ADSENSE HERE!
பிரபஞ்சவெளியில் பூமியில் மட்டும் உயிரினங்கள் உருவாக காரணம் நீர் ஆனால் அந்த நீர் எப்படி உருவானாது என்பது விஞ்ஞானிகளின் மண்டையை குடைய
வைக்கும் கேள்வி . இக்கேள்விக்கான பல்வேறுபட்ட விடைகள் விஞ்ஞானிகளிடையே காணப்பட்டாலும் தற்போது அனைவரும் ஏற்ககூடிய அறிவியல் தீர்வை விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர் . முதலில் அரோர எனப்படும் மாயாஜால ஒளியை பற்றி காண்போம்
பூமியின் துருவபகுதிகளில் காணப்படும் அதிகப்படியான காந்த ஈர்பினால் காற்றில் உள்ள மூலக்கூறுகள் மின்சக்தி பெறுகின்றன இதனால் சூரிய ஒளியில் அணுக்கள் மின்னேற்றம் பெற்று ஒளிருகின்றன இதை பார்த்தால் வர்ணஜாலமாய் கண்களுக்கு விருந்து படைக்கும்
அரோரா ஒளியை பற்றி லூயிஸ்டிராங்கு எனும் ஆய்வாளர் ஆராய்ந்து வந்தார் வளிமண்டல அடுக்கினுள் சூரிய ஒளி விழும்போது பூமியின் பகல் பகுதிகளில் புற ஊதாக்கதிர்களின் ஒளி அலை நீளங்கள் பிரகாசமாய் அரோராவாய் ஒளிரும் இதை ஆராய்ச்சி செய்ய முனைந்த டிராங்கு டைனமிக் எக்பிளோரர் எனும் செயற்கைகோளின் மூலம் புற ஊதாக்கதிர்களை புகைப்படம் எடுத்து ஆராய்ந்தார் அதில் பூமின் பகல் பகுதிகள் பிரகாசமாய் ஒளிர்ந்தது ஆனால் அதில் சில கரும்புள்ளிகள் காணப்பட்டன அடுத்தடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கரும்புள்ளிகள் நகர்ந்து நகர்ந்து காணப்பட்டது . கரும்புள்ளிகள் ஏற்பட என்ன காரணம் என்று ஆராய்ந்த போது நீர் மூலக்கூறுகள் என்று கண்டார் .
பூமியின் வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் நீர் மூலக்கூறுகள் சாத்தியம் இல்லை ஆனால் புகைப்படத்தில் கரும்புள்ளிகளாய் நீர் வந்தது எப்படி என்று மேலும் மேலும் ஆராய்ந்தார் முடிவில் வால்நட்சத்திரத்தில் இருந்து சிறு சிறு பனிக்கட்டிகளாக பூமின்மேல் விழுகிறது அதனால்தான் புகைப்படத்தில் கரும்புள்ளிகள் தோன்றின எனக்கண்டறிந்தார் . வால்நட்சத்திரம் என்பது பாதிக்கு பாதி நீர் நிறைந்தது . பல மில்லியன் ஆண்டுகளாக இவ்வாறு வால்நட்சத்திரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நீரை பெற்றதால் பூமியில் கடல்கள், ஆறுகள் ,ஏரிகள் போன்ற நீர் நிலைகள் தோன்றின என லூயிஸ்டிராங்கு கூறினார் ஆனால் இக்கருத்து சரியல்ல என்று ஒரு சில விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர் மற்றும் சிலரோ இக்கருத்தை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கின்றனர் எது எப்படியோ அறிவியல் என்பது மக்களுக்கு நன்மைகளை செய்தால் நல்லதுதானே .
ADSENSE HERE!
No comments:
Post a Comment