Breaking News

ஆண்களை காட்டிலும் பெண்கள் நீண்ட நாள் வாழ்வது எப்படி - உங்களுக்கு தெரியுமா

ADSENSE HERE!

பெரும்பாலான நாடுகளின் புள்ளி விவரங்களைப் பார்த்தால், ஆண்களைவிட பெண்களே நீண்டநாள் வாழ்கிறார்கள் என்பது புரியும்.
இத்தகைய ஆயுட்கால வித்தியாசம் மனிதர்கள் மட்டுமல்லாது பிற விலங்குகளிலும் காணப்படுகிறது என்கிறது அறிவியல். இதற்கான காரணம் இன்னதென்று கண்டறிந்து, திட்டவட்டமான ஒரு கருத்தை இதுவரை யாரும் முன்வைக்கவில்லை!

இயற்கைக்கு என்ன ஒரு வில்லத்தனம்! ஆண் உயிரினங்களுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? என்று எண்ணத்தூண்டும் இந்த அறிவியல் மர்மத்துக்கு, பரிணாம வளர்ச்சியில் இருக்கும் ஒரு ஓட்டை தான் காரணம் என்கிறது ஒரு புதிய ஆய்வு!

என்ன, பரிணாம வளர்ச்சியில் ஓட்டையா? அதெப்படி சாத்தியம்?

மனிதன் உள்ளிட்ட பல உயிரினங்களில் காணப்படும் ஆண்-பெண் ஆயுட்கால வித்தியாசத்துக்கு காரணமாக இருக்கும் அந்த `பரிணாம வளர்ச்சி ஓட்டை' உயிரணுக்களில் உள்ள மைட்டோ காண்ட்ரியா பகுதியில் இருக்கிறதாம். உயிரணுக்களின் செயல்பாட்டுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் பகுதிதான் இந்த மைட்டோ காண்ட்ரியா!

இயற்கையில் உயிரணுக்களின் உள்ளே இரு வகையான மரபுத்தொகை டி.என்.ஏ.க்கள் உண்டு. ஒன்று, உயிரணுக்களின் நிïக்லியஸ் பகுதியில் இருக்கும் மரபுத்தொகை டி.என்.ஏ. மற்றொன்று மைட்டோ காண்ட்ரியாவில் உள்ள மரபுத்தொகை டி.என்.ஏ. நிïக்லியஸ் டி.என்.ஏ.வுடன் ஒப்பிடுகையில் மைட்டோ காண்ட்ரியாவின் டி.என்.ஏ. முற்றிலும் வித்தியாசமானது.

உயிர்களின் இனவிருத்தியின் போது, கருமுட்டையிலுள்ள நிïக்லியஸ் டி.என்.ஏ. மற்றும் மைட்டோ காண்ட்ரியாவிலுள்ள டி.என்.ஏ. என இருவகையான டி.என்.ஏ. குழந்தையின் உடலுக்குள் செல்கிறது.

ஆனால், தந்தையின் விந்தணுவில் உள்ள நிïக்லியஸ் பகுதியின் டி.என்.ஏ. மட்டுமே குழந்தையின் உடலுக்குள் செல்கிறது. ஏனென்றால் விந்தணுவின் தலைப்பகுதி மட்டுமே கரு முட்டைக்குள் செல்வதால், விந்தணுவில் உள்ள மைட்டோ காண்ட்ரியாவின் டி.என்.ஏ. கருவினுள்ளே செல்வதற்கு வாய்ப்பில்லை!

அதெல்லாம் சரி, ஆண்-பெண் ஆயுட்கால வித்தியாசத்துக்கும் மைட்டோ காண்ட்ரியா எப்படி காரணமாகிறது?

உயிர்களின் மரபுத்தொகை டி.என்.ஏ.வில் மிïட்டேஷன் எனும் ஆபத்தான மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் இயற்கை தேர்வு எனும் பரிணாம செயல்பாடு, மிïட்டேஷன்கள் அடுத்த சந்ததிக்குச் செல்லாமல் தடுத்து விடுகின்றன. மைட்டோ காண்ட்ரியாவின் டி.என்.ஏ.விலும் ஆபத்தான மிïட்டேஷன்கள் ஏற்படுகின்றன. துரதிஷ்டவசமாக, மைட்டோ காண்ட்ரியாவின் டி.என்.ஏ.வில் ஏற்படும் ஆபத்தான மிïட்டேஷன்கள் இயற்கை தேர்வினால் தடுக்கப்படுவதில்லை!

இதனால், பெண்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தாத, ஆனால் ஆண்களுக்கு மட்டும் ஆபத்து விளைவிக்கக் கூடிய மிïட்டேஷன்கள் மைட்டோகாண்ட்ரியாவில் ஏற்பட்டால், அவை அப்படியே அடுத்த சந்ததிக்குச் சென்றுவிடும். வினோதமாக, இந்த மிïட்டேஷன்கள் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் என இருபாலருக்கும் சென்றாலும், ஆண்களை மட்டுமே பாதிக்கக்கூடியவை என்பது கவனிக்கத்தக்கது!

ஒரு தாய், தன்னையறியாமலேயே தன் மகனுக்கு அனுப்பும் இந்த வகையான மிïட்டேஷன்களே, பல உயிரின ஆண்களின் குறைவான ஆயுட் காலத்துக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று ïகித்தார் ஆய்வாளர் டேமியன் டவுலிங். இவர் ஆஸ்திரேலியாவிலுள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்தின் பரிணாமவியலாளர்!

தனது ïகம் தொடர்பான அறிவியல் கூற்றுகளை கண்டறிய, டவுலிங் தனது ஆய்வுக்குழுவினருடன் இணைந்து பழப்பூச்சி (ட்ரோசோபிலா மெலனொகாஸ்டர்) எனப்படும் ஒருவகை சோதனை பூச்சிகளில் சில ஆய்வுகளைச் செய்தார். இதற்காக, ஒரே வகையான உயிரணு டி.என்.ஏ.க்களை உடைய பழப்பூச்சிகள் முதலில் தேர்ந்தடுக்கப்பட்டன. பின்னர், அவற்றின் உடலுக்குள் உலகிலுள்ள 13 விதமான பழப்பூச்சிகளுடைய மைட்டோ காண்ட்ரியாவின் டி.என்.ஏ. செலுத்தப்பட்டது. ஏனென்றால், பழப்பூச்சிகளுக்கு இடையிலான மரபியல் வித்தியாசம் அவற்றின் மைட்டோ காண்ட்ரியாவில்தான் இருக்கிறது என்கிறார் ஆய்வாளர் டவுலிங்!

அதன்பின்னர், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒவ்வொரு பழப்பூச்சி வகையும் எவ்வளவு காலம் வாழ்கின்றன என்பது பதிவு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில், ஆண்-பெண் பூச்சிகளுக்கு இடையிலான ஆயுட்கால வித்தியாசம் மிகப்பெரியதாக இருந்தது தெரியவந்தது. மேலும், ஆண் பூச்சிகளின் மூப்படைதல் மற்றும் ஆயுட்காலத்தில் மட்டும் நிறைய மாற்றங்கள் இருந்ததும், பெண் பூச்சிகளில் எந்தவித மாற்றங்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது. இதன்மூலம், மைட்டோ காண்ட்ரிய டி.என்.ஏ.வின் பாதிப்பு ஆண் பூச்சிகளின் மூப்படைதல் மீது மட்டுமே இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சந்ததி விட்டு சந்ததி செல்லும் மைட்டோ காண்ட்ரிய டி.என்.ஏ.வின் மரபுவழி செயல்பாடு எல்லா உயிரினங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். அதனால் மனித ஆண்களின் குறைவான ஆயுட்காலத்துக்கும் மைட்டோ காண்ட்ரிய டி.என்.ஏ.விலுள்ள மிïட்டேஷன்தான் காரணமாக இருக்க வேண்டும்.

அப்படியானால், சில ஆண்கள் மட்டும் எப்படி பெண்களைவிட நீண்ட ஆயுட்காலத்துடன் வாழ்கிறார்கள்?

இத்தகைய ஆண்களின் மைட்டோ காண்ட்ரியாவிலும் ஆபத்தான மிïட்டேஷன்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகளை, இவர்களின் உயிரணு டி.என்.ஏ.க்கள் எதிர்கொண்டு சமாளித்து சரி செய்துவிடக்கூடும். இதனாலேயே சில ஆண்கள் நீண்டகாலம் வாழ்வதோடு மட்டுமல்லாமல், ஆண்கள் இனம் அழிந்துபோகாமல் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது என்று சொல்லலாம் என்கிறார் பரிணாமவியலாளர் டேமியன் டவுலிங்!
ADSENSE HERE!

No comments:

Post a Comment