ADSENSE HERE!
1) பெயர்ச் சொல்லின் வகை அறிக: "வட்டம்"
A. குணப்பெயர்
B. சினைப்பெயர்
C. காலப்பெயர்
D. தொழிற்பெயர்
Answer : A.
2) பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்படும் நூல்:
A. குறவஞ்சி
B. பரணி
C. அந்தாதி
D. கலம்பகம்
Answer : D.
3) "நா" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:
A. நூல்
B. நாடகம்
C. நாள்
D. நாக்கு
Answer : D.
4) "கோ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:
A. கோழி
B. அரசன்
C. கோயில்
D. கோட்டான்
Answer : B.
5) எதிர்ச்சொல் தேர்க: "அண்மை"
A. உண்மை
B. பக்கம்
C. சேய்மை
D. நன்மை
Answer : C.
6) எதிர்ச்சொல் தேர்க: "அருகு"
A. பெருகு
B. சிறுகு
C. தொலைவு
D. குறுகு
Answer : C.
7) பிரித்தெழுது: "தெங்கம் பழம்"
A. தெங்கு+பழம்
B. தெங்கு+அம்+பழம்
C. தெங்கம்+பழம்
D. தேங்காய்+பழம்
Answer : B.
8) "அவரவர்" இலக்கணக்குறிப்பு அறிக:
A. இரட்டைக் கிளவி
B. அடுக்குத்தொடர்
C. வினைத்தொடர்
D. உவமைத்தொடர்
Answer : B.
9) பிரித்தெழுது: செந்தமிழ்
A. செ+தமிழ்
B. செம்மை+தமிழ்
C. செந்+தமிழ்
D. செம்+தமிழ்
Answer : B.
10) "மொழியாமை" இலக்கணக்குறிப்பு அறிக:
A. எதிர்ச்சொல்
B. எதிமறை இடைநிலை
C. வினைத்தொகை
D. எதிர்மறை தொழிற்பெயர்
Answer : D.
ADSENSE HERE!
No comments:
Post a Comment