Breaking News

இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மார்ச் 26

இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மார்ச் 26

  • வங்கதேச விடுதலை மற்றும் தேசிய தினம்(1971)
  • ஜொனாஸ் சால்க் தனது போலியோதடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்(1953)
  • மியான்மரின் புதிய தலைநகராக நாய்பிடோ நகரம் ராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது(2006)
  • யு.கே.,ல் வாகன ஓட்டுனர்களுக்கான தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது(1934)

டெல்லி டெஸ்ட் போட்டியின் வரலாற்று சாதனை உங்களுக்கு தெரியுமா

டெல்லி டெஸ்ட் போட்டியின் வரலாற்று சாதனை உங்களுக்கு தெரியுமா

இந்திய கிரிக்கெட் அணியின் மீதான கடும் விமர்சனங்கள் அனைத்தையும் தகர்த்து எறிந்திருக்கிறது டெல்லி டெஸ்ட் போட்டியின் வெற்றி! 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன் வரலாறு பேசக் கூடிய சாதனைகளையும் இந்திய கிரிக்கெட் அணி சாதித்திருக்கிறது.

கேப்டன் டோணி தலைமையிலான இந்திய அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டது. அப்போது 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா மண்ணில் தோல்வியைத் தழுவியது. இதன் பின்னர் ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

பின்னர் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன. இதில் அனைத்திலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார சாதனை நிகழ்த்தியுள்ளது. கடைசிப் போட்டியான டெல்லி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது மூலம் பல வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் : டெல்லி டெஸ்டில் நேற்று ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் வீழ்ந்தன. மேலும் 3வது நாளிலேயே போட்டியின் முடிவும் கிடைத்து விட்டது.

2-வது முறை : ஆஸ்திரேலியாவை 3 நாட்களுக்குள் இந்தியா தோற்கடித்து இருப்பது இது 2-வது முறையாகும். கடந்த 2004-ம் ஆண்டு மும்பை டெஸ்ட் போட்டியில் இதேபோல் சீக்கிரம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.

கேப்டன் டோணியின் அதிக வெற்றி : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த ஒட்டுமொத்த கேப்டன்களின் பட்டியலில் இந்திய கேப்டன் டோணி 3-வது இடத்தில் இருக்கிறார். மேற்கிந்திய தீவுகள் அணி 12 முறையும் இங்கிலாந்தின் மைக் பிரியர்லி 11 முறையும் வென்றுள்ளனர். கேப்டன் டோணி, இங்கிலாந்தின் டபிள்யூ.ஜி.கிரேஸ் ஆகியோர் தலா 8 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளனர்.

4 போட்டியிலும் டாஸ் ஜெயித்த ஆஸி. : தற்போது முடிவடைந்த தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளிலுமே ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றது. 136 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் ஒரு தொடரில் ஒரே அணியே 4 மற்றும் அதற்கு மேல் டாஸில் வெற்றி பெற்றிருப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 1978-79-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் 5-ல் டாஸ் வென்றது. ஆனால் அந்த தொடரிலும் 1-5 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோற்று போய் இருந்தது.

இந்தியாவில் 7-வது தோல்வி : இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக தழுவிய 7-வது தோல்வி (2008-ல் ஒன்று, 2010-ல் இரண்டு, 2013-ல் 4) இதுவாகும். இந்திய மண்ணில் தொடர்ந்து அதிக தோல்வியை சந்தித்த வெளிநாட்டு அணி ஆஸ்திரேலியா தான். ஆஸ்திரேலியா இதற்கு முன்பு 1967-1994-ம் ஆண்டு காலத்தில் தென்ஆப்பிரிக்காவில் தொடர்ந்து 6 டெஸ்ட் போட்டிகளில் தோற்றது அவர்களின் மோசமான பயணம்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அளிக்க இணையதள வசதி - யு.ஜி.சி.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அளிக்க இணையதள வசதி - யு.ஜி.சி.

கல்வித் துறைகளில், ஆசிரியர் பணி, ஆராய்ச்சிப் பணிகள் உள்ளிட்ட, பல்வேறு வேலை வாய்ப்புகளை, இணையதளம் வழியாக
பெறுவதற்கு, யு.ஜி.சி., ஏற்பாடு செய்துள்ளது. இதற்கென, தனி இணையதளத்தை துவக்கி உள்ளது.

இதில், வேலை எதிர்பார்ப்போர், வேலை தரும் கல்வி நிறுவனங்கள் என, இரு பிரிவினரும், பதிவு செய்து கொள்ள வேண்டும் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. "நெட், செட்" மற்றும் பி.எச்டி., முடித்தவர்கள், கல்லூரி மற்றும் பல்கலைகளில், வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக, www.ugc.ac.in என்ற தனி இணையதளம் வழியாக, புது இணையதள வசதியை, யு.ஜி.சி., ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, மேற்படி கல்வி தகுதியைக் கொண்டவர்கள், தங்களைப் பற்றிய விவரங்களை, பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.தாங்கள் எதிர்பார்க்கும் வேலைகளை, அதில் குறிப்பிடலாம்.

அதேபோல், வேலைவாய்ப்புகளை அளிக்க விரும்பும் கல்வி நிறுவனங்களும், தங்கள் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பு விவரங்களை, இந்த இணையதளத்தில் வெளியிடலாம். இரு தரப்பினரையும், சந்திக்க வைப்பதன் மூலம், நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என, யு.ஜி.சி., நம்புகிறது.

கல்லூரிகளில், ஆசிரியர், முதல்வர் உள்ளிட்ட, பணிகளை எதிர்பார்த்து, இதுவரை, 27 ஆயிரத்து 276 பேர், பதிவு செய்துள்ளனர்.

இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மார்ச் 24

இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மார்ச் 24
1) சர்வதேச காசநோய் தினம்
2) கிரீஸ் குடியரசு நாடானது (1923)

3) இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த தினம்(1776)
4) தமிழ் திரைப்பட பிரபல பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் பிறந்த தினம்(1923)
5) கர்நாடக இசைப்பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் இறந்த தினம்(1988)

நில நடுக்கத்தால் தங்கமாகும் தண்ணீர் - ஆய்வில் தகவல்

நில நடுக்கத்தால் தங்கமாகும் தண்ணீர் - ஆய்வில் தகவல்

நிலநடுக்கத்தால் பூமிக்கு அடியில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும் என்பதை
கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நியூசிலாந்து நாட்டில் நிலத்தடியில் இருக்கும் நீர் தங்கமாக மாறுவதாக ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து பல்கலைகழக புவியியல் துறையின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பூமியில் நிலநடுக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நடைபெற்ற இந்த ஆய்வில் ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போதும் நீர் மூலக்கூறுகள் தங்கமாக மாற்றமடைவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
மேலும் இந்த ஆய்வில்,"நிலநடுக்கத்தால், பூமியின் அடிப்பகுதியில் உள்ள நீர், அதிக அழுத்தத்திற்கு உட்படுகிறது.
இதனால் நீர் மூலக்கூறுகள் இரசாயன மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இந்த மாற்றம் பூமியின் மத்திய பகுதியில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக மேலும் சில மூலகங்களுடன் இரசாயனமாற்றத்திற்கு உள்ளாகின்றன. இதனால் பல மாற்றங்களுக்கு பின் நீரானது தங்கமாக மாறுகிறது. என்று கூறியுள்ளனர்.
சாதாரணமாக இந்நிகழ்வு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது.ஆனால் நியூசிலாந்தில் நிலவும் சாதகமான தட்ப வெட்ப நிலையின் காரணமாக வெகு விரைவிலேயே இந்த மாற்றம் நிகழ்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன"என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியை சிதைக்க வரும் எரிகல் - கடவுளைப் நாட சொல்லும் நாசா

பூமியை சிதைக்க வரும் எரிகல் - கடவுளைப் நாட சொல்லும் நாசா

பூமியை நோக்கி விரைவாக வந்துகொண்டிருக்கும் எரிகல்லின் தாக்கத்தை
எவ்வாறு சமாளிப்பது என்னும் கேள்விக்கு, அந்த எரிகல் பூமியை தாக்ககூடாது என கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள் என நாசா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூமிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் 95 சதவிகித எரிகற்களை நாசா கண்காணித்து வருகிறது. அதில் ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய எரிகற்களும் அடங்கும்.

10,000-க்கும் மேற்பட்ட நகரங்களை தாக்கி அழிக்கும் எரிகற்களில், 50 மீட்டர் விட்டமுடைய வெறும் 10 சதவிகித எரிகற்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. விண்ணிலிருந்து அறியமுடியாத விண்பாறைகள் மற்றும் எரிகற்கள் பூமியை தாக்குவதை சமாளிப்பது குறித்து முடிவெடுக்கவேண்டியது அனைத்தும் அமெரிக்காவை சார்ந்து இருக்கிறது.

இந்நிலையில், நியூயார்க் நகரை நோக்கி வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய எரிகல்லை எப்படி சமாளிப்பது என்பது குறித்து நாசாவின் தலைமை அதிகாரி சார்லஸ் போல்டேன் கூறுகையில், இந்த எரிகல்லின் தாக்கத்தை குறித்து ஆலோசிக்க வேண்டும். எரிகல்லை திசைத்திருப்ப முயற்சி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக நீங்கள் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.

கடந்த பிப்ரவரி மாதம் 17 மீட்டர் விட்டமுடைய எரிகல் ஒன்று ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் என்னுமிடத்தை நோக்கி வந்தது. அதன் பிறகு மிகப்பெரிய எரிகல் ஒன்று சமீபத்தில் பூமியிலிருந்து 17,200 மைல் தூரத்திற்கு அப்பால் வந்து சென்றதை நமது விண்கலங்கள் படமெடுத்தன. பூமியை தாக்கும் எரிகற்களை திசைதிருப்புவது சம்பந்தமாக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து பன்னாட்டு ஒத்துழைப்பை நாசா எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்தார்.

இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மார்ச் 23

இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மார்ச் 23


  • உலக வானிலை தினம்
  • பாகிஸ்தான் குடியரசு தினம்(1956)
  • தமிழக அறிவியலாளர் ஜி.டி.நாயுடு பிறந்த தினம்(1893)
  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் இறந்த தினம்(1931)
  • கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது(1868)

இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மார்ச் 22

இன்றைய நாள் பொது அறிவு தகவல் - மார்ச் 22
1) உலக தண்ணீர் தினம்
2) இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்-ஐ அறிமுகம் செய்தது(1993)
3) அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது(1945)
4) லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை முதன் முதலாக காண்பித்தனர்(1895)
5) ஆர்தர் ஷாவ்லொவ் மற்றும் சார்லஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தை பெற்றனர்(1960)

சராசரி மனிதனின் பொது அறிவு தகவல்கள்

சராசரி மனிதனின் பொது அறிவு தகவல்கள்

  • சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
  • மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
  • சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட் 
  • மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோ மீ்ட்டர்
  • மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு 
  • மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு 
  • மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள் 
  • இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள் 
  • மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம் 
  • மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
  • மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்:
கண் - 31 நிமிடம்
மூளை - 10 நிமிடம்
கால் - 4 மணித்தியாலம்
தசை - 5 நாட்கள்
இதயம் - சில விநாடிகள்
  • உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
  • Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"
  • 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால் 12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.
  • சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
  • சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்டர்
  • மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோ மீட்டர்
  • மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு
  • மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்டர்
  • மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு
  • மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
  • இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்
  • மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
  • மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000
  • தும்மும் போது 'நன்றாய் இரு", "இறைவனுக்கு நன்றி" அல்லது அம்மா, அப்பா என்று ஏதாவது சொல்லக் கேட்டிருப்போம். தும்மும் போது இதயம் ஒரு "மில்லி செகண்ட்" நிற்குதாம்
  • எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
  • வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"
  • உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் உயிரினம் - கொசு
  • பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

இன்று உலக நீர் வள நாள்

இன்று உலக நீர் வள நாள்

மார்ச் 22ம் நாள் ஆன இன்று உலக நீர் வள நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டின் நீர் வள நாளின் தலைப்பு ''தண்ணீர் ஒத்துழைப்பு" என்பதாகும். இந்த தலைப்பு ஐ.நா பேரவை கூட்டத்தில் உறுதி படுத்தப்பட்டது.

சுற்று சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐ.நா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்》படி 1993ம் ஆண்டு ஜனவரி 18ம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றிது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்த திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தப்படும்.

1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21 ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993 ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22 அன்று உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளையில் நீர் வள மாசுபாட்டினால் மனித குலத்தின் உடல் நலமும் கெடுகின்றது. உலகில் ஆண்டு முழுவதும் வெளியேறும் கழிவு நீர் அளவு 40 ஆயிரம் கோடி டன் எட்டும். இதன் விளைவாக 5 லட்சம் கோடி டன் நீர் மாசுப்படுகின்றது. பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மாசுப்படுத்தப்பட்ட நீரை குடித்த பின் நோய் கண்டு உயிரிழந்தனர். கடந்த சில ஆண்டுகளாக, நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் நெருக்கடி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பின் மூலம் குடி நீர் வள நிர்வாகத்தை வலுப்படுத்தி, நீர் பயன்பாட்டை சிக்கனப்படுத்தி மாசுபடுவதைக் குறைக்க வேண்டும். அத்துடன் வட்டார நீர் வள விநியோகப் பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொது அறிவு தகவல்கள்

பொது அறிவு தகவல்கள்
1. 155 மில்லிமீட்டர் நீளமுள்ள அதி நவீன பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது. இதன் பெயர் பீம் இடம் சென்னை ஆண்டு 1996. 



2. உலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர் ஈனோவிட். 

3. உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் சீனர்கள். 

4. உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர் ‘அலொசிபஸ்டிரிகொடிஸ்’ எண்பது கிராம் எடையுள்ள இந்த குரங்கினம் மடகாஸ்கர் பகுதியில் காணப்படுகிறது.

5. உலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள் அமெரிக்கர்கள். 

6. இறக்கையில்லாத பூச்சிகளுக்கு ஆப்டாஸ் பூச்சிகள் என்று பெயர். 

7. தமிழ் தேசிய மொழியாக உள்ள நாடுகள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர். 

8. உலகின் பெரிய கடல் ஏரி காஸ்பியன் கடல். 

9. ஐ.நா சபையின் முதல் செயலர் டிபிக்யூலி. 

10. இந்து பல்கலைக்கழகத்தை அமைத்தவர் மாண்டவ் சிங் மாளவியா. 

புதிரான பொது அறிவு தகவல்கள்

புதிரான பொது அறிவு தகவல்கள்

1. எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா. 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது. 


2. பிரபஞ்சம் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. பிரபஞ்சம் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. 

3. சூரியன் 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. 

4. இந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன. 

5. இந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில் இயக்கப் படுகிறது. 

6. சென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ. 

7. ஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான  பத்திரிக்கை மும்பை சமாச்சார். 

8. இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.

9. டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில் எடுத்தவர் டெண்டுல்கர். 

10. ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121 ஆண்டுகள் ஆகின்றன. 

பொது அறிவு வினா விடைகள் - 9

 பொது அறிவு வினா விடைகள் - 9

9. சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
காம்டே.

10.பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
ஜார்கண்ட்.

11. தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?
ஈரோடு.

12. 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?
ஜெர்மனி.

13. சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
பதிற்றுப்பத்து.

14. தமிழகத்தின் தேசிய பறவை எது?
புறா.

15. தமிழ் தாய் வாழ்த்து எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
மனோன்மணியம்.

16. உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?
ஸ்புட்னிக் 1.

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற இடம் - உங்களுக்கு தெரியுமா

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற இடம் - உங்களுக்கு தெரியுமா
காந்தி ஸ்ம்ருதி என்று அழைக்கப்படும் இந்த பழமையான இல்லத்தில்தான் தேசப்பிதா
மஹாத்மா காந்தி தனது வாழ்நாளின் கடைசி 144 நாட்களை கழித்துள்ளார். அக்காலத்தில் இந்த காந்தி ஸ்ம்ருதி இல்லமானது பிர்லா ஹவுஸ் அல்லது பிர்லா பவன் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த நூற்றாண்டின் அரிய தலைவர்களுள் ஒருவராக அறியப்படும் மஹாத்மா காந்தி இந்த இடத்தில்தான் நாதுராம் கோட்ஸே எனும் மனிதனால் 1948, ஆகஸ்ட் 15ம் நாள் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

1971ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட பிர்லா இல்லம் 1973 ஆகஸ்ட் 15ம் நாள் முதல் பொதுமக்கள் பார்வைக்கு காந்திஜி நினைவு இல்லமாக திறந்துவிடப்பட்டது.

இங்குள்ள தியாகித்தூண் எனப்படும் இடத்தில்தான் காந்திஜி சுடப்பட்டார். மேலும், இந்த நினைவு இல்லத்தில் காந்திஜியின் வாழ்க்கை மற்றும் மரணத்தோடு தொடர்புடைய ஞாபகார்த்தப் பொருட்கள் பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஒருகாலத்தில் பிர்லா குடும்பத்தினரின் இருப்பிடமாக விளங்கிய இந்த வீடு காந்திஜி டெல்லிக்கு வரும்போதெல்லாம் தங்கும் இடமாக இருந்துள்ளது. தற்போது காந்திஜி மியூசியமாக காட்சியளிக்கும் இந்த இல்லத்தில் அவரது அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய நூல்கள் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. இந்த நினைவு இல்ல வளாகத்தில் உள்ள தூணில் ஒரு ஸ்வஸ்திக் சின்னமும் அதற்கு மேலே ‘ஓம்’ என்ற எழுத்துக்களும் காணப்படுகின்றன.

காந்திஜி நீங்கள் மதிக்கும் மாமனிதர்களுள் ஒருவராக இருப்பின் (அப்படி இல்லாமல் இருக்க வாய்ப்பில்லைதான்) டெல்லி வரும்போது அவசியம் நீங்கள் விஜயம் செய்ய வேண்டிய ஒரு இடமே இந்த காந்தி ஸ்மிருதி.
இந்த சூழலின் நிசப்தமும், ஒரு வரலாற்று கொடுமையின் சாட்சியமாக இருந்த இந்த மண் இன்றும் அந்த சோகத்தை உங்களோடு பகிர்வது போன்ற அமானுஷ்யமும் உங்களால் வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது.

உலக வரலாற்றின் பக்கங்கள் முழுதும் மாமனிதர்களின் தியாகக்குருதியால் நிரம்பி உள்ளன எனும் விசித்திரசோகமான உண்மையையும் நம்மால் இந்த ஸ்தலத்தில் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியாது.

இந்த நினைவு இல்லமானது திங்கள் கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் தவிர காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு திறக்கப்படுகிறது.

இந்தியாவின் மிக உயரமான கிரிக்கெட் மைதானம் - உங்களுக்கு தெரியுமா

இந்தியாவின் மிக உயரமான கிரிக்கெட் மைதானம் - உங்களுக்கு தெரியுமா
கடல் மட்டத்திலிருந்து  2444மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த கிரிக்கெட் மைதானம், உலகிலுள்ள உயரமான கிரிக்கெட்
மைதானங்களில் ஒன்றாக உள்ளது. போலோ மைதானமாகவும் விளங்கும் இந்த மைதானமானது, 1893-ம் ஆண்டு பாட்டியாலா மன்னர் புபீந்தர் சிங்கினால் உருவாக்கப்பட்டு இன்றளவும் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பைன் மற்றும் தியோதர் மரங்களால் சூழப்பட்டு பசுமையான சுற்றுச்சூழலுடன் இருக்கும் இந்த மைதானம் சைல் இராணுவப் பள்ளியின் நிர்வாகத்திற்கு உட்பட்டதாக உள்ளது.

ஒவ்வொரு சொல்லிற்கும் ஆங்கிலத்தில் விளக்கமளிக்கும் இணையதளம்

ஒவ்வொரு சொல்லிற்கும் ஆங்கிலத்தில் விளக்கமளிக்கும் இணையதளம்

ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் பல விளக்கமளிக்க ஓர் இணையதளம் உள்ளது. இந்த
இணையதளம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவியாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் ஒரு சொல்லைத் தேர்வு செய்து, அந்த சொல்லிற்கு இணையாக வேறு என்ன சொற்களெல்லாம் இருக்கின்றன? இந்த சொல்லிற்கு எதிர்சொற்கள் (Opposite Word)என்னென்ன இருக்கின்றன? அந்த சொல்லைக் கொண்டு எப்படியெல்லாம் வாக்கியங்கள் (Sentense) அமைக்கலாம்? அந்த சொல்லுக்கு இணையாக (டச்சு - Dutch), (பிரெஞ்ச் - French), (ஜெர்மன் - German), (இத்தாலி - Italian), (போர்ச்சுக்கீசு -  Portuguese), (ஸ்பானிஷ் - Spanish) போன்ற மொழிகளுக்கு மாற்றம் (Translate)செய்து வரும் சொற்கள், இந்த மொழிகளில், குறிப்பிட்ட மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்தால் வரும் சொற்கள், ஒரு சொல்லுக்கு (பன்மைச் சொல் வடிவம் -Plural), (கடந்த காலம் -Past Tense), சொல் அல்லது( நிகழ் காலம் - Present Tense)சொல் என்ன? ஆங்கிலத்திலிருக்கும் அனைத்துச் சொற்களையும் கண்டறியும் வசதி, 2 முதல் 10 எழுத்துக்கள் என எழுத்துக்களைக் கொண்டும் அவை தொடங்கும் அல்லது முடியும் மற்றும் இருக்கும் எழுத்துக்களைக் கொண்டும் ஆங்கிலச் சொற்களைக் கண்டறியும் வசதியும் இந்த இணையதளத்தில் உள்ளது. எழுத்துக்களைக் கொண்டு போட்டிக் கேள்விகள் (Quiz)போன்றவையும் தரப்பட்டுள்ளன.

(Dictionary)மற்றும் மொழிமாற்றக் கருவி(Translator)தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் இத்தளத்தில் உள்ளன.


உலகையே உலுக்கிய அற்புத கண்டுபிடிப்புகள்

உலகையே உலுக்கிய அற்புத கண்டுபிடிப்புகள்

நாம் என்னதான் அறிவியல் யுகத்தில் இருந்தாலும் இதற்கு புள்ளையார் சுழி
எங்கிருந்து வந்தது? நமது மூதாதையர்கள் விட்டுச்சென்ற அவர்களின் அறிவை நாம் தூசி தட்டிப் பயன்படுத்துகிறோம் என்றுசொன்னால் அது மிகையாகாது. அவர்கள் கண்டுபிடித்தவைகளே இன்று மறுவடிவமெடுத்துள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. அவர்கள் கண்டுபிடித்த பல உக்திகள் இன்றைய உலகை மாற்றியுள்ளது என்பதே நிதர்சனம். அப்படி உலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள் இங்கே!


இன்றளவிலும் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ள இந்த உழுதல் முறைதான் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. விவசாயம் செய்வதை எளிமையாக்கியதும் இம்முறையே! ஆனால் இன்று பல்வேறு வளர்ச்சியில் இருக்கும் உழுதலின் நிலையும், உழவனின் நிலையும் வருங்காலத்தில் கேள்விக்குறியுடனே இருக்கும்...


சாதாரணமாக பார்த்தால் இது வெறும் சக்கரம் தான். ஆனால் இது இல்லாமல் எதையாவது நினைத்துப் பார்க்க இயலுமா? வாகனங்கள் சக்கரம் இல்லாமல் இயங்குமா? இந்த சக்கரம் 3100 B.C யில் கண்டுபிடிக்கப்பட்டவை.




ஆண்களின் பார்வையில் இந்த குளிர்சாதனப் பெட்டி என்பது, பணத்தை வீணடிக்கும் ஒரு ஆடம்பர டப்பாதான். ஆனால் பெண்கள் இந்த குளிர்சாதனப் பெட்டியை தயிர், பால், காய்கறிகள், இவ்வளவு ஏன் இட்லி மாவை பாதுகாக்கும் பொக்கிசமாகவே கருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெயில் காலங்களில் அதிகம் தேவைப்படும் ஒரு பெட்டி. ஆனால் பயன்படுத்துவதற்கு 'பவர்தான்' இருப்பதே இல்லை!


அந்தக்காலத்தில் ஒரு பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்கு பொருட்களை எடுத்துச்செல்வது மிகவும் கடினவாகவும், மெதுவாகவும் இருந்தது. அந்த சூழலில்தான் இந்த ஸ்டீம் என்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டு, சற்றே வேகமானது பிசினஸ்!



ஆயிரம் வருடங்களுக்கும் முன்பே சீனர்கள் காகிதங்களை கண்டறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. காகிதங்களில் அச்சிடுவதற்கு இந்த அச்சிடும் இயந்திரம் பயன்பட்டது. இதனால்தான் தகவல்தொடர்பும் விரிவடைந்தது என்றே சொல்லலாம். செய்திகளை காகிதங்களில் அச்சிட்டது, அது இன்று இணையவழி செய்தியாக மாறியதும் தொழில்நுட்பத்தின் உந்துதலே!


இன்றைய உலகம், மொபைல் போன், டிவி,ரேடியோ போன்றவையெல்லாம் இல்லாமல் வாழவே முடியாது என்கின்ற நிலையில் உள்ளது. டெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். டிவியை கண்டுபிடித்தவர் லோகி பைர்ட். ரேடியோவை கண்டுபிடித்தவர் மார்கோனி.


இந்த பல்ப்பை கண்டுபிடித்தவர் தாமஸ் எடிசன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அனைத்து எலெக்ட்ரானிக் சாதனங்களும் இதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது எனவும் சொல்லப்பட்டது. நினைத்துப் பாருங்கள் இந்த பல்ப் மட்டும் இல்லாமல் இருந்தால்...


உலகின் முதல் வாகனத்தை உருவாக்கியவர் கார்ல் பென்ஸ் என நம்பப்படுகிறது. இதை இவர் 1885ல் உருவாக்கினார் எனவும் கூறப்படுகிறது. இவைகளில் தான் இன்றைய உலகம் நகர்த்தப்படுகிறது.


கம்ப்யூட்டர் பற்றிப் படிக்காதவர்களும் கம்ப்யூட்டர் அறிவு இல்லாவதவ்ர்களும் மிக மிகக் குறைவு எனலாம். அதிக அளவில் வளர்ச்சிபெறும் துறையில் முக்கியமான இடத்தில் கம்ப்யூட்டர் சார்ந்த துறைகளே உள்ளன.


சாப்பாடு கூட இல்லாமல் பலரால் சில தினங்கள் உயிர்வாழமுடியும். ஆனால் இன்டர்நெட் இல்லாமால் இருக்க முடியாது என்பார்கள் அவர்கள். அந்த அளவிற்கு மனித வாழ்வில் முக்கியப்பங்குவகிக்கிறது இன்டர்நெட்! இதை கண்டறிந்தவர்களுக்கு ஒரு சல்யூட்!

பணக்கார நாடுகளை பின்னுக்கு தள்ளும் இந்தியா - ஐ.நா. தகவல்

பணக்கார நாடுகளை பின்னுக்கு தள்ளும் இந்தியா - ஐ.நா. தகவல்

பணக்கார நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியாவும் சீனாவும் முன்னேறி வருவதாக ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
மெக்சிகோவில் வெளியான அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 'வளரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இந்நாடுகள் 2020-ம் ஆண்டு வாக்கில் உலகின் பணக்கார நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிடும். இந்தியாவும் சீனாவும் கடந்த 20 ஆண்டுகளில் தனிநபர் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது ஐரோப்பா கண்டமும், வட அமெரிக்கா கண்டமும் தொழில் புரட்சியின்போது அடைந்த வளர்ச்சியை விட அதிகமாகும். தொழிற் புரட்சியின்போது சில லட்சம் மக்கள் மட்டுமே முன்னேறினர். ஆனால் இந்த இரு நாடுகளிலும் பல கோடி மக்கள் முன்னேறியுள்ளனர். உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை 1990-ம் ஆண்டு 43 சதவீதமாக இருந்தது. ஆனால் இது 2008-ம் ஆண்டு 22 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக சீனாவில் ஏராளமான மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது'.இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.

கேட் தேர்வு முடிவுகள் வெளியானது

கேட் தேர்வு முடிவுகள் வெளியானது

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா
முதலிடம் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் 22,476 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,985 மாணவர்கள் தேர்ச்சியுடன் தமிழகம் 9வது இடத்தை பிடித்துள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளத்தில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது அறிவு வினா விடைகள் - 8

 பொது அறிவு வினா விடைகள் - 8

1. ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
டேக்கோ மீட்டர்

2. "இன்சுலின்' கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
பான்டிங்

3. மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
70%

4. உலகம் உருண்டை வடிவம் என்று முதலில் நிரூபித்த தத்துவஞானி யார்?
அரிஸ்டாட்டில்

5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எப்பகுதியிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
வேர்கள்.

6.இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
1950.

7.தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?
ராஜகோபலாச்சாரி.

8. சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
எட்டயபுரம்.

பொது அறிவு வினா விடைகள் - 7

 பொது அறிவு வினா விடைகள் - 7

21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்

பூமியில் இருக்கும் நமக்கு தெரியாத பல அதிசயங்கள்

பூமியில் இருக்கும் நமக்கு தெரியாத பல அதிசயங்கள்

வேவ் பாறை: ஆஸ்திரேலியாவில் உள்ள அலை பாய்வது போன்ற வடிவத்தில் ஒரு பாறை
உள்ளது. இதைப் பார்க்கும் போது அலை பாயும் போது திடீரென்று அந்த அலை உறைந்துவிட்டது போன்று காணப்படும். இது 14 மீட்டர் உயரமும், 100 மீட்டர் நீளமும் கொண்டது. ஆகவே இதுவும் பூமியில் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றான ஒரு பகுதியாக உள்ளது.

கிரிஸ்டல் குகை : பெர்முடாவில் உள்ள கிரிஸ்டல் குகை கேஸ்டல் ஹார்பருக்கு அருகில் உள்ளது. இது சுமார் 500 மீட்டர் நீளமும், 62 மீட்டர் ஆழமும் உடையது. மேலும் இந்த குகை சுண்ணாம்புப்பாறையுடன், அழகான கிரிஸ்டல் குளங்களுடன் கண்ணை கவரும் வகையில் அருமையாகக் காணப்படுகிறது. எனவே இதுவும் ஒரு வகையான அபூர்வமான தளத்தில் ஒன்றானது.

கண்ணாடி ஏரி :இந்த கண்ணாடி ஏரி பொலிவியாவில் அமைந்துள்ளது. இதற்கு இந்த பெயர் வருவதற்கு இந்த ஏரியில் வறண்ட உப்பு தண்ணீரில், அதிக அளவில் லித்தியம் சேர்ந்து, உறைந்து இருப்பதால், இதைப் பார்க்கும் போது அப்படியே கண்ணாடியைப் பார்ப்பது போன்று இருக்கும். மேலும் இந்த இடத்தை மழைக்காலங்களில் பார்த்தால் தான், நன்றாக இருக்கும். மேலும் இந்த ஏரியில் நாம் நின்றால், மேகங்களே நமது காலடியில் இருப்பது போன்று அழகாக இருக்கும்.

புதிய போப்பாண்டவர் - உங்களுக்கு தெரியாத தகவல்கள்

புதிய போப்பாண்டவர் - உங்களுக்கு தெரியாத தகவல்கள்
உலகம் முழுவது்ம் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புதிய தலைவராக, புதிய
போப்பாண்டவராக அர்ஜென்டினாவைச் சேர்ந்த கர்தினால் ஜார்ஜ் பெர்கோக்கிலா தேர்வாகியுள்ளார். அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரிலிருந்து போப்பாண்டவராக உயர்ந்துள்ளார் ஜார்ஜ். லத்தீன் அமெரிக்கர் ஒருவர் போப்பாண்டவராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இனிமேல் இவர்தான் உலகம் முழுவதும் பரவி வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் ஆவார்.

புதிய போப்பாண்டவர் தனது பெயராக பிரான்சிஸ் என்பதைத் தேர்வு செய்துள்ளார். இதுவரை இருந்த போப்புகளுக்குப் பின்னால் ஒரு எண் இருக்கும். அதாவது 2ம் போப் ஜான் பால், 16ம் பெனடிக்ட் என்று. ஆனால் தற்போது தேர்வாகியுள்ள ஜார்ஜ் தேர்வு செய்துள்ள பெயர் பிரான்சிஸ் என்பதாகும். இவர்தான் முதல் பிரான்சிஸ் என்பதால் இவரது பெயருக்குப் பின்னால் எண் எதுவும் இருக்காது. இப்படி எண் இல்லாமல் ஒரு போப் வருவது இதுவே முதல் முறையாகும்.

போப் முதலாம் பிரான்சிஸ் ஐரோப்பியர் அல்லாத முதல் போப் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அது உண்மையல்ல. 8ம் நூற்றாண்டில், ஒரு சிரிய நாட்டைச் சேர்ந்தவர் போப்பாக இருந்துள்ளார். அவரது பெயர் போப் 3ம் புனித கிரகெரி என்பதாகும். இவர் கி.பி. 731 முதல் 741 வரை போப்பாக இருந்தார். அதேபோல பெத்லேகம், ஜெருசலேம், லிபியா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கூட இதற்கு முன்பு போப்பாக இருந்துள்ளனர்.

புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் மக்களின் போப்பாக பார்க்கப்படுகிறார். காராணம், இவர் சாதாரண மக்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால். மிகவும் எளிமையானவர் இவர் என்று அனைவரும் சொல்கிறார்கள். குறிப்பாக அர்ஜென்டினாவில் இவரை அனைவரும் வெகுவாக புகழ்கின்றனர். நகரப் பேருந்தில் ஏறிதான் பல இடங்களுக்கும் இவர் போவார் என்று பியூனஸ் அயர்ஸ் மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள். ஆர்ச்பிஷப்பாக இருக்கும் இவர் பெரிய மாளிகையில் வசிக்காமல் மிகவும் சாதாரண வீட்டில்தான் வசித்து வருகிறாராம். இவரே சமைத்துக் கொள்வாராம்.

முந்தைய போப்புகளைப் போலவே இவரும் அபார்ஷன், ஓரினச் சேர்க்கைத் திருமணம் ஆகியவற்றுக்கு எதிரானவர்தான். அபார்ஷன் சட்டம் தொடர்பாக அர்ஜென்டினா அதிபருடன் மோதியவரும் கூட.

வாடிகன் சிட்டியில் முன்பு போல இப்போது நிலைமை இல்லை. அங்கு ஊழல்களும் முறைகேடுகளும் பெருகி விட்டதாக சமீப காலமாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த பின்னணியில் போப்பாண்டவராக தேர்வாகியுள்ளார் ஜார்ஜ். எப்படி வாடிகன் சிட்டியை அவர் சரி செய்யப் போகிறார் என்ற பெரு்ம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

செவ்வாயில் குடியேற தயாராகும் மனிதகுலம்

செவ்வாயில் குடியேற தயாராகும் மனிதகுலம்

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழும் சாத்தியகூறுகள் அதிகமாக உள்ளதாக
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில், மனிதர்கள் உயிர் வாழும் சாத்தியகூறுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பிவைத்தது. செவ்வாய் கிரகத்தில் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறங்கிய கியூரியாசிட்டி, அன்று முதல் செவ்வாய் கிரகத்தின் தன்மைகளை புகைப்படங்கள் மூலமாகவும் மண் மற்றும் கற்களின் மாதிரிகள் மூலமாகவும் பூமியிலிருக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியப்படுத்தி வந்தது.

சமீபத்தில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம், செவ்வாய் கிரக பாறைகளை துளையிட்டு ஆய்வு செய்ததில், உயிர் வாழ்தலுக்கு தேவையான சல்பர், கார்பன், ஆக்சிஜன், நைட்ரோஜன் போன்ற பொருட்கள் செவ்வாய் கிரகத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செவ்வாயில், ஆங்காங்கே களிமண் திட்டுக்கள் இருப்பதையும் கியூரியாசிட்டி ரோவர் கண்டறிந்துள்ளது.எனவே, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது.

கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு செய்த பாறைகள் பலநூறுகோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவானதாகும். அந்த பாறை இடையே களிமண் இருக்கிறது என்றால் நிச்சயம் தண்ணீரும் இருக்கிறது என்பது தெளிவாகியுள்ளது. தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதால் மனிதன் செவ்வாயில் குடியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என அர்த்தம் கொள்ளலாம். 

மனித குலத்துக்கு பெரும் ஆபத்து விளைவிக்கும் புதிய கிருமிகள்

மனித குலத்துக்கு பெரும் ஆபத்து விளைவிக்கும் புதிய கிருமிகள்
உலகம் முழுவதும் புதிய புதிய நோய்கள் அடிக்கடி உருவாகி வருகின்றன. அந்த நோய் கிருமிகளை
கொல்வதற்கு உரிய மருந்துகள் இல்லை. இதற்கு பதிலாக நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டி பயாடிக்) மருந்துகளை கொடுத்து வருகின்றனர். 

ஆனால் இந்த நோய் எதிர்ப்பு மருந்துகளும் தற்போது சரியாக வேலை செய்யவில்லை. இதனால் மனித குலத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது இங்கிலாந்து விஞ்ஞானியும் தலைமை மருத்துவ அதிகாரியுமான சேலிடேவிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:- 

புதிய வகை நோய் எதிர்ப்பு சக்தி மருந்து சமீபகாலமாக கண்டுபிடிக்கப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைதான் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இப்போதெல்லாம் கிருமிகள் கட்டுப்படுவதில்லை. 

மேலும் தினமும் புதிய புதிய கிருமிகள் உருவாகி வருகின்றன. ஆனால் புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கிருமிகளால் மனித குலம் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் இது தீவிரவாதத்தைவிட மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இதனை சமாளிக்க முடியும். 

இவ்வாறு அவர் கூறினார்.

பொது அறிவு வினா விடைகள் - 6

 பொது அறிவு வினா விடைகள் - 6

11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.

12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.

13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.

15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

திறமையான சினிமாட்டோகிராபர் ஆவது எப்படி?

திறமையான சினிமாட்டோகிராபர் ஆவது எப்படி?

காட்சியமைப்பு சிந்தனை, நல்ல நுட்பம், நெருக்கடியான தருணத்தில் நிதானம் இழக்காமல்
இருத்தல், பிரச்சினைத் தீர்க்கும் திறன் போன்ற குணங்கள், ஒரு சினிமாட்டோகிராபர் அல்லது போட்டோகிராபி இயக்குநருக்கான தகுதிகள்.

ஆரம்ப நாட்களில், இந்த போட்டோகிராபி தொழில்துறையானது, ஒரு நபர் பணியாக இருந்தது. போட்டோகிராபி டைரக்டர், அந்தப் படத்தின் டைரக்டராகவும் இருப்பார். ஆனால், இன்றைக்கு, போட்டோகிராபி டைரக்டர் அல்லது சினிமாட்டோகிராபர்(cinematographer) என்பவரின் பணி, மிகவும் நிபுணத்துவம் மற்றும் சிறப்புத்தன்மை வாய்ந்ததாக பரிணாமம் அடைந்துள்ளது. ஒரு நல்ல போட்டோகிராபி இயக்குநர், ஒரு படத்திற்கான சிறந்த சொத்தாக மதிக்கப்படுகிறார். படத்தில் பார்க்கும் அனைத்து விஷயங்களையும் அழகாக காட்டும் பெரும் பொறுப்பு அவருடையது.

ஒரு சினிமாட்டோகிராபராக ஆவதற்கு, டெக்னிக்கை விட, கலைநயம் அதிகம் தேவை என்றாலும், அதிகளவிலான டெக்னிக்குகளையும் உள்வாங்க வேண்டியுள்ளது மற்றும் அதிகமான விஷயங்களை கற்று தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

கலைநயத்தைக் கற்றல்

ஒரு நல்ல சினிமாட்டோகிராபராக நீங்கள் உருவாக, படிப்பை விட, உங்களின் ஆசிரியரே, முக்கிய தூண்டுகோலாக இருப்பார். சினிமாட்டோகிராபி தொடர்பான சிறப்பு படிப்பில் சேர, ஒருவர், திரைப்படக் கல்லூரியில் சேர வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, இப்படிப்பு, 2 முதல் 3 வருட டிப்ளமோ படிப்பாக வழங்கப்படுகிறது.

புனேவிலுள்ள, பிலிம் அன்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட், கொல்கத்தாவிலுள்ள சத்யஜித்ரே பிலிம் அன்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் போன்றவை புகழ்பெற்ற திரைப்பட கல்லூரிகள். இங்கே வழங்கப்படும், முதுநிலை டிப்ளமோ படிப்பு புகழ்பெற்றது. இவைத்தவிர, விஸ்லிங் உட்ஸ்(Whistling Woods) போன்ற திரைப்பட கல்வி நிறுவனங்களில், பள்ளிப் படிப்பை முடித்தப்பிறகு, 2 வருட படிப்பை மேற்கொள்ளலாம்.

நீங்கள் யாராக இருக்க வேண்டும்?

திரைப்படக் கல்லூரிகளில், பயிற்சி என்பது, தியரி மற்றும் பிராக்டிஸ் ஆகியவை சேர்ந்ததாக இருக்கும். ஒருவர், போட்டோகிராபி இயக்குநராக அல்லது சினிமாட்டோகிராபராக பயிற்சி எடுக்கிறார் எனில், அவர் முதலில் அதுவாகவே இருக்க வேண்டும். அப்போதுதான், வெற்றிகரமாக கற்றுக்கொள்ள முடியும். கல்லூரிக்கு வெளியே, நீங்கள் தனியாக பல ப்ராஜெக்ட்களை செய்ய வேண்டியிருக்கும். படிப்பானது, கேமாராக்களை வைத்து, செயல்முறை கற்றல் மூலம் வழங்கப்படுகிறது. இது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்.

பாடத்திட்ட அமைப்பு

முதல் வருட படிப்பானது, பொது அடிப்படை படிப்பாக இருக்கும். டைரக்ஷன், எடிட்டிங், ஒலி, ப்ரொடக்ஷன், கேமரா, ஆர்ட் டிசைன் உள்ளிட்ட, சினிமா தொடர்பான அனைத்து அடிப்படை அம்சங்களும் கற்றுத்தரப்படும். முதலாமாண்டு மாணவர்களுக்கு, ஒரு நாளின் முதல் பாதி, தியரி பாடங்களுக்கு ஒதுக்கப்படும். மீதி பாதி நாள், அனைத்து பாடங்களின் பிராக்டிகல் பயிற்சிக்காக ஒதுக்கப்படும். மாலைப் பொழுதானது, படத்தை திரையிடுதலோடு முடியும். உலகின் அனைத்து வகையான சினிமாக்களையும் மாணவர்கள் பார்த்து ரசிப்பார்கள். உண்மையிலேயே, இது ஒரு சிறந்த அனுபவம்.

இரண்டாம் ஆண்டு படிப்பில், நடைமுறை பயிற்சிக்கே, மிக அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே, நீங்கள் அதிகநேரம் ஸ்டூடியோவில் செலவிட வேண்டியிருக்கும். ஒவ்வொருவருக்கும் ஸ்டூடியோ நேரம் ஒதுக்கப்பட்டு, சக மாணவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு பயிற்சியில், ஒரு சீனியர் மாணவர், போட்டோகிராபி இயக்குநராக இருந்தால், அவரது சக மாணவர்கள் அல்லது ஜுனியர்கள், அவருக்கு உதவியாளர்களாக இருப்பார்கள்.

இறுதியாண்டு முடிவில், ஒரு மாணவர், 6 படங்கள் வரை தயாரித்திருப்பார். அதில், குறும்படங்கள், மியூசிக் வீடியோ மற்றும் டாகுமெண்டரி, இறுதி அரைமணிநேர டிப்ளமோ படம் போன்றவை அடங்கும். படிப்பு முடிகையில், ஒரு மாணவர், முழுதகுதி பெற்ற ஒரு போட்டோகிராபி இயக்குநராக இருப்பார். ஒருவரின் விடாமுயற்சியுடன் கூடிய கடின உழைப்பே, இந்த நிலையை அடைய உதவும்.

பயிற்சியின் தன்மை

பயிற்சியின்போது, மாணவர்கள், குழுவாக பயிற்சிபெற வைக்கப்படுகிறார்கள். குழுவாக பணியாற்றும் ஒருவர் சிறந்த அனுபவத்தைப் பெறுகிறார். இதுபோன்ற பயிற்சியில், ஒருவரின் சுய சாதனையைவிட, ஒரு குழுவின் சாதனையே பெரிதாக தோன்றும். ஒவ்வொருவரின் தனித்திறமையையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அதன்மூலமாக, சக மனிதர்களின் மகத்துவமும் தெரியவரும்.

கருத்தை மேம்படுத்தல்

ஒரு கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் மனப்பாங்கு, திரைப்படக் கல்லூரிகளில் வளர்த்தெடுக்கப்படுகிறது. உங்களுக்கும், உங்களது ஆசிரியருக்கும், சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தனிமனிதன் என்ற முறையில், உங்களின் சுதந்திரத்திற்கு மதிப்பு உண்டு.

வகுப்பறைக்கு வெளியே...

திரைப்படக் கல்லூரி படிப்பில், வகுப்பறையின் பணி என்பது, சிறிதளவேயாகும். உங்களின் உள்ளார்ந்த ஆர்வமும், திரைப்படங்களை தேடித்தேடி பார்ப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதும், பல்வேறான அம்சங்களை ஆராய்வதும், கலையோடு சேர்த்து, தொழில்நுட்ப அம்சங்களையும் தெரிந்து கொள்வதும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளன.

திரைப்படம் பற்றி சக மாணவர்களுடன் விவாதம் செய்வது, உங்களின் கலையுலக அறிவை கூர்மையடைய செய்யும். ஏனெனில், பலவிதமான பின்னணிகள் மற்றும் ரசனைகளைக் கொண்ட மாணவர்கள் இருப்பார்கள். எந்த மாதிரியான சினிமாவுக்கு, அவர்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். ஒருவரின் உள்ளார்ந்த திறன், பிறருடன் விவாதிக்கும்போது சிறப்படையும் என்பதை மறக்கக்கூடாது.

திரைப்படக் கல்லூரிகளுக்கு அப்பால்...

போட்டோகிராபி துறையில் பயிற்சிபெற, திரைப்படக் கல்லூரிதான் ஒரே இடம் என்பதல்ல. மீடியா தொடர்பான விரிவான அம்சங்களைக் கொண்ட மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகளும், சிறந்த போட்டோகிராபி இயக்குநர்களை உருவாக்கும்.

மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு, கேமரா அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இதன்மூலம், செய்தி அல்லது டாகுமென்டரி கேமரா நிபுணராக பரிணமிக்கும் பயிற்சி உங்களுக்கு கிடைக்கிறது. கேமரா குறித்த சிறப்பம்சங்கள், மாஸ் கம்யூனிகேஷன் படிப்பில் இல்லையென்றாலும், பல வெற்றிகரமான போட்டோகிராபி இயக்குநர்களை அப்படிப்பு உருவாக்கியுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

திரைப்படக் கல்லூரிகளில் பட்டம்பெற்ற சிறந்த நபர்களை ஆசிரியர்களாகக் கொண்டு, பல சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளில், திரைப்படக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் பாடத்திட்டங்களின் சிறியளவு மாடல்கள் பின்பற்றப்படுகின்றன. எனவே, ஒருவர் சிறப்பான கல்வியைப் பெறும் வாய்ப்புகள் உண்டு. அதேசமயம், எந்தளவு நல்ல ஆசிரியர்கள் அமைகிறார்களோ, அந்தளவுதான் உங்களின் கற்றல் அமையும். எனவே, நல்ல ஆசிரியர் என்பவர் மிகவும் முக்கியம். எனவே, இப்படிப்பிற்கென, ஏதேனும் கல்வி நிறுவனத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக, அங்கே படிக்கும் அல்லது படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடி, ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

பணியில் கற்றுக்கொள்ளுதல்

போட்டோகிராபி தொழில் என்பது, பல சிறந்த அனுபவங்களைக் கொடுக்கும் ஒரு தளமாகும். நீங்கள், ஒரு திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்து வெளிவந்தவுடன், தனியான முறையில் பணியாற்ற வாய்ப்புக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். சில தடவைகளுக்கு, பிறரின் உதவி தேவைப்படும். நீங்கள் ஒரு சிறந்த, புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் படித்தவராக இருந்தால், அங்கேயே உங்களுக்கு குழுப் பணியின் அனுபவம் கிடைத்திருக்கும். அந்த அனுபவம், உங்களது தொழிலிலும் உதவிகரமாக இருக்கும்.

உதவியாளர் பணி

கல்வி நிறுவனத்தில் ஷ¤ட்டிங் நடைபெறுகையில், உங்களின் பணி, நெருக்கடியின்றி இருக்கும். சில குழுக்கள், ஒரு ராணுவ கட்டுக்கோப்புடன் இயங்கும். எனவே, சில காலம் கழிந்த பிறகுதான், உங்களுக்கு உதவியாளர் தொடர்பான பயிற்சி கிடைக்கும். ஒரு அம்சத்தை இப்படித்தான் காட்சிப்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக முடிவுசெய்து, அதன்படியே செயலை மேற்கொள்வதில், உதவியாளர்களின் பங்கு மற்றும் அவர்களை வழிநடத்தும் திறன் போன்றவை முக்கியமானவை.

பணி வாய்ப்புகள்

திரைப்படக் கல்லூரிகளில், ஓரியன்டேஷன் என்பது, பிரதான அளவில், பிக்ஷனாக இருந்தாலும், அதில் படித்து வெளிவரும் பல சினிமாட்டோகிராபர்கள், டாகுமெண்டரிகளில் பணிபுரிந்து, திருப்தியான பணி அனுபவம் மற்றும் சம்பளத்தைப் பெறுகிறார்கள். பிக்ஷனில் பணியைத் தேடும் ஒருவர், சில டாகுமென்டரிகளை எடுக்கிறார். இந்த அனுபவம் மதிப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த வகையில், ஒருவர், அதிக பணம் சம்பாதிக்கலாம்.

படித்து முடித்ததும், விரைவாக பணம் சம்பாதிக்கும் நபர்களில், சினிமாட்டோகிராபர்கள் முக்கியமானவர்கள். புகழ்பெற்ற சினிமாட்டோகிராபர்கள், ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களுக்கு நிகராக மதிக்கப்படுகிறார்கள். ஆனால், இத்துறையில் வெற்றியடைய கடின முயற்சியும், ஆரம்பகால சிக்கல்களை சமாளிக்கும் திறனும் தேவை. அதை முடித்துவிட்டால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கும்.

இந்த ஆண்டு விண்வெளி அதிசயங்களுக்கு பஞ்சமில்லை

இந்த ஆண்டு விண்வெளி அதிசயங்களுக்கு பஞ்சமில்லை

விண்வெளி அதிசயங்களில் பெரும்பாலானவற்றை இந்த ஆண்டு பொதுமக்கள் அதிகமாக
பார்ப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் மூன்று வால் நட்சத்திரங்கள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது.

விண்வெளியில், கோள்கள் நேர்கோட்டில் வருதல், வெள்ளி இடை நகர்தல் போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இவற்றில் எப்போதாவது நெப்டியூன் கோளிற்கு அடுத்துள்ள குயிப்பர் விண்கல் பட்டை மற்றும் ஆர்ட் மேகம் என்றழைக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த வால் நட்சத்திரங்கள் பூமிக்கு அருகே அவ்வப்போது தலைகாட்டுவதும் உண்டு.

இவற்றில் இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் மூன்று வால் நட்சத்திரங்களை பொதுமக்கள் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, பான்ஸ்டார் என்ற வால்நட்சத்திரம் இன்று சூரியனுக்கு மிக அருகில் வரவுள்ளது, இந்த வால் நட்சத்திரத்தை, சூரியன் மறைந்ததும், சுமார் 30 நிமிடங்கள் வரை நாம் பார்க்க முடியும். வரும் 20ஆம் தேதி வரை இதனை பொதுமக்கள் காணலாம். இதனை பார்க்க விஞ்ஞானிகளும் தயாராகி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ரஷ்ய வானியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஐசோன் என்ற வால்நட்சத்திரம், வரும் நவம்பர் 29 ஆம் தேதிக்குப் பிறகு வானில் தெரிய வாய்ப்புகள் உள்ளன. இதனை பொதுமக்கள் வெறும் கண்களால் காண முடியும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக வால்நட்சத்திரங்களோ, விண்கற்களோ பூமிக்கு அருகே வரும்போது, அவை எவ்வளவு ஆண்டு பழமையானது, எங்கிருந்து வருகின்றன என்பதை அறிந்து கொள்ள முடிவதோடு, பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ரகசியத்தையும் அறிந்த கொள்ள முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மின் விளக்கை கண்டு பிடித்தது யார் தெரியுமா?

மின் விளக்கை கண்டு பிடித்தது யார் தெரியுமா?

அமெரிக்கா பாடசாலை ஒன்றில் எட்டு வயது சிறுவனை "இவன் அடிமுட்டாள் பாடசாலையில்
இருந்தால் மற்ற மாணவர்களையும் கெடுத்து விடுவான்". இனி இவனுக்கு பாட சாலையின் அனுமதி இல்லை என்று ஒரு கடிதம் எழுதி அந்த சிறுவனின் சட்டைப்பையில் வைத்து ஆசிரியர்களால் விரட்டப்பட்டவன்.

தாயார் கவலை கொண்டாலும், தைரியமாக வீட்டில் வைத்து பாடங்களை கற்று கொடுத்தார். தாயின் கல்வியிலே வளர்ந்த சிறுவன்....பின்னாளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டான். இன்றும் அக்.,21ம் தேதி இரவு 9.59க்கு வீதி பயண விளக்குகளை தவிர, இதர மின்சார விளக்குகள் அனைத்தையும் அணைத்தும் ஒரு நிமிடம் அமெரிக்காவை இருளாக்கி விட்டு, பின்னர் மீண்டும் ஒளிர விட்டு தொலைக்காட்சி, வானொலியில் அறிவிப்பார்கள் இப்படி.., எடிசன் பிறந்திருக்கா விட்டால் உலகம் இப்படிதான் இருளாக இருந்து இருக்கும் என்று...!

மேலே கூறிய அந்த முட்டாள் சிறுவன் தான் பின்னாளில் விஞ்ஞானிகளின் தந்தை என போற்றப்படும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார். ஆகவே யாரும் முட்டாள் இல்லை. நீங்களும் அடுத்தவர் சொல்வதை கேட்டு வாழ்வதை விட்டு விடுங்கள். உங்களை நீங்களே நிர்ணயப்படுத்துங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு வைரம் இருக்கிறது. அதை பட்டைதீட்டுங்கள்.

பொது அறிவு வினா விடைகள் -4

 பொது அறிவு வினா விடைகள் -4

30)உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.
General Knowledge questions & Answers in Tamil


31)வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'.

32) இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.

33) இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.

34) கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட்.

35) கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'.

36) காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.

37) இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு.

38) திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம்.

பொது அறிவு வினா விடைகள் - 5

 பொது அறிவு வினா விடைகள் - 5

1.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.


2. தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - Self Cointained Underwater Breathing Apparatus).

3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு.

4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

மாணவர்கள் கணித திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி

மாணவர்கள் கணித திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி

உங்களின் குழந்தைகள் கணித திறமையை வளர்த்துக்கொள்ள பிரத்தேகமான இணையதளம்
ஒன்று உள்ளது. சில குழந்தைகள் கணிதத்தை தவிர மற்றவை படிக்கிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் வாழ்க்கைக்கு கணிதம் மிக மிக அவசியமானதாகும். குழந்தைகளின் வருங்கால திறமையை நிர்ணயிப்பது கணிதம். மேற்படிப்புக்கு பயன்படுவதும் கணிதம் தான். குழந்தைகளின் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணிதத்தை விளாயாட்டு வழியாகச் சொல்லிக் கொடுக்கும் இணையதளம் இது. இந்த இணையதளத்தில் கணித விளையாட்டுக்கள் (Math Games), சொல் கணக்குகள் (Word Problems). கணித விடுகதைகள் (Math Puzzles), கணித நிகழ்படம் (Math Videos) போன்ற தலைப்புகளின் கீழ் கணக்குகள் நிறைய உள்ளன.

கணித விடுகதைகள் எனும் தலைப்பில் பண்ணாங்குழி(Mancala), நகரும் செங்கல்(Sliding Block), சுடோக்கு(Sudoku), மணிச்சட்டம்(Battleship), நாணய எடை(Coin Weighing), கியூப்(Cube), என்பது போன்ற 18 வழிமுறைகளின் கீழ் பல கணக்குகள் தரப்பட்டுள்ளன. இத்தளத்தில் கணக்கு பயிற்சியாளர்(Math Apprentice), கணக்கு பணித்தாள்(Maths Worksheets), மின்னட்டை(Flash Cards) மற்றும் சில தலைப்புகளின் கீழ் விளையாட்டு வழியில் எளிமையாகப் புரிந்து கொள்ள உதவும் சிறப்பான இணையதளம் இது. இந்த இணையதளத்தை பயன்படுத்திய பின், உங்கள் குழந்தைக்கு கணிதத்தில் ஆர்வம் தானாகவே வந்துவிடும்.

குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தவர் உங்களுக்கு தெரியுமா?

குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தவர் உங்களுக்கு தெரியுமா?
மாணவர்களே கல்வியில் மட்டும் சிறந்து விளங்கினால் போதாது. கல்வியுடன் பொது
அறிவும் கண்டிப்பாக தேவை. வாருங்கள் இந்த வார பொது அறிவுவை பார்ப்போம்.

* இந்திய அணு அறிவியலின் தந்தை என அழைக்கப்படுவர் - ஹோமி பாபா

* குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தவர் - பெர்கின்ஸ்

* ஒட்டகத்தின் முதுகுப் பகுதியிலுள்ள திமில் போன்ற மேடான பகுதியில் தான் கொழுப்பு உணவுவை சேமித்து வைக்கும்.

* மனிதர்களின் முகவேறுபாட்டுக்கு அடிப்படைக் காரணம் மரவுக்காரணிகள் எனப்படும் ஜீன்கள்.

* முடி அல்லது ரோமம் என்பதில் கடினமான கெரோடின் என்ற புரதப் பொருட்கள் உள்ளன.

* நிறமில்லாத ரத்தத்தைப்கொண்ட பூச்சியினம் கரப்பான் பூச்சியாகும்.

* டைபாய்ட் நோய் உடலின் குடல் பகுதியைப் பாதிக்கின்றது.

* ஆடியோமீட்டர் என்ற கருவி மனிதனின் கேட்கும் திறனை ஆராயப் பயன்படுத்தப்படுகிறது.

* இந்தியாவில் நான்கு மூலைகளில் மடங்களை கட்டியவர் - ஆதி சங்கராச்சாரியார்

* நவீன ஜெர்மனியை நிர்மாணித்தவர் - பிஸ்மார்க்

* விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் - ராகேஷ் சர்மா

* சுருக்கெழுத்தை கண்டுபிடித்தவர் - ஜசக் பிட்மென்

* இந்தியாவின் முதல் கப்பற்படை தளபதி - ஆர்.டி.கதாரி

* உலகின் மிகப்பெரிய வளைகுடா - மெக்சிகோ

* போலியோ மருந்தைக் கண்டு பிடித்தவர் - டாக்டர் ஜோனக் சால்க்

* வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த நகரம் என அழைக்கப்படுவது - நியூயார்க்

பால்பாயின்ட் பேனா உருவான வரலாறு - உங்களுக்கு தெரியுமா

பால்பாயின்ட் பேனா உருவான வரலாறு - உங்களுக்கு தெரியுமா

பேனா என்பது இன்று மிக பெரிய ஆயுதம். இந்த பேனாவின் மூலம் ஒரு அரசாங்கத்தின் ஆட்சியை
கூட மாற்றி விடலாம். அன்பை வளர்த்து கொள்ளலாம் இவ்வாறு பல்வேறு இடங்களில்  பேனா உபயோகப்படுத்தப் படுகிறது. அது எப்படி உருவானது என்று தெரிந்து கொள்ள ஆவல் இல்லையா?

பண்டைய காலங்களில் குழலில் மையை ஊற்றி அடைத்த பின்பு நிப் மூலமாக எழுதும் பவுண்டன் பேனா மட்டுமே இருந்தன. இதன் நிப்பு சீக்கிரமாக உடைந்து விடும். அதோடு எழுத்தாளர்களின் வேலையும் நின்று போகும். இப்படி வேலை நின்று போனதால் தான் புதிதாக பேனாக்கள் உருவாக காரணமாயிற்று.

ஹங்கேரியில் வாழ்ந்த ஜார்ஜ் பிரேயும் அவர் சகோதரர் லாஸ்லோ-பி-ரோவும் சேர்ந்து புதிய பேனாவை உருவாக்க ஆராய்ச்சி மேற்கொண்டனர். சீக்கிரத்தில் ஒடியாத பேனாவாகவும் விலை மலிவாகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய சிந்தனையாக இருந்தன. அந்த நாட்களில் ஹிட்லர் போருக்கு அழைப்பு விடுவித்தால் தங்கள் நாடும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் சகோதரர்கள் இருவரும் அர்ஜென்டினா நாட்டில் அடைக்கலம் புகுந்தார்கள்.

அங்கே வைத்து மறுபடியும் புதுரக பேனாவை வடிவமைக்கும் பணி நடந்தது. ஆராய்ச்சியின் பலனாக ஒரு பேனா வடிவமைக்கப்பட்டது. குழலில் மை நிரப்பி எழுதும் முறையில் தான் இதுவும் அமைந்தது. ஆனால் இது காற்றினால் நிரப்பப்படும் மை. எழுதிய பின்பும் மை சிந்தியதால் அதை நிறுத்துவது பற்றி யோசித்தனர். குழாயின் நுனியில் ஒரு உருண்டை செலுத்தப்பட்டது. அது மீண்டும் மையை சிந்தவிடாமல் தடுத்தது. இந்த பேனா தான் பால்பாயின்ட் என்ற பெயரில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

பொது அறிவு வினா விடைகள் -3

 பொது அறிவு வினா விடைகள் -3

21) வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது, ஏலக்காய்.
General Knowledge questions & Answers in Tamil


22) பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா.

23) இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான் (ராஜஸ்தான்).

24) யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.

25)நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.

26)உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

27)இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.

28)எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.

29)முதலைக்கு 60 பற்கள் உண்டு.

பொது அறிவு வினா விடைகள் -1

 பொது அறிவு வினா விடைகள் -1

1) ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.
General Knowledge questions & Answers in Tamil

2) கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்

3) ‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

4) ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

5) ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

6) முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

7) ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு அறிமுகப்படுத்தியவர்ராஜாஜி.

8 ) பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர்மெரார்ஜி தேசாய்.

9) ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

10) இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.

பொது அறிவு வினா விடைகள் -2

 பொது அறிவு வினா விடைகள் -2

11) மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.
General Knowledge questions & Answers in Tamil

12) ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).

13) ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.

14) ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் andஎன்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

15) போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர்(Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.

16) அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

17) தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.

18) நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தியடோர் ரூஸ்வெல்ட்

19)15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி.

20)`லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்.

TET & TNPSC - பொது அறிவு வினா விடைகள்

TET & TNPSC - பொது அறிவு வினா விடைகள்

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - Self Cointained Underwater Breathing Apparatus)


2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு

4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.