Breaking News

இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்த உயர் நீதி மன்றம்!

ADSENSE HERE!

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இரண்டு வாரத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகர் தாக்கல் செய்த மனுவில், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன. இடை நிலை
ஆசிரியர் பணிக்கு மாநில பதிவு மூப்பை கணக்கில் கொள்ள உச்ச நீதின்றம் உத்தரவிட்டது. மேலும் 2010 ம் ஆண்டில் கல்வி உரிமைச் சட்ட விதிகள் வகுக்கப்பட்டது. ஆசிரியர்களுக்ககான தகுதிகளை நிர்ணயம் செய்ய தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உருவாக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் பணி நியமனத்திற்கான தகுதி வரையறை செய்யப்பட்டு 2011 நவம்பர் 15ம் தேதி அரசு ஆணை எண் 181 வெளியிடப்பட்டது. அதன்படி பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்டையிலும் இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் கடந்த மார்ச் 7ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதித் தேர்வு எழுத வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார். இது அரசு ஆணை எண் 181க்கு முரணானது. இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அறிவிப்புக்கு 2 வார இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டதோடு, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு கோரி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கும், பள்ளிக் கல்வித் துறை செயலருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜுன் 18ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

ADSENSE HERE!

No comments:

Post a Comment