ADSENSE HERE!
பேனா என்பது இன்று மிக பெரிய ஆயுதம். இந்த பேனாவின் மூலம் ஒரு அரசாங்கத்தின் ஆட்சியை
கூட மாற்றி விடலாம். அன்பை வளர்த்து கொள்ளலாம் இவ்வாறு பல்வேறு இடங்களில் பேனா உபயோகப்படுத்தப் படுகிறது. அது எப்படி உருவானது என்று தெரிந்து கொள்ள ஆவல் இல்லையா?
பண்டைய காலங்களில் குழலில் மையை ஊற்றி அடைத்த பின்பு நிப் மூலமாக எழுதும் பவுண்டன் பேனா மட்டுமே இருந்தன. இதன் நிப்பு சீக்கிரமாக உடைந்து விடும். அதோடு எழுத்தாளர்களின் வேலையும் நின்று போகும். இப்படி வேலை நின்று போனதால் தான் புதிதாக பேனாக்கள் உருவாக காரணமாயிற்று.
ஹங்கேரியில் வாழ்ந்த ஜார்ஜ் பிரேயும் அவர் சகோதரர் லாஸ்லோ-பி-ரோவும் சேர்ந்து புதிய பேனாவை உருவாக்க ஆராய்ச்சி மேற்கொண்டனர். சீக்கிரத்தில் ஒடியாத பேனாவாகவும் விலை மலிவாகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய சிந்தனையாக இருந்தன. அந்த நாட்களில் ஹிட்லர் போருக்கு அழைப்பு விடுவித்தால் தங்கள் நாடும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் சகோதரர்கள் இருவரும் அர்ஜென்டினா நாட்டில் அடைக்கலம் புகுந்தார்கள்.
அங்கே வைத்து மறுபடியும் புதுரக பேனாவை வடிவமைக்கும் பணி நடந்தது. ஆராய்ச்சியின் பலனாக ஒரு பேனா வடிவமைக்கப்பட்டது. குழலில் மை நிரப்பி எழுதும் முறையில் தான் இதுவும் அமைந்தது. ஆனால் இது காற்றினால் நிரப்பப்படும் மை. எழுதிய பின்பும் மை சிந்தியதால் அதை நிறுத்துவது பற்றி யோசித்தனர். குழாயின் நுனியில் ஒரு உருண்டை செலுத்தப்பட்டது. அது மீண்டும் மையை சிந்தவிடாமல் தடுத்தது. இந்த பேனா தான் பால்பாயின்ட் என்ற பெயரில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
ADSENSE HERE!
No comments:
Post a Comment