Breaking News

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 375

ADSENSE HERE!

1) எதிர்ச்சொல் தருக : ஓடா 


 A.    நிற்கும்

 B.    ஓடும்

 C.    நகரும்

 D.    செல்லும்

Answer : B.

2) தொடு - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க. 

 A.    தொட்டான்

 B.    தொட்ட

 C.    தொட்டு

 D.    தொடுதல்

Answer : C.

3) பிரித்து எழுதுக -சேவடி 

 A.    சே + அடி

 B.    சேவு + அடி

 C.    சேவ + அடி

 D.    செம்மை + அடி

Answer : D.

4) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மலை -மழை 

 A.    மேகம் - உவமை

 B.    குளிர்ச்சி - ஆடுகள்

 C.    குன்று - மாரி

 D.    மிகுதி - எதிர்த்தல்

Answer : C.

5) இழவு காத்த கிளிபோல - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க. 

 A.    வியப்பு

 B.    மகிழ்ச்சி

 C.    ஏமாற்றம்

 D.    அச்சம்

Answer : C.

6) கண்டார் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க. 

 A.    காண்

 B.    கண்

 C.    கண்ட

 D.    கண்டு

Answer : A.

7) பிரித்து எழுதுக - நான்மறை 

 A.    நால் + மறை

 B.    நான்கு + மறை

 C.    நாட் + மறை

 D.    நாற் + மறை

Answer : B.

8) பிரித்து எழுதுக - நன்னாள் 

 A.    நன்மை + நாள்

 B.    நன்று + நாள்

 C.    நல்ல + நாள்

 D.    நன் + நாள்

Answer : A.

9) தலை - பெயர்ச்சொல்லின் வகை அறிக. 

 A.    பொருட்பெயர்

 B.    இடப்பெயர்

 C.    பண்புப்பெயர்

 D.    சினைப்பெயர்

Answer : D.

10) பிரித்து எழுதுக : பெருங்குணம் 

 A.    பெரு+குணம்

 B.    பெருங்+குணம்

 C.    பெரும்+குணம்

 D.    பெருமை+குணம்

Answer : D.
ADSENSE HERE!

No comments:

Post a Comment