாக இருப்பதாலும், அவர்களுடைய பொருளாதார நிலைமையை மேம்படுத்தும் பொறுப்பு அரசுக்கு இருப்பதாலும் வேலைவாய்ப்பில் அரசாங்கம் மூலம் ஆட்தேர்வு செய்வதில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட முன்னுரிமை முறை இவர்களுக்கு தொடர்ந்து இருக்கலாம்  என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது பொது இடஒதுக்கீட்டுக்கு பாதகம் செய்யக்கூடாது என்பது மிக முக்கியமாகும்.

உள் இடஒதுக்கீடு

மண்டல் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள உள் இடஒதுக்கீடு மற்றும் ஆந்திர பிரதேசத்தில் மாதிகா உள் ஒதுக்கீட்டை பின்பற்றி திமு.க அரசு அட்டவணை வகுப்பினர் பிரிவில் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு (எஸ்.சி (எ)செய்ததது. தமிழ்நாடு சட்டம் எண்.4/2009-இன் அடிப்படையில், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை (நிலை) எண் 206/2008 அரசாணையில் உள்ள 200 புள்ளி கொண்ட இனச் சுழற்சி முறையில், பட்டியல் சாதியினருக்குரிய (எஸ்.சி) இடங்களில் 2, 32, 66, 102, 132 மற்றும் 166 ஆகிய இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினருக்கு ஒதுக்கப்பட்டு, அரசாணை (நிலை) எண் 65 இன்படி திருத்திய ஆணையாகும். அருந்ததியினரில் முன்னுரிமை பெற்றவர் இல்லாத நிலையில் அரசாணை நிலை எண்.541, இன்படி அந்த இடத்தில் அருந்ததியினர் எவரும் இல்லாத பட்சத்தில் அந்த இடம் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதன் அரசாணை (நிலை) எண் 142/2009-இல் தெரிவிக்கப்பட்டது. 

அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு சிக்கல் வந்தது. அதிமுக கூட்டணி கட்சி தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி இந்த உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமென மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே போன்ற பிற உள் இடஒதுக்கீடு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் மெட்ராஸ் உயர்நீதி மன்றம் இவ்வழக்கை உச்சநீதி மன்றத்திற்கு அனுப்பிவிட்டது. இவ்வழக்கு தீர்ப்பை பொருத்தே இப்பிரிவினருக்கான உள் ஒதுக்கீட்டின் எதிர்காலம் அமையும்.   

முஸ்லீம் இடஒதுக்கீடு அரசாணை (நிலை) எண். 142/2009 இல், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீட்டின்படி, உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறும் வகையில், மாற்றியமைக்கப்பட்ட 200 புள்ளிகள் கொண்ட இனச்சுழற்சி (ஙர்க்ண்ச்ண்ங்க் தர்ள்ற்ங்ழ்) முறை நிர்ணயம் செய்யப்பட்டு, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை (நிலை) எண் 101/2008 அரசாணை வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் முன்னுரிமை பெற்றோருக்கும், முன்னுரிமையற்றோருக்கும் இடையேயான 1:4 என்ற விகிதாச்சாரம் இனவாரியாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. 

ஊனமுற்றோருக்கான ஒதுக்கீடு

ஊனமுற்றோருக்கான ஒதுக்கீடு குறித்து பணியாளர் மற்றும் நிர்வாகம் சீர்த்திருத்தத்துறை அரசாணை (நிலை) எண்.200/22.12.2006 கூறப்பட்டுள்ளது. அதில், "தற்போது இடஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 10,000 காலிப் பணியிடங்களில் 300 பணியிடங்கள் ஊனமுற்றோருக்கு என ஒதுக்கப்பட்டுள்ளன. மேற்படி சுழற்சியில் ஊனமுற்றோருக்கு மூன்று இடங்களுக்கு பதிலாக இரண்டு இடங்களும், சில சுற்றில் நான்கு இடங்களும் ஒதுக்கப்பட்டன. சில சுற்றில் ஊனமுற்றோரின் குறிப்பிட்ட பிரிவினருக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. ஆனால் வேறு பிரிவினருக்கு ஒரு இடத்திற்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சுழற்சியின் குறிப்பிட்ட சுற்றில் குறிப்பிட்ட ஊனமுற்ற பிரிவினரில் தகுதியானவர் இல்லையெனில், அச்சுற்றில் அந்த பிரிவினர் பணியமர்த்தப்பட இயலாது. மேற் குறிப்பிட்ட குறைபாடுகளை தவிர்க்கும் பொருட்டு மத்திய அரசில் பின்பற்றப்படும் முறையினை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம் என ஊனமுற்றோருக்கான மாநில ஆணையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழுவில் ஊனமுற்றோருக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு நிரப்பப் படாத காலிலிப்பணியிடங்களை அடுத்தடுத்து ஆண்டு களுக்கு முன் கொணருவது குறித்து விவாதித்து, மத்திய அரசில் செயல்படுவது போன்று ஊனமுற்றோருக் கென ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிலியிடத்திற்கு தகுதியான நபர் கிடைக்கவில்லையென்றால் அவைகளை அடுத்த மூன்றாண்டுகளுக்கு முன் கொணர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது' என கூறப்பட்டுள்ளது.

தமிழ் முன்னுரிமை ஒதுக்கீடு

இன்று தமிழகத்தில் திராவிட கொள்கைக்கு எதிரானவர்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்துவருவது கலைஞர் மு. கருணாநிதி தெலுங்கர் என்பது. இது அவர் தமிழ் வளர்ச்சிக்கு செய்த மாபெரும் சேவைகளை களங்கப் படுத்தும் செயல். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தந்த கலைஞர்தான் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுபணியில் முன்னுரிமை அளித்து அதற்கென தனி அரசாணையை வெளியிட்டார். அதன்படியே அவர் ஆட்சிக் காலத்தில் தமிழ் வழியில் படித்தவர்கள் அரசு பணியில் சேர்ந்தனர். ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. மேடையில் மட்டும் தமிழை பெருமைபடுத்திவிட்டு செயல்பாட்டில் சிறுமைபடுத்திவிட்டனர்.   

தமிழ் வழியில் படித்தவர்களும் ஏமாற்றப்பட்டு விட்டதாக நீதிமன்றம் சென்றுள்ளார் திருநெல்வேலிலி இளைஞர் எஸ்.கோமதி நாயகம். டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றிப்பெற்றும் இவருக்கு பணிநியமனம் வழங்கப் படவில்லை. இதற்காக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை (W.P No. 15383 / 2012 ) தாக்கல் செய்துள்ளார். அது கோமதி நாயகம் எதிர் செயலர், தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை சீர்திருத்தத்துறை செயலர் தமிழ்நாடு   அரசு பணியாளர் தேர்வாணையம். இந்த வழக்கில் இரண்டு வாரத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமெனவும் இந்த தீர்ப்பை பொறுத்துதான் பணி நியமனம் இருக்கும் எனவும் நீதிபதி வி.ராமசுப்ரமணியன்  அவர்கள் கூறினார். 

கடந்த 2011-இல் நடந்த குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு நேர்காணல் நடைபெற்று பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டுவிட்டன. தேர்வில் வெற்றி பெற்றும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு இன்டர்வியூ  மற்றும் இன்டர்வியூ அல்லாத பணியிடங்களுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களில் மனுதாரரும் ஒருவர். இவரை போன்று பாதிக்கப்பட்ட  நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் டிசம்பர் 1-ஆம் தேதி இரவு டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதில் ஒருவர் ""சமீபத்தில் குரூப்- 2 தேர்வு முடித்தவர் களுக்கு அரசு பணியிடங்களுக்கான கவுன்சிலிலிங் நடந்தது. எங்களை விட குறைவாக படித்தவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்துவிட்டது. ஆனால் அதிக மதிப்பெண் பெற்றும், எங்களுக்கு இதுவரை பணியிடங்கள் ஒதுக்கப் படவில்லை'' என ஆதங்கத்துடன் கூறினார்.

அதாவது கடந்த திமுக ஆட்சியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை (PSTM- Persons Studied in Tamil Medium)  என தமிழ் செம்மொழி மாநாட்டின் போது அறிவிக்கப்பட்டு அதற்கென சிறப்பு அரசாணை (ஏ.ஞ. சர். 145 - 30/09/2010) வெளியிடப் பட்டது. அதன்படி எவ்வித நிபந்தனையும் இன்றி தமிழ் வழியில் படித்தோர்க்கு அவரவர்களுக்கான சமூக ஒதுக்கீட்டில் சிறப்பு ஒதுக்கீடாக 20 % வழங்கப்படவேண்டும் என்று  அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அந்த 20% பெண்களுக்கு 30% மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5% போக பொதுப்போட்டிக்கு 65% என்கின்ற பொதுவான மரபு இதிலும் பின்பற்றபட வேண்டும். அரசின் கொள்கை முடிவை போலவே பணி நியமனம் அளிக்கும்போதும் 20% என்பது சரியான விகிதத்தில் பிரித்தளிக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் தற்போது பெண்களுக்கு 45% முன்னாள் ராணுவ வீரருக்கு 35% அரசாணைக்கு எதிராக தரப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரருக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்பது நிச்சயம் அரசின் கொள்கை முடிவு அல்ல. இதனால் தமிழ் வழியில் படித்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் தமிழ் முன்னுரிமை சிறப்பு ஒதுக்கீடே இல்லாமல் போய்விட்டது என மனுவில் தெரிவித்துள்ளார். 

இன்னொரு புறம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர் திருத்தத்துறை வெளியிட்ட அரசாணையில்தான் இவ்வளவு குளறுபடியும் என கூறப்படுகிறது. அந்த அரசாணை 145 இல் உள்ள விளக்கக் கொள்கை (Illustration policy)  உள்ள 200 புள்ளிகள் கொண்ட சுழற்சி முறையில் (Point roaster) பின்பற்றி வழங்கப்பட்ட எண்களில் உள்ள குளறுபடிகளே மேற்படி சிக்கலுக்கு காரணமாக உள்ளது. 20% விகித்ததில் அனைத்து சாதியினருக்கும் பிரித்தளிக்கப்பட்டிருப்பதில் பொது பட்டியலுக்கு மட்டும் சரியான விகிதத்தில் பிரித்தளிக்கப் பட்டுள்ளது.  பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் அனைத்தும் தவறாக உள்ளது. இந்த தவறினால் மொத்தமாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுபணியில் முன்னுரிமை இல்லாமல் போய்விட்டது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசுக்கும் டி.என்.பி.எஸ்.சிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது சம்மந்தமாக டி.என்.பி.எஸ்.சி விளக்கம் தரும் என எதிர்பார்க்கிறோம். 

மேலும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம் பற்றிய திட்டம் உள்ள உண்மை. ஆனால் அது நடைமுறைப்படுத்த ஐந்து மாதங்கள் தேவை. அதற்குள் புதிய தலைவர் பதவியேற்பார். பாடத்திட்டத்தை மாற்றுவது தேவைதான். ஆனாலும் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் தமிழுக்கான சிறப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு

இந்தியாவில் ஆந்திரபிரதேசம் (APTET), அசாம் (ATET),  பீகார் (BTET), ஒடிசா (OTET), ஹிமாச்சல் பிரதேசம் (HPTET),  ராஜஸ்தான் (RTET),  உத்தரபிரதேசம் (UPTET) என இத்தனை மாநிலங்களில் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப் படுகின்றன. ஆனால் தமிழகத்தில் அப்படியொரு இட ஒதுக்கீட்டையே மறுத்து தகுதி தேர்வும் ஆசிரியர் நியமனங்களும் நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் சமீபத்தில் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. குறிப்பாக எ.சதீஷ் எதிர் தமிழ்நாடு ஆசிரியர் வாரியம் (W.P.No.31706/ 2012)  மற்றும் சென்னையை சேர்ந்த ராஜீவ்காந்தி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (W.P.No. 32283/ 2012) ராஜீவ்காந்தி எதிர் கூடுதல் செயலர், பள்ளி கல்வித்துறை மற்றும் தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம். மேலும் பல வழக்குகள் தகுதி தேர்வு சம்மந்தமாக விசாரணையில் உள்ளன.  அந்த பொதுநல மனுவில், ஆந்திர மாநிலத்தை போன்று தமிழகத்திலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்களுக்கு தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென கோரி இருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போக்கை கண்டித்தும் இடஒதுக்கீடு அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு கட்டாயம் அளிக்க வேண்டு மென கலைஞர் மு. கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். அதேபோல திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். மேலும் இதற்காக தேவைப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என தொலைபேசியில் நம்மிடம் தெரிவித்தார்.  

இறுதியாக, போட்டித்தேர்வுகள், தகுதி தேர்வு நடத்தும்போது ஐந்து நடைமுறைகளை கட்டாயம் பின் பற்றப்பட வேண்டும் என அழுத்தம் தருவோம். 1. தேர்வு நடத்தி முடித்தவுடன் சரியான (ஒரே) விடைகளை வெளி யிடப்பட வேண்டும். 2. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் களின் அதாவது வெற்றிப் பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் எவ்வித குளறுபடியும் இல்லாமல் இடஒதுக்கீடு அடிப்படையில் பதிவு எண், பெயர், சாதியை குறிப்பிட்டு தெளிவாக வெளியிட வேண்டும். 3. இறுதி பட்டியல் வெளியிட்டவுடன் எவ்வித மாறுதலையே மறுப்பட்டியலோ கட்டாயம் வெளியிடக்கூடாது. 4. பணி நியமனம் முடிந்த பின்னர் ஏற்படும் காலிலியிடங்கள் குறித்த விவரத்தை சாதி வாரியாக தெளிவாக வெளியிட வேண்டும். 5. பணி நியமனம் முடிந்த பின்னர் ஏற்படும் காலிலியிடங்களை எந்தெந்த சாதியினர் பணி நியமனம் செய்யப்படவில்லையோ மீண்டும் அந்த சாதியினரை கொண்டே நியமனம் செய்யப்பட வேண்டும். இவைகளை செய்யவில்லை  என்றால் தேர்வில் வெளிப்படையான தன்மை இல்லை என்று அர்த்தமாகும்.  
ADSENSE HERE!

No comments:

Post a Comment