Breaking News

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் விற்பனை

ADSENSE HERE!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் விநியோகம் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பட்டய ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்
ஆகியோருக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு ஆணையம் நடத்துகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் செய்யாதவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே இத்தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்கள், தற்போது மறுதேர்வுக்கு விண்ணப்பம் செய்யத் தேவையி்ல்லை.
அந்த வகையில் விண்ணப்பம் விநியோகம் செப்.,24ம் தேதி தொடங்கி, செப்.,28ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இங்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்  விநியோகம் செய்வதற்கு மொத்தம் 6 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளது.
மேலும், விண்ணப்பங்கள் தேவைப்படுகிறவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், முதல் நாள் 300 விண்ணப்பங்களும், நேற்று 150 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி தெரிவித்தார்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment