Breaking News

மரங்களின் வடிவம் ஏன் இப்படி இருக்கிறது

மரங்களின் வடிவம் ஏன் இப்படி இருக்கிறது

மரத்தின் தண்டுப்பகுதி பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கிறது என்றாலும், எல்லாத்
தாவரங்களுக்கும் இது பொருந்தாது. ஏனென்றால் புல் வகைகளின் தண்டுகள் முக்கோண வடிவிலும், துளசிச் செடி போன்றவற்றின் தண்டுகள் சதுர வடிவிலும் அமைந்திருக்கும். தாவரங்கள் நுண்ணிய உயிரணுக்களால் ஆனவை என்பதால், அவ்வுயிரணுக்கள் கோள வடிவில் அல்லது திருகு சுருள் வடிவில் ஒருங்கிணைந்து இருக்கும். 

மேலும், தனிப்பட்ட உயிரணுவின் அமைப்பு மற்றும் உயிரணுக்கள் ஒருங்கிணைந்து உருவாகும் அமைப்பு ஆகிய இரண்டையும் பொறுத்துத் தாவரத்தின் உருவம் அமையும். தாவரத்தின் தண்டுப் பகுதியில் இரு குறுகிய குழாயமைப்பிலான திசுப் பகுதிகள் உள்ளன. அவை மரவியம், பட்டையம் என்று அழைக்கப்படுகிறது. மரவியம் தண்டின் நடுப்பகுதியில் உள்ளது. பட்டையம் மரவியத்தின் புறப் பகுதியில் அதாவது மரத்தின் சுவர்ப் பகுதியில் அமைந்துள்ளது. மரத்தின் தண்டுப்பகுதி வெளிப்புறமாக ஆரவாட்டில் ஒவ்வொரு அடுக்காக வளர்வதால் தான் மரத்தின் தண்டு பகுதி உருளை வடிவில் காணப்படுகிறது.

சோப்பின் நுரை வெண்மையாகவே இருப்பது ஏதனால் - உங்களுக்கு தெரியுமா

சோப்பின் நுரை வெண்மையாகவே இருப்பது ஏதனால் - உங்களுக்கு தெரியுமா

சோப்பு நுரை என்பது நுண்ணிய சோப்புக் குமிழ்களின் கூட்டமே. சோப்புக் குமிழ் என்பதோ சிறு அளவு காற்றை உள்ளடக்கி
அமைந்திருக்கும் சோப்புக் கரைசலின் மெல்லிய படலம். சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையின் காரணமாக, அதன் படலம் நீண்டு பரவிட முடிகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள நுரையினால் கவரப்படும் பரப்பு, அதே கன அளவுள்ள நீரினால் கவரப்படும் பரப்பைவிட மிகுதி எனலாம்.

சோப்பு நுரை இவ்வாறு பரவுவதன் காரணமாக அதில் ஏதேனும் சிறு அளவு வண்ணம் இருப்பினும் அது மங்கிப்போகிறது. மேலும் சோப்புப்படலம் ஒளி புகக்கூடியது. சோப்புக்குமிழ்களின் கூட்டமான நுரையைஅடையும் ஒளி பல்வேறு திசைகளில் சிதறிப்பரவுவதால் நுரை வெண்மையாக மட்டுமே காட்சியளிக்கிறது. பல்வேறு நிறம் கொண்ட சோப்புகளின் நுரைக்கும் கூடு இந்த தத்துவம் பொருந்தும்.

நவரத்தினங்கள் உருவாவது எப்படி - உங்களுக்கு தெரியுமா

நவரத்தினங்கள் உருவாவது எப்படி - உங்களுக்கு தெரியுமா
நவரத்தினங்களில் அனைவருக்கும் தெரிந்தது வைரவம். அது தவிர இரத்தினம், புஷ்பராகம், முத்து, பவளம், மாணிக்கம், வைடூரியம்,
மரகதம், கோமேதகம் போன்றவை உள்ளன.

இரத்தினம் என்பது அலுமினியமும், ஒக்சிஜனும் அதிகம் சேர்ந்த கலவை. காலையில் அடர் நிறத்திலும், மாலையில் வெளிர் நிறத்திலும் ஜொலிக்கும். 17 ஆம் நூற்றாண்டில் இரத்தினக் கற்கள் அரச ஆபரணமாக இருந்தன. அதை மற்றவர்கள் யாரும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தேன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் புஷ்பராகக் கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில் அதிகம் கிடைக்கிறது.

18 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேய மன்னன் புரகோன்ஷாவின் கிரீடத்தை அலங்கரித்த புஷ்பராகத்தின் எடை 1,608 கரட், உலகின் பெரிய தொழிலதிபர்கள், வன ஆய்வாளர்கள் புஷ்பராகம் அணிகிறார்கள்.

கடலில் கிடைப்பது முத்து. வெள்ளை, பழுப்பு, நீலம், பச்சைச, இளஞ்சிவப்பு, கறுப்பு நிறத்திலும் கூட முத்துக்கள் உள்ளன. இது முழுக்க முழுக்க கல்சியம் கார்பனேட் தான். கடலுக்கு அடியில் இருந்து கிடைப்பதால் விலை அதிகம். தற்போது செயற்கை முத்துக்கள் தான் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.

முத்துக்களைப் போலவே பவளத்திற்கும் கடல் தான் வீடு. வெது வெதுப்பான நீர்ப்பகுதியில் இது விளையும். பவளப்பூச்சி என்ற கடல் வாழ் உயிரினம், கறையான் கூடு போன்று கட்டும் புற்றே பவளப் பாறைகள் ஆகும். இரத்தம் போல் ஜொலிக்கும் பவளம் தான் சிறந்தது. சுற்றுச் சூழல் சீர்கேட்டால் பவளப் பாறைகள் அழிய தொடங்கிய பிறகு, பவளத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது.

மாணிக்கம், இரத்தினம் இவை இரண்டுமே பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகை கல் தான். காதலின் அடையாளமாக காதலர்கள் மத்தியில் மாணிக்கத்திற்கு மவுசு அதிகம். பூமிக்கு அடியில் அதிக அழுத்தத்தில் இருக்கும் லாவரா என்ற எரிமலை குழம்பு வெளியே வந்தால் அது தான் வைடூரியம்.

வைரம், மாணிக்கம் வரிசையில் வைடூரியத்திற்கு 3 வது இடம். பச்சை நிறத்தில் பளபளப்பது மரகதம். சிறிய கல் கூட பல இலட்சம் விலை கொண்டது. மதுரை மீனாட்சி, உத்திரகோசமங்கை போன்ற முக்கிய கோயில்களில் மூலவர் சிலையே மரகதத்தால் ஆனது.

பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஏராளமாகக் கிடைக்கிறது. நவரத்தினங்களில் மிகவும் விலை குறைந்தது கோமேதகம். பசுவின் கோமிய நிறத்தில் இது இருப்பதால் அந்தப் பெயர் வந்தது. நகைகளின் பளபளப்பை கூட்டுகிறது. இதில் போலிகளை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. கோமேதக வர்த்தகம் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கிறது.

ஆண்களை காட்டிலும் பெண்கள் நீண்ட நாள் வாழ்வது எப்படி - உங்களுக்கு தெரியுமா

ஆண்களை காட்டிலும் பெண்கள் நீண்ட நாள் வாழ்வது எப்படி - உங்களுக்கு தெரியுமா

பெரும்பாலான நாடுகளின் புள்ளி விவரங்களைப் பார்த்தால், ஆண்களைவிட பெண்களே நீண்டநாள் வாழ்கிறார்கள் என்பது புரியும்.
இத்தகைய ஆயுட்கால வித்தியாசம் மனிதர்கள் மட்டுமல்லாது பிற விலங்குகளிலும் காணப்படுகிறது என்கிறது அறிவியல். இதற்கான காரணம் இன்னதென்று கண்டறிந்து, திட்டவட்டமான ஒரு கருத்தை இதுவரை யாரும் முன்வைக்கவில்லை!

இயற்கைக்கு என்ன ஒரு வில்லத்தனம்! ஆண் உயிரினங்களுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? என்று எண்ணத்தூண்டும் இந்த அறிவியல் மர்மத்துக்கு, பரிணாம வளர்ச்சியில் இருக்கும் ஒரு ஓட்டை தான் காரணம் என்கிறது ஒரு புதிய ஆய்வு!

என்ன, பரிணாம வளர்ச்சியில் ஓட்டையா? அதெப்படி சாத்தியம்?

மனிதன் உள்ளிட்ட பல உயிரினங்களில் காணப்படும் ஆண்-பெண் ஆயுட்கால வித்தியாசத்துக்கு காரணமாக இருக்கும் அந்த `பரிணாம வளர்ச்சி ஓட்டை' உயிரணுக்களில் உள்ள மைட்டோ காண்ட்ரியா பகுதியில் இருக்கிறதாம். உயிரணுக்களின் செயல்பாட்டுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் பகுதிதான் இந்த மைட்டோ காண்ட்ரியா!

இயற்கையில் உயிரணுக்களின் உள்ளே இரு வகையான மரபுத்தொகை டி.என்.ஏ.க்கள் உண்டு. ஒன்று, உயிரணுக்களின் நிïக்லியஸ் பகுதியில் இருக்கும் மரபுத்தொகை டி.என்.ஏ. மற்றொன்று மைட்டோ காண்ட்ரியாவில் உள்ள மரபுத்தொகை டி.என்.ஏ. நிïக்லியஸ் டி.என்.ஏ.வுடன் ஒப்பிடுகையில் மைட்டோ காண்ட்ரியாவின் டி.என்.ஏ. முற்றிலும் வித்தியாசமானது.

உயிர்களின் இனவிருத்தியின் போது, கருமுட்டையிலுள்ள நிïக்லியஸ் டி.என்.ஏ. மற்றும் மைட்டோ காண்ட்ரியாவிலுள்ள டி.என்.ஏ. என இருவகையான டி.என்.ஏ. குழந்தையின் உடலுக்குள் செல்கிறது.

ஆனால், தந்தையின் விந்தணுவில் உள்ள நிïக்லியஸ் பகுதியின் டி.என்.ஏ. மட்டுமே குழந்தையின் உடலுக்குள் செல்கிறது. ஏனென்றால் விந்தணுவின் தலைப்பகுதி மட்டுமே கரு முட்டைக்குள் செல்வதால், விந்தணுவில் உள்ள மைட்டோ காண்ட்ரியாவின் டி.என்.ஏ. கருவினுள்ளே செல்வதற்கு வாய்ப்பில்லை!

அதெல்லாம் சரி, ஆண்-பெண் ஆயுட்கால வித்தியாசத்துக்கும் மைட்டோ காண்ட்ரியா எப்படி காரணமாகிறது?

உயிர்களின் மரபுத்தொகை டி.என்.ஏ.வில் மிïட்டேஷன் எனும் ஆபத்தான மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால் இயற்கை தேர்வு எனும் பரிணாம செயல்பாடு, மிïட்டேஷன்கள் அடுத்த சந்ததிக்குச் செல்லாமல் தடுத்து விடுகின்றன. மைட்டோ காண்ட்ரியாவின் டி.என்.ஏ.விலும் ஆபத்தான மிïட்டேஷன்கள் ஏற்படுகின்றன. துரதிஷ்டவசமாக, மைட்டோ காண்ட்ரியாவின் டி.என்.ஏ.வில் ஏற்படும் ஆபத்தான மிïட்டேஷன்கள் இயற்கை தேர்வினால் தடுக்கப்படுவதில்லை!

இதனால், பெண்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தாத, ஆனால் ஆண்களுக்கு மட்டும் ஆபத்து விளைவிக்கக் கூடிய மிïட்டேஷன்கள் மைட்டோகாண்ட்ரியாவில் ஏற்பட்டால், அவை அப்படியே அடுத்த சந்ததிக்குச் சென்றுவிடும். வினோதமாக, இந்த மிïட்டேஷன்கள் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் என இருபாலருக்கும் சென்றாலும், ஆண்களை மட்டுமே பாதிக்கக்கூடியவை என்பது கவனிக்கத்தக்கது!

ஒரு தாய், தன்னையறியாமலேயே தன் மகனுக்கு அனுப்பும் இந்த வகையான மிïட்டேஷன்களே, பல உயிரின ஆண்களின் குறைவான ஆயுட் காலத்துக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று ïகித்தார் ஆய்வாளர் டேமியன் டவுலிங். இவர் ஆஸ்திரேலியாவிலுள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்தின் பரிணாமவியலாளர்!

தனது ïகம் தொடர்பான அறிவியல் கூற்றுகளை கண்டறிய, டவுலிங் தனது ஆய்வுக்குழுவினருடன் இணைந்து பழப்பூச்சி (ட்ரோசோபிலா மெலனொகாஸ்டர்) எனப்படும் ஒருவகை சோதனை பூச்சிகளில் சில ஆய்வுகளைச் செய்தார். இதற்காக, ஒரே வகையான உயிரணு டி.என்.ஏ.க்களை உடைய பழப்பூச்சிகள் முதலில் தேர்ந்தடுக்கப்பட்டன. பின்னர், அவற்றின் உடலுக்குள் உலகிலுள்ள 13 விதமான பழப்பூச்சிகளுடைய மைட்டோ காண்ட்ரியாவின் டி.என்.ஏ. செலுத்தப்பட்டது. ஏனென்றால், பழப்பூச்சிகளுக்கு இடையிலான மரபியல் வித்தியாசம் அவற்றின் மைட்டோ காண்ட்ரியாவில்தான் இருக்கிறது என்கிறார் ஆய்வாளர் டவுலிங்!

அதன்பின்னர், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒவ்வொரு பழப்பூச்சி வகையும் எவ்வளவு காலம் வாழ்கின்றன என்பது பதிவு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில், ஆண்-பெண் பூச்சிகளுக்கு இடையிலான ஆயுட்கால வித்தியாசம் மிகப்பெரியதாக இருந்தது தெரியவந்தது. மேலும், ஆண் பூச்சிகளின் மூப்படைதல் மற்றும் ஆயுட்காலத்தில் மட்டும் நிறைய மாற்றங்கள் இருந்ததும், பெண் பூச்சிகளில் எந்தவித மாற்றங்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது. இதன்மூலம், மைட்டோ காண்ட்ரிய டி.என்.ஏ.வின் பாதிப்பு ஆண் பூச்சிகளின் மூப்படைதல் மீது மட்டுமே இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சந்ததி விட்டு சந்ததி செல்லும் மைட்டோ காண்ட்ரிய டி.என்.ஏ.வின் மரபுவழி செயல்பாடு எல்லா உயிரினங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். அதனால் மனித ஆண்களின் குறைவான ஆயுட்காலத்துக்கும் மைட்டோ காண்ட்ரிய டி.என்.ஏ.விலுள்ள மிïட்டேஷன்தான் காரணமாக இருக்க வேண்டும்.

அப்படியானால், சில ஆண்கள் மட்டும் எப்படி பெண்களைவிட நீண்ட ஆயுட்காலத்துடன் வாழ்கிறார்கள்?

இத்தகைய ஆண்களின் மைட்டோ காண்ட்ரியாவிலும் ஆபத்தான மிïட்டேஷன்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புகளை, இவர்களின் உயிரணு டி.என்.ஏ.க்கள் எதிர்கொண்டு சமாளித்து சரி செய்துவிடக்கூடும். இதனாலேயே சில ஆண்கள் நீண்டகாலம் வாழ்வதோடு மட்டுமல்லாமல், ஆண்கள் இனம் அழிந்துபோகாமல் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது என்று சொல்லலாம் என்கிறார் பரிணாமவியலாளர் டேமியன் டவுலிங்!

டி.என்.ஏ வும் சில ஆச்சரியங்களும்

டி.என்.ஏ வும் சில ஆச்சரியங்களும்

எப்போதும் தன்னைப் பற்றியும், தனது முன்னேற்றத்தைப் பற்றியுமே சிந்தித்து வாழும் மனிதர்களை நாம் சுயநலவாதிகள் என்கிறோம்.
ஆனால், சுயநலவாதம் எனும் குணம் மனிதர்களில் மட்டுமல்ல, உயிரினங்களின் இயக்கத்துக்கு அடிப்படையான டி.என்.ஏ. மரபுப்பொருளுக்கும் உண்டு என்று ஆச்சரியமூட்டுகிறது ஒரு சமீபத்திய ஆய்வு!

டி.என்.ஏ. என்பது உயிர்களின் உடலியக்கத்துக்கு அவசியமான நெறிமுறைகளை உள்ளடக்கிய ஒரு வேதியியல் மூலக்கூறு. இவை, சிக்கலான பல்வேறு உயிரியல் நிகழ்வுகள் மூலம், உடலிலுள்ள கோடிக்கணக்கான உயிரணுக்களின் செயல்பாடுகளை வழிநடத்துகின்றன. நம் உயிரணுக்களில் இருவகையான டி.என்.ஏ.க்கள் உண்டு.

ஒன்று, உயிரணுக்களின் மையக் கட்டுப்பாட்டுப் பகுதியான நிïக்லியசில் இருக் கும் உயிரணு டி.என்.ஏ. மற்றொன்று, உயிரணுக்களின் செயல்பாட்டுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும் மைட்டோ காண்ட்ரியா பகுதியில் இருக்கும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. இந்த இரு வகையான டி.என்.ஏ.க்களுமே உயிரணு வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் இன்றியமையாதவைதான்.

வினோதமாக, உயிரணு வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் பயனில்லாத, ஆனால் ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு புதிய வகை டி.என்.ஏ. மைட்டோ காண்ட்ரியாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த டி.என்.ஏ.வுக்கு `சுயநலவாத டி.என்.ஏ.' என்று பெயரிடப்பட்டுள்ளது. சோதனைக்கூட ஆய்வுகளுக்கு பயன்படும் மாதிரி உயிரினமான சி.எலிகன்ஸ் எனப்படும் ஒரு புழுவின் மீதான ஆய்வில் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது.

டி.என்.ஏ. தெரியும், அதென்ன சுயநலவாத டி.என்.ஏ.?

ஒரு உயிரணு வளரும்போது பொதுவாக அதன் மைட்டோ காண்ட்ரிய டி.என்.ஏ. உள்ளிட்ட மொத்த டி.என்.ஏ.வும் இரட்டிப்படைவதே இயல்பான உயிரியல் நிகழ்வு. ஆனால் இந்த ஆய்வில், உயிரணு வளர்ச்சியின் போது மைட்டோ காண்ட்ரியாவில் உள்ள டி.என்.ஏ.வின் ஒரு பகுதி மட்டும் தனியாகவும், வேகமாகவும் இரட்டிப்படைந்தது கண்டறியப்பட்டது. மேலதிக பரிசோதனைகளில், இந்த டி.என்.ஏ.வினால் உயிரணுவுக்கு எந்த பயனும் இல்லை என்பதும், மாறாக சில பாதிப்புகள் இருப்பதும் தெரியவந்தது. இதன் காரணமாகவே, இந்த டி.என்.ஏ.வுக்கு சுயநலவாத டி.என்.ஏ. என்று பெயரிடப்பட்டது என்கிறார் மூத்த ஆய்வாளர் டீடென்வர்.

இதற்கு முந்தைய ஆய்வுகளில், சில தாவரங்களில் இதே போன்ற சுயநலவாத டி.என்.ஏ. இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், அந்த தாவரங்களின் மலர்தல் தொடர்பான குறைபாடுகள் மற்றும் மலட்டுத்தன்மைக்கு, அவற்றின் சுயநலவாத டி.என்.ஏ. காரணமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை, சில தாவரங்களில் மட்டும் இருக்கிறது என்று கருதப்பட்ட சுயநலவாத டி.என்.ஏ., சி.எலிகன்ஸ் போன்ற விலங்குகளிலும் இருக்கிறது என்பது, ஓரிகான் பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வின் மூலம் உலகில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவாரசியமாக, சி.எலிகன்ஸ் புழுவில் சுயநலவாத வகை டி.என்.ஏ.க்கள் இருந்ததும், அவை ஆபத்தானவை என்பதும் முன்னரே தெரிந்திருந் தாலும், அவை சுயநலவாத டி.என்.ஏ.தான் என்பது தெரியாமல் இருந்தது என்கிறார் ஆய்வாளர் கேட்டீ கிளார்க். மேலும், சுயநலவாத டி.என்.ஏ.க்களை உடைய புழுக்கள் குறைவான சந்ததிகள் மற்றும் தசை செயல்பாடு கொண்டவையாய் இருந்தன. இந்த நிலை, இயற்கை தேர்வு எனும் பரிணாம செயல்பாடு இந்த புழுக்களில் சரியாக வேலை செய்யவில்லை என்பதையே காட்டுகிறது என்கிறார் கேட்டீ!

சுயநலவாத டி.என்.ஏ.க்கள், உயிரினங்களின் வாழ்தல் மற்றும் இனவிருத்திக்கு பயன்படவில்லை என்றால், பரிணாம செயல்பாட்டின் மூலம் அவை அழிந்தல்லவா போயிருக்க வேண்டும்? அவை இன்னும் அழியாமல் இருப்பது, இயற்கை தேர்வானது உயிர் அல்லது உயிரின அளவில் எப்போதுமே சரியாக செயல்படுவதில்லை என்பதற்கான ஒரு உதாரணமே. ஆக, `உயிரியல் முன்னேற்றமானது குறைபாடுகள் உடையதே' என்கிறார் முனைவர் டீ டென்வர்.

இவற்றைவிட இன்னும் சுவாரசியமான செய்தி என்னவென்றால், சுயநலவாத டி.என்.ஏ.வினால் சி.எலிகன்ஸ் புழுக்களில் ஏற்படும் பாதிப்புகள் அல்லது குறைபாடுகள், ஒரு மனிதன் மூப்படைவதால் அவனது உயிரணுக்களில் அதிகரிக்கும் கெட்டுப்போன மைட்டோ காண்ட்ரியாவினால் ஏற்படும் பாதிப்புகளைப் போலவே இருக்கிறது என்பதுதான். புழுக்களுக்கு வயதாக வயதாக, அவற்றின் சுயநலவாத டி.என்.ஏ.வின் அளவும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

அதெல்லாம் சரி, இந்த சுயநலவாத டி.என்.ஏ.க்கள் பற்றிய செய்தியால் நமக்கென்ன பயன்?

சுயநலவாத டி.என்.ஏ.க்கள் மீதான மேலதிக ஆய்வுகள் மூலம், மனிதர்களைப் பாதிக்கும் ஒருவித குறைபாடான `மைட்டோ காண்ட்ரியல் டிஸ்பங்ஷன்' குறித்த புரிதலை பெற முடியும் என்கிறார் முனைவர் டென்வர். இந்த ஆய்வின் மூலம், சுயநலவாதமானது மனித அளவில் இருந்தாலும் சரி, உயிரணு அளவில் இருந்தாலும் சரி, ஆபத்தானதே என்பது நிரூபணமாகிறது.

காலண்டர் உருவானது எப்படி உங்களுக்கு தெரியுமா?

காலண்டர் உருவானது எப்படி உங்களுக்கு தெரியுமா?
நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை வரவேற்க ஆவலுடனும் உற்சாகத்தோடும் காத்திருக்கிறோம், புது வருடத்திற்கு
விதவிதமான வடிவமைப்புகளில் காலண்டர்கள் வாங்கி மகிழுவோம் காலண்டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந்த கதையைத் தெரிந்து கொள்வோம்! கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கிலச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்ககால காலண்டர்களுக்கு அடிப்படையாக அமைந்தன.

நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக்கிய காலண்டர் இதற்குச் சான்று. இன்று நம் முன்னே இருக்கும் காலண்டரின் அடிப்படை கி.மு. 45 இல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டரே. இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டரே முறையே கிரிகோரியன் காலண்டர். பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆனைப்படி, அலோயிஷியஸ் ல்லியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 இல் ஜீலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார். ஏசு கிருஸ்துவின் பிறந்த தினத்தை அடிப்படையாக கொண்ட இக்காலண்டரின் வருடங்கள் ஒழுங்கமைப்பட்டது.

 ஸ்பெயின், போர்ச்சுக்கல்,போலிஷ்லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பாலான பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் காலண்டரை முத்ன் முதலில் ஏற்றுக்கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் காலண்டரைப் பயன்படுத்தத் துவங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆண்டிற்கு பின்பே கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்தன. 1923 பிப்ரவரி 15 ல் கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்த கிரீஸே இந்தப் பட்டியலின் கடைசி நாடு. மாதங்களின் பெயர் வரலாறு: 

ஜனவரி: ரோமன் இதிகாசத்தில் “துவக்கங்களின் கடவுளாக” காணப்பட்ட ஜானஸ்லானுயாரியஸ் கடவுளின் பெயரே கிரிகோரியன் காலண்டரின் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்பட்டது.

 பிப்ரவரி: ஜூலியன் மற்றும் கிரிகோரியன் காலண்டரின் இரண்டாவது மாதம் பிப்ரவரியே “சுத்தப்படுத்தல்” எனும் பொருள் தரும் ஃபெப்ரம் எனும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததே பிப்ரவரி. புராதன ரோமர்கள் பிப்ரவரி மாதம் 15 ம் தேதி ஃபெப்ரா எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற்காக சூட்டப்பட்டதே இந்த பிப்ரவரி.

 மார்ச்: ரோமர்களின் போர்க்கடவுளான “மார்ஸி: என்பதிலிருந்து உருவானதே மார்ச் கி.மு 700 களில் ரோமாபுரியை ஆண்ட நுமபோம் விலஸ் மன்னர் ஜனவரியையும், பிரபரிவரியையும் ஒன்றினைப்பதற்கு முன்பு வரை மார்ச் மாதமே ரோமக் காலண்டரின் முதல் மாதம்.

ஏப்ரல்: ஏபரல் மாதப் பெயர் பிறந்தது பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. ‘திறக்குக’ எனும் பொருள் தரும் ‘அபேரிரே’ எனும் இலத்தீன் சொல்லிலிருந்துதான் ஏப்ரல் மாதத்திற்கு அப்பெயர் கிடைத்தது என்பது ஒரு கருத்து. ரோம ஐதீகப்படி எல்லா மாதங்களின் பெயர்களும் கடவுள் பெயரிலிருந்தே துவங்குகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் வீனஸ் தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது கிரேக்கர்கள் வீனஸை அஃப்ரோடைட் என்றே அழைக்கினறனர் அதன்படி வீனஸ் தேவதையின் மாதம் எனும் பொருள் தரும் ‘அப்லோரிஸ்’ என்னும் சொல்லே ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

மே: கிரேக்கக் கடவுளான ‘மாயியா’ வின் பெயரே மே மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
ஜூன்: ஜூபிடர் கடவுளின் மனைவியாக புராதன ரோமர்கள் கருதிய ’ஜூனோ’ என்பதிலிருந்தே ஜூன் மாதம் பிறந்தது ஜூலை: ரோமக் காலண்டரின் மாதமாக கருதப்பட்ட, இலத்தீன் மொழியின் ‘கவிண்டிலஸ்’ என அழைக்கப்பட்ட இம்மாதத்தில்தான் ஜூலியஸ் சீசர் பிறந்தார். அதையடுத்தே இம்மாதத்திற்கு ஜூலை எனப் புதுப்பெயர் சூட்டப்பட்டது

ஆகஸ்ட்: ஆகஸ்ட் மாதம் புராதன ரோமக் காலண்டரில் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது எனப் பொருள்படும் ‘ஸெக்டிலஸ்’ எனும் இலத்தீன் சொல்லே துவக்ககால ரோமக் காலண்டரில் இம்மாதத்தின் பெயராக ப் ப்யன்படுத்தப்பட்டிருந்தது. பிற்பாடு கி.மு எட்டாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியா நகரை வென்ற அகஸ்டஸ் சக்ரவர்த்தியின் சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இம்மாதத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

செப்டம்பர்: இலத்தீன் மொழியில் ‘ஏழு ‘ எனப்பொருள் வரும் “செப்டம்” என்ற சொல்லே புராதன ரோமர்களின் காலண்டரில் ஏழாவது மாதத்திற்கு வழங்கப்பட்டது. அதையொட்டி கிரிகோரியக் காலண்டரும் அப்பெயரைப் பின்பற்றியது. அக்டோபர்: இலத்தீன் மொழியில் ‘எட்டு’ எனப் பொருள் தரும் “அக்டோ” என்ற சொல்லிலிருந்து வந்ததே அப்பெயர். நவம்பர்: ஒன்பது எனும் பொருள் தரும் ‘நோவம்’ எனும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதே நவம்பர்.

டிசம்பர்: இலத்தீன் மொழியில் ‘பத்து’ எனும் பொருள் தரும் “டிசம்பர்” ரோமக் காலண்டரில் பத்தாவது மாதமாக இருந்தது. இந்திய தேசியக் காலண்டர் கி.பி. 78 இல் துவங்கும் சக காலண்டரே இந்தியாவின் தேசியக் காலண்டராக கருதப்படுகிறது.சாதவாஹன மன்னரான சாலிவாஹன் உஜ்ஜைனி மன்னர் விக்ரமாதித்தனை போரில் வென்றதையடுத்து சக வருடம் துவங்கியது . இந்தியாவில் கிரிகோரியன் காலண்டரும் சக வருடக் காலண்டரும் அதிகாரப் பூர்வமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 1957 இன் காலண்டர் மறு சீரமைப்பு கமிட்டியே சக காலண்டரை அதிகாரப் பூர்வ காலண்டராக அங்கீகரிக்கப் பரிந்துரை வழங்கியது.

கிரிகோரியன் காலண்டரின் 1957 மார்ச் 22 ஆம் தேதியில்தான் சக வருடத்தின் முதல் மாதமான சைத்ரம் 1 , 1879 இல் அதிகாரப் பூர்வமாகத் துவங்கியது. தமிழ்க் காலண்டர்: சூரியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. கிரிகோரியனைப் போன்றே சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்கள் இதிலும் உண்டு இஸ்லாமியக் காலண்டர்: முகமது நபி மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற நாளிலிருந்துதான் இஸ்லாமிக் காலண்டரின் வருடம் துவங்குகிறது. கி.பி. 622 இல் நிகழ்ந்தது நபியின் பயணம்.

சந்திரனை அடிப்படையாக கொண்ட இது 12 மாதங்கள் கொண்டது ஜூலியன் காலண்டர் கி.மு.45 இல் பிரபல வானியல் நிபுணராக இருந்த கோஸிஜின்ஸி என்பவரின் அறிவுரைப் படி இக்காலண்டரை நடைமுறைப் படுத்தியவர் ஜூலியஸ் சீசரே. தற்போது பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வரும் கிரிகோரியன் காலண்டரின் முன்னோடி இது. ஜூலியன் காலண்டரின்படி ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். “லீப் வருடம்” என்பது ஜூலியன் தந்த கொடையே.

ரிக்டர் அளவுகோல் எப்படி உருவானது உங்களுக்கு தெரியுமா?

ரிக்டர் அளவுகோல் எப்படி உருவானது உங்களுக்கு தெரியுமா?

அமெரிக்க நிலஅதிர்வுவியலாளர் 'சார்லஸ் ரிக்டர்' 1935ம் ஆண்டில் முதன்முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை
வரையறுத்தார். இது தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும். இதன் ஒரு யூனிட் அதற்கு முந்தைய யூனிட் அளவை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.

நில அதிர்வுகள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர்கள் வரை மிக அதிக மாறுபாடுகளைக் கொண்டதாக இருப்பதால், அவர் அளவுகளை இவ்வாறு வரையருக்க வேண்டியிருந்தது. ஆகவே ரிக்டர் ஸ்கேலில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றை விட 10x10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.

ரிக்டர் அளவில் 2.0க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவைகள் மைக்ரோ பூகம்பம் எனப்படும். இவை சர்வசாதாரணமாக தொடர்ந்து நடைபெறும். 6.0க்கு மேல் பதிவாகும் பூகம்பங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ரிக்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பூகம்பம் நிகழும் இடத்தைப் பொறுத்து ஒரே ரிக்டர் அளவைக்கு மாறுபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மக்கள் நெருக்கியடித்து வாழும் நகரின் மையத்தில் நிகழும் பூகம்பம் அளவிட முடியாத நாசத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அதே அளவு பூகம்பம் ஒரு தட்டையான வனப்பிரதேசத்தில் ஏற்பட்டால் அங்குள்ள வனவிலங்குகளைச் சற்று சிதறி ஓடுவதைத் தவிர வேறு பாதிப்புகளை உண்டாக்காமலும் இருக்க முடியும்.

பச்சோந்தி இடத்திற்கு இடம் எப்படி நிறத்தை மாற்றுகிறது

பச்சோந்தி இடத்திற்கு இடம் எப்படி நிறத்தை மாற்றுகிறது

பச்சோந்தி தான் இருக்கும் இடத்துக்கு ஏற்றாற் போல் தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும்
ஆற்றல் படைத்தது. இதற்குக் காரணம் அதன் தோலில் உள்ள நிற செல்களுக்கும் அதன் மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்து கொண்டேயிருப்பது தான்.

பச்சோந்திக்குக் காக்கை, கழுகுகளால் ஆபத்து அதிகம். அது மட்டுமல்லாமல் ஒரு பயந்த சுபாவம் கொண்ட பிராணி. அதனால் ஒரு நிமிடத்துக்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்ளும். பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. அது தனது ஒரு கண்ணால் ஓரிடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.

வெளவால்கள் தனது திசையை கணிப்பது எப்படி

வெளவால்கள் தனது திசையை கணிப்பது எப்படி

வெளவால்கள் எவ்வாறு திசைகளை கண்டுபிடித்து பறக்கின்றன என்பதை கண்டறிய ஒரு ஜி.பி.எஸ். கருவியை ஜெருஸலம்
பல்கலை கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். தங்களது இலக்குகளை திறம்பட நிர்ணயம் செய்வதில் வீட்டுப்புறாக்களை விட பழ வெளவால்கள் திறமையானவை என இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எகிப்திலுள்ள பழ வெளவால்கள், மலைகள் மற்றும் மக்கள் குடியிருப்புக்களில் தெரியும் வெளிச்சம் போன்றவற்றை அடையாளமாக வைத்தே வேறிடத்துக்கு செல்லவோ அல்லது மீண்டும் அதே இடத்துக்கு திரும்பி வரவோ செய்கின்றனவாம். வெளிச்சம் இல்லாத காலங்களில் அவை ஏதோ ஒரு உள்ளுணர்வின் அடிப்படையில் தங்களது இலக்குகளை மிக துல்லியமாக கணிக்கும் ஆற்றல் பெற்றவை என இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

சில வெளவால்களின் மீது ஒரு ஜி.பி.எஸ் கருவியை இணைத்து அவற்றை ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பறக்க விட்டார்கள். அவை சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு பழ மரத்திற்கு பறந்து சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தன. அதிசயமாக, அதே போன்ற பழ மரங்கள் வெளவால்கள் பறந்து சென்ற வழியில் வெகு அருகில் இருந்தாலும் அவை தாங்கள் வழக்கமாக செல்லும் ஒரு குறிப்பிட்ட மரத்திற்கே சென்று வந்தது தெரிய வந்தது.

இன்னும் சுவாரசியமாக, பட்டினியாய் சிலவற்றையும் இறையெடுத்த சில வெளவால்களையும் தங்களது இருப்பிடத்தைவிட்டு வெகு தொலைவுக்கு கொண்டு சென்று பறக்க விட்ட போது, இறையெடுத்தவை தங்களது சரியான இருப்பிடத்துக்கும், பட்டினியாய் இருந்தவை வழக்கமாக செல்லும் பழ மரங்களுக்கு சென்று பின்னர் தங்களது இருப்பிடத்துக்கு திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உலகின் மிகப் பெரிய பூச்சி உங்களுக்கு தெரியுமா? (படங்கள் இணைப்பு)

உலகின் மிகப் பெரிய பூச்சி உங்களுக்கு தெரியுமா? (படங்கள் இணைப்பு)

உலகின் மிகப் பெரிய பூச்சி இனமாக நியூசிலாந்திலுள்ள பூச்சி இனம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. இது நியூசிலாந்தின்
Little Barrier தீவில் பிடிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னாள் பூங்காக் காவலாளியான மார்க் (53) என்பவர் மரமொன்றிலிருந்துபிடித்துள்ளார். இந்த இராட்சதப் பூச்சி அத்தீவில் மட்டுமே காணப்படும் பூச்சி இனமாக கூப்படுகிறது. அண்மையில் பிடிக்கப்பட்ட இப் பூச்சியே தற்போது உலகின் மிகப்பெரிய பூச்சியாகவும் பதியப்பட்டுள்ளமை சிறப்பம்சம் ஆகும்.

முன்னைய காலத்தில் இப் பூச்சி இனம் உயிர் வாழ்ந்தாலும் அவை எலிகளால் அழிக்கப்பட்டிருந்தது. இந்த இராட்சத பூச்சியின் சிறகின் விரிந்த அளவு 7 அங்குலமாக காணப்படுகிறது. இதன் நிறையும் 3 எலிகளின் அளவில் காணப்பட்டது. இதன் மற்றுமொரு விசித்திரமான விடயம் இது அவர் உணவாக கரட்டினை உட்கொள்கின்றமை. இவை சிலந்தி இனத்தை ஒத்தவையாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறத. எனினும் இவ் இனம் பற்றிய தனித்தவமான விடயங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

உலகில் மிக உயரமாக பறக்கும் பறவை உங்களுக்கு தெரியுமா?

உலகில் மிக உயரமாக பறக்கும் பறவை உங்களுக்கு தெரியுமா?
உலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை பார் ஹீதேத் கூசே Bar Headed Goose ஆகும் . இது
ஆச்சரியப்படதக்க் உயரமான 10,175 m (33,382 feet) பறக்க வல்லது. இதனால் வருடத்துக்கு 3-8 முட்டைகளை இடும் இந்த பறவையால் உலகின் மிக உயரமான மலையான இலகுவாக எவரெஸ்யை இலகுவாக 8,848 m (29,028 feet) பறக்க முடியும். இதனால் ஒக்சிசன் மிக குறைந்த இடத்திலும் சுவாசிக்கவும் அதனுடைய உடல் வெப்பநிலையை இழக்காமல் கட்டுபடுத்தவும் முடியும் இதனால் ஒரு நாளைக்கு 1000 மைல் தூரத்தை ஜெற் வேகத்தில் பறக்க முடியும் இதனுடைய நீளம் 71–76 cm (28-30 in) உம் நிறை 1.87-3.2 kgஆகும்.


புயல் வேகத்தில் நீந்தக் கூடிய மீன்கள் - படங்கள் இணைப்பு

புயல் வேகத்தில் நீந்தக் கூடிய மீன்கள் - படங்கள் இணைப்பு

இவை தான் உலகிலேயே வேகமான மீன்கள். இந்த மீன்கள் கடலில் 75mph வேகத்தில் நீந்தும் தன்மை கொண்டவை. குறித்த வகையான மீன்கள்
வேட்டையாடுவதிலும் வல்லமை மிக்கவை. உலகின் வேகமான மீன்களான இவற்றை ஜேர்மனியைச் சேர்ந்த 47 வயதான Reinhard Dirscherl என்பவரே நுட்பமான முறையில் படம் பிடித்துள்ளார் ஏனெனில் இவ்வகை மீன்களை புகைப்படம் பிடிப்பது என்பது இயலாத காரியம். sailfish என அழைக்கப்படும் இந்த மீன்கள் குழுவாக சேர்ந்து தான் எப்போதும் நீந்தும் தன்மை கொண்டன. இந்த மீன்கள் மற்றைய மீன்களை வேட்டையாடுவதை இங்கே காணலாம்..



மனிதனது கண்ணில் பல நிறங்கள் காணப்படுவது ஏன்?

மனிதனது கண்ணில் பல நிறங்கள் காணப்படுவது ஏன்?

இயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற்குரியவை. அதில் மானிடப்
படைப்பு அதனினும் வியப்புக்குரியது. இதையே சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர். கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு(Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது கண் நிறம் ஒரு பல ஜீன (Polygenic) கூறு ஆகும். கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில் (Pigments) அளவை வைத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனிதர்களிடத்திலும் விலங்குகளிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது.

மனிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றனர் மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழிவெண்படலம் (cornea) முன்னாலும், அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் (iris) என்ற தசையாலான திரையும் உள்ளன. கருவிழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது; மெலனின் என்ற நிறமிப் பொருளுடன் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலனின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும்.

பறக்கும் போது படுக்கும் அதிசய பறவை - உங்களுக்கு தெரியுமா

பறக்கும் போது படுக்கும் அதிசய பறவை - உங்களுக்கு தெரியுமா
அல்பட்ரோஸ் (ஆல்பட்ரோஸ்) பறவைகள் மிகத் திறனுடன் காற்றோட்ட வேறுபாடுகளைப் பயன்படுத்தி அதிக அலுப்பின்றி வெகு தொலைவு பறக்க வல்லவை.
இவை நீரில் வாழும் கணவாய் (squid) மீன குறில் (krill) முதலியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றன. ஆல்பட்ரோஸ் பறவைகள் கடலிடையே உள்ள சிறு தீவுகளில் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. ஆல்பட்ரோஸ் பறவைகள இணையாக வாள்ணாள் முழுவதும் ஒன்றாகவே (இணை பிரியாமல்) வாழ்கின்றன. இனப்பெருக்கக் காலங்களில் ஒரு முறைக்கு ஒரு முட்டைதான் இடுகின்றன.அல்பட்ரோஸ் (ஆல்பட்ரோஸ்) தென்முனைப் பெருங்கடலிலும் வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற் பறவையினமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும் பெரிய அலகும் மிகப்பெரிய இறக்கை விரிப்பளவும் கொண்டவை.

சதை இணைப்புள்ள கால் அடிகள் (கொய்யடிகள்) கொண்டவை. இப் பறவையினம் இன்று உயிர் வாழும் பறவையினங்களிலேயே மிகப் பெரியவைகளின் ஒன்றாகும். இவ்வினத்தின் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் Diomedeidae என்பதாகும். இவ்வினத்தில் 21 வகையான உள்ளினங்கள் உள்ளன ஆனால் அவற்றுள் 19 இனங்கள் மிக அருகிய உயிரினப்பட்டியலில் உள்ளன. பெரும் வெண் ஆல்பட்ரோஸ் என்னும் பறவையின் இறக்கை விரிப்பளவு இன்றுள்ள பறவைகள் யாவற்றினும் மிக நீளமானது.

சிலந்தி கட்டிய வலையில் சிலந்தி சிக்குமா?

சிலந்தி கட்டிய வலையில் சிலந்தி சிக்குமா?

சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை! ஏன் தெரியுமா? சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும்
இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு இழைகளில்தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்ட இழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க, அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன.


பூமியில் நீர் உருவானது எப்படி?

பூமியில் நீர் உருவானது எப்படி?

பிரபஞ்சவெளியில் பூமியில் மட்டும் உயிரினங்கள் உருவாக காரணம்  நீர் ஆனால் அந்த நீர் எப்படி உருவானாது என்பது விஞ்ஞானிகளின் மண்டையை குடைய
வைக்கும் கேள்வி  . இக்கேள்விக்கான பல்வேறுபட்ட விடைகள் விஞ்ஞானிகளிடையே காணப்பட்டாலும் தற்போது அனைவரும் ஏற்ககூடிய அறிவியல் தீர்வை விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர் . முதலில் அரோர எனப்படும் மாயாஜால ஒளியை பற்றி காண்போம்

பூமியின் துருவபகுதிகளில் காணப்படும் அதிகப்படியான காந்த ஈர்பினால் காற்றில் உள்ள மூலக்கூறுகள் மின்சக்தி பெறுகின்றன இதனால் சூரிய ஒளியில் அணுக்கள் மின்னேற்றம் பெற்று ஒளிருகின்றன இதை பார்த்தால் வர்ணஜாலமாய் கண்களுக்கு விருந்து படைக்கும்  

அரோரா ஒளியை பற்றி  லூயிஸ்டிராங்கு எனும் ஆய்வாளர்  ஆராய்ந்து வந்தார்  வளிமண்டல அடுக்கினுள் சூரிய ஒளி விழும்போது  பூமியின் பகல் பகுதிகளில் புற ஊதாக்கதிர்களின் ஒளி அலை நீளங்கள் பிரகாசமாய் அரோராவாய் ஒளிரும் இதை ஆராய்ச்சி செய்ய முனைந்த டிராங்கு டைனமிக் எக்பிளோரர் எனும் செயற்கைகோளின் மூலம்  புற ஊதாக்கதிர்களை புகைப்படம் எடுத்து ஆராய்ந்தார் அதில் பூமின் பகல் பகுதிகள் பிரகாசமாய்  ஒளிர்ந்தது ஆனால் அதில் சில கரும்புள்ளிகள் காணப்பட்டன அடுத்தடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கரும்புள்ளிகள் நகர்ந்து நகர்ந்து காணப்பட்டது . கரும்புள்ளிகள் ஏற்பட என்ன காரணம் என்று ஆராய்ந்த போது  நீர் மூலக்கூறுகள் என்று கண்டார் .

பூமியின்  வளிமண்டலத்தின்  உயர் அடுக்குகளில் நீர் மூலக்கூறுகள் சாத்தியம் இல்லை  ஆனால் புகைப்படத்தில்  கரும்புள்ளிகளாய்   நீர் வந்தது எப்படி என்று மேலும் மேலும் ஆராய்ந்தார் முடிவில் வால்நட்சத்திரத்தில் இருந்து சிறு சிறு பனிக்கட்டிகளாக பூமின்மேல் விழுகிறது  அதனால்தான் புகைப்படத்தில் கரும்புள்ளிகள் தோன்றின எனக்கண்டறிந்தார் . வால்நட்சத்திரம்  என்பது பாதிக்கு பாதி நீர் நிறைந்தது . பல மில்லியன் ஆண்டுகளாக இவ்வாறு வால்நட்சத்திரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நீரை பெற்றதால் பூமியில் கடல்கள், ஆறுகள் ,ஏரிகள் போன்ற நீர் நிலைகள் தோன்றின என லூயிஸ்டிராங்கு கூறினார் ஆனால்  இக்கருத்து சரியல்ல என்று  ஒரு சில விஞ்ஞானிகள்  வாதிடுகின்றனர்  மற்றும்  சிலரோ  இக்கருத்தை  தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கின்றனர் எது எப்படியோ அறிவியல் என்பது மக்களுக்கு நன்மைகளை  செய்தால் நல்லதுதானே .

சுடோகு புதிரை தீர்ப்பது எப்படி - கத்துக்கலாம் வாங்க

சுடோகு புதிரை தீர்ப்பது எப்படி - கத்துக்கலாம் வாங்க
இன்று உலகம் முழுவதும் சிறுவர்களாளும் பெரியவர்களாளும் விரும்பி ஆடப்படும் கணித விளையாட்டு சுடோகு ஆகும்.சுடோகு என்பதின்
பொருள் எண் – இடம் என்பதாகும். 1980 ன் ஆரம்பத்தில் ஜப்பானில் தொடங்கிய சுடோகு விளையாட்டு 2000 ஆண்டு வாக்கில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரவியது.

9 * 9 = 81 அமைப்பு கொண்ட சதுரங்களை கொண்டது எனவே இதில் 81 சதுரங்கள் உள்ளது. இதில் 3 * 3 = 9 சதுர அமைப்பு கொண்டது ஒரு அறை ஆகும் எனவே ஒரு சுடோகில் மூன்று அறைகள் இருக்கும்.
இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் பள்ளிகூடங்களில் சுடோகு சொல்லி தரப்படுகிறது . சுடோகு புதிரை தீர்ப்பதின் மூலம் தர்க்க ரீதியான அறிவு பல மடங்கு பெருகுகிறது என்பது அறிவியல் மூலம்  நிரூவிக்கப்பட்டுள்ளது.

சுடோகு புதிரை தீர்க்க மிகநுண்ணிய கணித அறிவு கூட்டல் , கழித்தல் பெருக்கள் செயல்பாடுகளும் தேவையில்லை என்பது சுடோகின் சிறப்பம்சம் தர்க்க ரீதியாக எண்களின் இடம் பற்றி சிந்திக்கும் எவரும் சுடோகு புதிரை எளிதில் தீர்க்க முடியும்.

சுடோகு புதிரில் 6,670,903,752,021,072,936,960 தீர்வுகள் இருக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது நமது அண்டத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகம்
                                                                           
விளையாடும் முறை
1. ஒவ்வொறு அறையிலும் 1 முதல் 9 வரை உள்ள எண்களை ஒரு முறை மட்டுமே எழுத வேண்டும்.
2.ஒவ்வொரு கிடைமட்ட(Row) வரிசையிலும் 1 முதல் 9 வரையுள்ள எண்கள் ஒரு முறை மட்டுமே வர வேண்டும்
3. ஒவ்வொரு நெடு(column) வரிசையிலும் 1 முதல் 9 வரையுள்ள எண்கள் ஒரு முறை மட்டுமே வர வேண்டும்
சுடோகு புதிரை தீர்க்கப்பழகுங்கள் வாழ்கையில் தீர்க்கமான முடிவை எடுக்கும் தர்க்க அறிவை பெற்று உயருங்கள் .

ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம்!

ஆணாக இருந்து கர்ப்பமாகி குழந்தை பெறும் ஒரே உயிரினம்!

கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால்,
ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கிறது.

பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும். உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளான கடற்புற்கள் பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில் வாழ்கின்றன இவற்றின் முக்கிய உணவு இறால்களாகும்.

கடல் குதிரைகள் தங்களின் வாலைப் புல்களில் கட்டிக்கொண்டு நிற்க முடியும். இதன் உடல் கடினமான எலும்பு போன்ற பொருள்களினால் ஆன போதிலும் நண்டு பெங்குவின் முதலியன இவற்றை வேட்டையாடி உண்கின்றன. பெரும்பாலான மீன்கள் கடல் குதிரையைக் கண்டுகொள்வதில்லை.கடல் குதிரைக்குக் கடலில் உள்ள விரோதிகளைக் காட்டிலும் நிலத்தில் உள்ள விரோதியான மனிதன் தான் மிகுந்த தொல்லை கொடுக்கிறான். மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள் முட்டையிடுகின்றன.

முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும். இதில் பிரச்சனை என்னவென்றால் கடல்குதிரையின் இனப்பெருக்க வேகம் மிகவும் குறைவு. மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல் குதிரைகளுக்குத் தான் வேகம் வருவதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது.

"உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று கொள்ள முடியும்"

மனித வாழ்வும் மாறுபட்ட கணிதமும்

மனித வாழ்வும் மாறுபட்ட கணிதமும்

1.   நல்லவைகளை கூட்டிக்கொள்ளுங்கள்(கூட்டல்)
2.   தீயவைகளை
கழித்துக்கொள்ளுங்கள்(கழித்தல்)
3.   அறிவை பெருக்கிக்கொள்ளுங்கள்(பெருக்கல்)
4.   நேரத்தை வகுத்துக்கொள்ளுங்கள்(வகுத்தல்)
5.   இன்பங்களையும் துன்பங்களையும் சமமாக கருதுங்கள்(சமம்)
6.   செலவை குறைத்து வரவை பெருக்குங்கள்(லெஸ்தன்)
7.   அன்பை பெருக்கி ஆணவத்தை குறையுங்கள்(கிரேட்டர்தன்)
8.    வாழ்க்கை முடிவுள்ளது எனவே முடிந்தவரை மற்றவர்க்கு உதவுங்கள் ( அடைப்புக்குறி )
9.   கடுமையான  உழைப்பினால் வளர்பிறைபோல வளருங்கள்  (சம்மேஷன்)
10. பிறரை மட்டுமே நம்பி வாழும் வாழ்வு நிலையற்றது ( பிளஸ் ஆர் மைனஸ் )

வேர்டில் கணித சமன்பாடுகளை உள்ளீடு செய்வது எப்படி ?

வேர்டில் கணித சமன்பாடுகளை உள்ளீடு செய்வது எப்படி ?

கணித சமன்பாடுகள் வாழ்வில் தவிர்க்க முடியாதவை குறிப்பாக பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கணித சமன்பாடுகளின் பயன்பாடுகள் மிக மிக அதிகம் . நம்மில்
பெரும்பாலோனர்கு MS Word இல் கணிதசமன்பாடுகளை உள்ளீடு செய்யலாம் என்பது தெரியாமலே இருந்திருக்கும் .அன்புள்ள  நட்பு நெஞ்சங்களே வாங்க ! வாங்க ! MS Word இல் கணிதசமன்பாடுகளை உள்ளீடு செய்ய கத்துக்கலாம்

MS Word 2003 அல்லது அதற்கு முந்தையை ஆபிஸ் பதிப்புகளில் கணிதசமன்பாடுகளை உள்ளீடு செய்ய  Insert மெனுவில் Object என்ற துனை மெனுவினுல் Microsoft Equation Editor என்பதை தேர்வு செய்ய வேண்டும் .பின்பு அதில் காணப்படும் வகைகெழுசமன்பாடு, தொகைகெழுசமன்பாடு ,அணிகள், Sin, Cos , Tan  போன்ற திரிகோணமிதி குறியீடுகள் என பல வகையான குறியீடுகள் உள்ளன . நமக்கு தேவையான  சமன்பாட்டு குறியினை தேர்வு செய்து x ,y,,z போன்ற மாறிகளையோ  அல்லது 1,2,3…… போன்ற மாறிலிகளையோ உள்ளீடு செய்து கொள்ளலாம்.

MS Word 2003 அல்லது அதற்கு பிந்தையை ஆபிஸ் பதிப்புகளில் Insert மெனுவின் கீழ் உள்ள பட்டியில் இருந்து Equation என்ற மெனுவினை நேரிடையாக தேர்வு செய்து கணித சமன்பாடுகளை உள்ளீடு செய்து கொள்ளலாம்

திருக்குறள் தெரிந்த பெயர் தெரியாத தகவல்

திருக்குறள் தெரிந்த பெயர் தெரியாத தகவல்
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள்,
இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப் பற்றி சில அரிய தகவல்..

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது. 
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

புதிருக்குள் புதிர் மனதுக்குள் எதிர்

புதிருக்குள் புதிர் மனதுக்குள் எதிர்
1. நான்கு ஒன்றுகளைக் கொண்ட மிகப்பெரிய  எண் எது ?

2.மூன்று இலக்கங்களை பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது
3.ஐந்து மூன்றுகளை பயன்படுத்தி  31 ஐ இரு வழிகளில் பெருக ?
4. கையை எடுக்காமலே நான்கு நேர்க்கோடுகளை பயன்படுத்தி கீழ்கண்ட ஒன்பது புள்ளிகளின் வழியே செல்ல முடியுமா ?                                                                                                                                        
5. 33 இலிருந்து 3 ஐ எத்தனை முறை கழிக்கலாம் ?
6. ஆறு தீக்குச்சிகளை பயன்படுத்தி ஒன்றுமில்லாத நிலையை எவ்வாறு உருவாக்கல்லாம் ?
7. 1 இலிருந்து 9 வரையுள்ள எண்களை வரிசையாக எழுதி கணித குறியீடுகள் பயன்படுத்தி 100  ஐப் பெருவது எப்படி?
8.எட்டு நேர்க்கோடுகளைப்பயன்படுத்தி இராண்டு சதுரங்களையும் , நான்கு செங்கோண முக்கோணங்களையும் பெறுவது  எப்படி ?
9. 81 * 9 = 108 என்ற சமன்பாட்டை எவ்வாறு உண்மை என்று நிரூபிப்பாய் ?
10. நான்கு ஏழினைப்பயன்படுத்தி  78 ஐ பெறுவதெப்படி ?  

மேற்கண்ட புதிர்களுக்கான விடைகள் வேண்டுமா ? கீழ்கண்ட சுட்டியை இயக்கி PDF கோப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .

Resume - தயாரிப்பு குறிப்புகள்

Resume - தயாரிப்பு குறிப்புகள்
Resume என்பது வேலை தேடுபவர்களின் மந்திர சொல் திறமையிருந்தும் Resume ஐ சரிவர தயாரிக்காத்தால்
வேலை இழந்தவர்கள் பலர். Resume என்பது உங்களைப்பற்றிய தெளிவான அறிமுகத்தை கொடுத்து உங்களுக்கு வேலை பெற்றுத்தருவதாகும்  . எனவே Resume தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் .கீழே கொடுக்கப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் Resume தயாரியுங்கள் .

*  நீங்கள் எந்த நிறுவனத்திற்கு Resume அனுப்பும் போதும் ,எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை ஒரு விண்ணப்பமாக எழுதி அதனுடன் Resumeஐ இணைத்து அனுப்புங்கள் .
* Resume எழுதும் போது தாளின் இடது ஓரத்தில் முதலில் உங்கள் பெயரினை தெளிவாக எழுதுங்கள், வலது ஓரத்தில் உங்களின் சமீபத்திய தெளிவான புகைப்படத்தை இணையுங்கள்.

*  அதிகப்படியான கட்டங்கள், கலர்ஷேடுகள், தெளிவற்ற ஃபான்ட் , அதிகமான அடிக்கோடு இடுதல் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்
*  இமெயில் முகவரியை குறிப்பிடும் போது உங்களின் பெயரோடு தொடர்புடைய இமெயில் முகவரியை கொடுங்கள் அதை விட்டு Jollyboy_Rsp@gmail.com போன்ற பெயர்கள் உடைய  இமெயில் முகவரியை கொடுக்காதீர்கள் அது எதிர்மறை விளைவுகளை ஏற்ப்படுத்தும்

*  நோக்கங்களை(Objective) தெளிவாக குறிப்பிடுங்கள்
*  கல்வித்துறை குறித்த தகவல்களை எளிமையாக கொடுங்கள்
*  உங்களின் தனித்துவமான திறனை குறிப்பிடுங்கள் அதை  தவிர்த்து கல்லூரியில் படித்த பாடங்களையெல்லாம் கொடுக்காதீர்கள்  உதாரணமாக
கல்லூரியில் படித்த J2EE,Visual Basic, Oracle, C++, HTML, Data Management போன்றவைகளை Resume இல் கொடுத்து இருந்தீர்களானால் அதை பற்றி உங்களை 10 நிமிடம் பேச சொன்னால் உங்களால் தொடர்ச்சியாக பேச முடியுமா  என யோசியுங்கள்.

* பிறந்த தேதி,திருமணநிலை, பாலினம், மதம் , தெரிந்த மொழிகள் போன்ற தனிப்பட்ட விவரங்களை சரியாக கொடுங்கள்.
*  Hw r u , Looking 4 ur reply , போன்ற SMS பாணியில் விவரங்களை கொடுக்காதீர்கள்
* நீங்கள் தயாரித்த Resumeஐ உங்களின் இரண்டு அல்லது மூன்று நண்பர்களிடம் கொடுத்து சரிபார்த்த பின்பே நிறுவனங்களுக்கு  அனுப்புங்கள்

*  இமெயிலில் அனுப்பும் போது PDF வடிவில் அனுப்புங்கள் இதனால்  ஃபான்ட் பிரச்சனைகள் தவிர்க்கப்படும்  
*  இமெயிலில் அனுப்பும் போது அட்டாச்மென்ட்களில் உங்களது Resumeக்கு உங்களின் பெயரில் பெயரிடுங்கள் உதாரணமாக   Guru resume போன்று கொடுங்கள் வெறுமனே Resume என  கொடுக்காதீர்கள்
*  இமெயிலில் அனுப்பும் போது சப்ஜெக்ட் லைனிலேயே முக்கியமான வார்த்தைகளை குறிப்பிடுங்கள் எக்காரணம் கொண்டும் சப்ஜெக்ட் இல்லாமல் இமெயில் அனுப்பாதீர்கள்
* உங்களது Resumeஐ அடிக்கடி புதிப்பியுங்கள் ஒரு முறை பிரின்ட் எடுத்துவிட்டு அதையே எல்லா நிறுவனங்களுக்கும் அனுப்புவதை தவிர்த்துவிடுங்கள் .

படத்தில் மொத்தம் எத்தனை சதுரங்கள் - கணிதப் புதிர்கள்

படத்தில் மொத்தம் எத்தனை சதுரங்கள் - கணிதப் புதிர்கள்

இந்த படத்தில் மொத்தம் எத்தனை சதுரங்கள் உள்ளன என்று உங்களால் கூறமுடியுமா ?


விடை
மொத்தம்  40 சதுரங்கள் . விடைகளை கீழே காணுங்கள்



















மொத்தம்  40 சதுரங்களை  சரிபார்த்தீர்களா ?

காக்டெய்ல் செர்ரி கலக்கல் கணிதப் புதிர்கள்

காக்டெய்ல் செர்ரி கலக்கல் கணிதப் புதிர்கள்

நம்ம வாத்தியார் சுஜாதா மனித மூளையை பற்றி தலைமைச்செயலகம் எனும் நூலில் தந்துள்ள “ காக்டெய்ல் செர்ரி” எனும் புதிரை அவர் கூறியவாறே கூறுகிறேன் விளக்கம் மட்டும் அடியேனுடையது
(வாத்தியார் சொன்ன விளக்கம்தான் இருந்தாலும் கொஞ்சாம் சிஷ்யனுடைய பங்களிப்பும் கொஞ்சம் இருக்கிறது சுஜாதா அபிமானிகள் மன்னிக்க )

 தலைமைச்செயலகத்திலிருந்து வாத்தியார் என்ன சொல்லி இருக்கார்னு பார்ப்போம்

“காக்டெய்ல் செர்ரி” என்கிற இந்த புதிர் மிகவும் பிரசித்தம் ஆனது .புத்திசாலிகளே திணறிப்போய் இதற்கு விடை கிடையாது என்று கைவிட்டிருக்கிறார்கள்.புதிர் மிக எளியது  நான்கு தீக்குச்சிகளை படத்தில் உள்ளவாறு வைக்க வேண்டும் .உள்ளே ஒரு செர்ரி பழம் ,ஆப்பிள், ஆரஞ்சு ஏதாவது பழம்.புதிர் என்னவெனில் இரண்டே இரண்டு தீக்குச்சிகளை மட்டும் இடம் மாற்ற வேண்டும் .பழம் கிளாஸுக்கு  வெளியே இருக்க வேண்டும் .கோப்பையின் வடிவம் மாறக்கூடாது.

விளக்கம்
வாத்தியார் கூறிய புதிரில் மேலே வலது இடது என இரண்டு தீக்குச்சிகள் உள்ளது .அதை தாங்கி பிடித்தவாறு  நடுவில் ஒரு தீக்குச்சியும் கோப்பையின் கைப்பிடி  போல ஒரு தீக்குச்சியும் ஆக மொத்தம் நான்கு தீக்குச்சிகள் உள்ளது. இப்போது முதல் நகர்தலாக தாங்கி பிடித்தவாறு உள்ள தீக்குச்சியை வலப்புறமாக நகர்துங்கள் எதுவரை  தெரியுமா .மேலே வலப்புறம் உள்ள தீக்குச்சிவரை  .முதல் நகர்த்தலின் முடிவில் கீழ்கண்டவாறு படம் மாறி இருக்கும்  

இரண்டாவது நகர்தலாக மேலே இடதுபுறம் உள்ள தீக்குச்சியை எடுத்து கீழ்புறம் நோக்கி வைக்க வேண்டும் .இரண்டுதீக்குச்சிகளை மட்டும் நகர்த்தியதில் செர்ரி பழம் வெளியே வந்து விட்டது .ஆனால் “ஷேப்” அதாங்க வடிவம் மாறவில்லை படம் கீழே கண்டவாறு மாறி இருக்கும்
                              
விளக்கியதில் பிழையிருந்தால் அடியேனை மன்னிச்சுக்குங்க  விளக்கம் புரிஞ்சு இருந்தால் நம்ம வாத்தியாருகு ஒரு “ ஜே “ போடுங்க.