Breaking News

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 6

ADSENSE HERE!
தமிழ்தாத்தா உ.வே.சா.
1. இயற்பெயர் - வேங்கடரத்தினம்

2. பிறந்த ஊர் - உத்தமதானபுரம் (திருவாரூர் மாவட்டம்)
3. சாமிநாதன் என்ற பெயரை வைத்தவர் உ.வே.சா.வின் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
4. காலம் - 19.02.1855 - 28.04.1942
5. தமிழ்தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் - என் சரிதம்
6. உ.வே.சா. பதிப்பித்த நூல்கள் - எட்டுத்தொகை 8, பத்துப்பாட்டு 10, சீவகசிந்தாமணி 1, சிலப்பதிகாரம் 1, மணிமேகலை 1, புராணங்கள் 12, உலா 9, கோவை 6, தூது 6, வெண்பா நூல்கள் 13, அந்தாதி 3, பரணி 2, மும்மணிக்கோவை 2, இரட்டை மணிமாலை 2, இதர பிரபந்தங்கள் 4.
திரு.வி.கலியாணசுந்தரனார்
7. இயற்பெயர்: திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க.
8. பெற்றோர் : விருத்தாசலனார் - சின்னம்மையார்.
9. ஊர் - துள்ளம் (காஞ்சிபுரம் மாவட்டம்)
10. சிறப்புப் பெயர் - தமிழ்த்தென்றல்
11. படைப்புகள் : மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு.
12. காலம் : 26.08.1883 - 17.09.1953
முதுமொழிக்காஞ்சி
13. ஆசிரியர்  - மதுரைக் கூடலூர்கிழார்
14. பிறந்த ஊர் - கூடலூர்
15. நூல் குறிப்பு - காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று
16. இந்நூலின் வேறொரு பெயர் - அறவுரைக்கோவை
17. மொத்தம் பத்து அதிகாரங்கள் உண்டு. நூறு பாடல்களால் ஆனது.
18. திரிகடுகம் - நல்லாதனார் (ஆசிரியர்), திருநெல்வேலி மாவட்டம் திருத்து என்னும் ஊரில் பிறந்தவர்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment