Breaking News

TNPSC குரூப் - 4 தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 4

ADSENSE HERE!

தரங்கம்பாடி கோட்டை
•    செங்கலால் கட்டப்பட்ட கோட்டை
•    வாணிப நோக்கத்திற்காக கட்டப்பட்ட கோட்டை.
•    கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்.
•    கட்டப்பட்ட ஆண்டு - கி.பி.1620.


சீகன்பால்க்
•    கி.பி.1706ஆம் ஆண்டு இந்தியா வந்தார்.
•    கூட்டன்பர்க் கண்டறிந்த அச்சு இயந்திரத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் இவர்தான்.
•    தரங்கம்பாடியில் இருந்து வாணிபம் மேற்கொண்டவர்கள் - டேனியர்கள்
•    ஆங்கிலேயர்கள் வியாபாரம் செய்வதற்காக தமிழகத்தில் கட்டிய முதல் கோட்டை - புனித ஜார்ஜ் கோட்டை.
•    புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1639
•    புனித ஜார்ஜ் கோட்டை கட்டும்போது தமிழகத்தில் இருந்த ஆங்கிலேய தளபதி - சர் பிரான்சிஸ்டே.
•  புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள மாதா தேவாலயத்தில் யாருடைய திருமணம் நடைபெற்றது - ராபர்ட் கிளைவ் மற்றும் ஆளுநர் எலிஹீஹேல் ஆகியோரின் திருமணங்கள்.
•    யாருடைய படையெடுப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இந்தக் கோட்டை கட்டப்பட்டது - ஔரங்கசீப்.
•    புனித ஜார்ஜ் கோட்டையை யார் வாழ்ந்த வீடாக சொல்வார்கள் - ராபர்ட் கிளைவ் மற்றும் வெல்லெஸ்லி.
•    இந்தியாவின் மிக உயரமான கொடிக்கம்பம் உள்ள இடம் - புனித ஜார்ஜ் கோட்டை.
•    சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட கன்னிமாரா நூலகம்தான் இந்தியாவின் முதல் நவீன நூலகம்.
•    இந்தியாவின் முதல் மருத்துவமனை எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது - 1664, புனித ஜார்ஜ் கோட்டையில்.
•    கோட்டைகள் அதிகமுள்ள நாடு - செக்கோஸ்லோவேகியா  (2500க்கும் அதிகம்)
•    உலகின் மிகப் பழமையான புகழ்பெற்ற கோட்டை - ராட்லனி (செக்கோஸ்லோவேகியா)
•    உலகில் உள்ள மிகப் பெரிய கோட்டை அரண்மனை - இங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் அரண்மனை.

ADSENSE HERE!

No comments:

Post a Comment