Breaking News

TNPSC குரூப் - 4 தேர்வு மாதிரி வினாக்கள் பகுதி 3

ADSENSE HERE!

உள்ளாட்சி அமைப்புகள்
•    இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் - ரிப்பன் பிரபு
•    கிராமசபைக் கூட்டங்கள் யாருடைய ஆணையின் பெயரில் கூட்டப்படுகின்றன - மாவட்ட ஆட்சித் தலைவர்.
•    குடவோலை முறையில் உள்ளாட்சி முறையை சிறப்பாக செயல்படுத்தப்பட்டது எந்த மன்னர் காலத்தில் - சோழர் ஆட்சிக்காலத்தில்.
•    உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான  இட ஒதுக்கீடு எப்படி - மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு.

•   தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை - 10 (சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திருச்சி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி).
•    கிராமப்புற உள்ளாட்சியில் எத்தனை அடுக்கு அமைப்புகள் உள்ளன - 3 (கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி)
•    ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் - மக்கள், தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர்.
•    வார்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் - 5
•    ஓர் ஊராட்சியில் அதிகபட்சம் எத்தனை வார்டு உறுப்பினர்கள் இருக்கலாம் - 6 முதல் 15.
•    நகரங்களில் உள்ளாட்சி அமைப்புகள்  எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகின்றன - மூன்று ( பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி)
•    எவ்வளவு மக்கள்தொகை இருந்தால், அதை மாநகராட்சிப் பகுதியாக அறிவிக்கலாம் - பத்து லட்சம் அல்லது அதற்கு மேல்.
•    கிராமக் கல்விக் குழுவின் தலைவராக செயல்படுபவர் யார் - ஊராட்சி மன்றத் தலைவர் அல்லது வார்டு உறுப்பினர்.

செஞ்சிக்கோட்டை
•    செஞ்சிக்கோட்டை - விழுப்புரம் மாவட்டம்.
•    செஞ்சிக்கோட்டையை ஆண்ட குறுநில மன்னர்கள் - ஆனந்தக்கோன், புலியக்கோன், ராஜாதேசிங்கு.
•    செஞ்சிக்கு இதரப் பெயர்கள் - பாதுஷா பாத், சிங்கபுர நாடு.
•    செஞ்சிக்கோட்டை எந்த கட்டடக்கலைக்கு நிகரானது - ஹம்பி.

வேலூர்க் கோட்டை
•    சின்ன பொம்ம நாயக்கனால் கட்டப்பட்டது.
•    எந்தப் பேரரசின் ஆட்சியில் இக்கோட்டை கட்டப்பட்டது - விஜயநகரப் பேரரசின் ஆட்சியின்போது.
•    இக்கோட்டையில் உள்ள கோயிலைக் கட்டிய சிற்பியின் பெயர் - பத்ரிகாசி இமாம்.
•    இந்தக் கோட்டை எத்தனை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது - ஒன்பது ஆண்டுகள்
•    யார் பிடிகளில் எல்லாம் இந்தக் கோட்டை இருந்தது - நாயக்கர்கள், பீஜப்பூர் சுல்தான், மராட்டியர், ஆற்காடு நவாப்.
•    சிப்பாய்க்கழகம் ஏற்பட்ட ஆண்டு - 10 -07 - 1806.
•    வேலூர்க் கோட்டை எந்தக் கோட்டையின் மாதிரி - இத்தாலி ராணுவக் கோட்டை.
•    திப்புசுல்தான் அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு என்ன பெயர்  - திப்பு மகால்
•    வேலூர் புரட்சியின் 200வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு - 2006.

ADSENSE HERE!

No comments:

Post a Comment