Breaking News

TNPSC GROUP 4 - தமிழ் வினா விடைகள் 12

ADSENSE HERE!

குற்றியலிகரம்:
1. குறுகிய ஓசையுடைய இகரம் குற்றியலிகரம்
2. நாகு+யாது = நாகியாது, வீடு+ யாது = வீடியாது, வீடு என்பன நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள். இவை நிலைமொழியாய் நிற்க, வருமொழியின் முதல் எழுத்து ய கரமாக இருப்பின், உகரம் இகரமாகும். இந்த இகரம்தான் குற்றியலிகரம் எனப்படும்.
முற்றியலுகரம்:
3. தன்மாத்திரை அளவில் குறையாமல் இருந்தால் அது முற்றியலுகரம் எனப்படும்.
4. பகு, பசு, படு, அது, தபு, பெறு இவை தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரம் (கு,சு,டு,து,பு,று) பெற்ற முற்றியலுகரங்கள்.
5. காணு, உண்ணு, உருமு இவற்றின் ஈற்றிலுள்ள மெல்லின (ணு, மு) உகரங்கள் முற்றியலுகரங்கள்.
6. தனிக்குறிலை அடுத்துச் சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய்யின் மேல் ஊர்ந்து வரும் உகரமும், பொதுவாகச் சொற்களின் இறுதியில் மெல்லின மெய்யின்மேல் ஊர்ந்து வரும் உகரமும், இடையின மெய்யின்மேல் ஊர்ந்துவரும் உகரமும் ஆகிய மூன்றும் முற்றியலுகரம் எனப்படும்.
செய்தி வெளிப்படும் திறன்:
7. தொடர்களில் செய்தி வெளிப்படும் தன்மையினைப் பொருத்துச் செய்தித் தொடர், வினாத் தொடர், விழைவுத் தொடர், உணர்ச்சித் தொடர் என பலவகைப்படுத்தலாம். விழைவுத் தொடர் வாழ்த்துதல், வேண்டுதல், கட்டளையிடுதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும்.
எடுத்துக்காட்டுகள்:
8. முயற்சி திருவினையாக்கும் என்பது ஆன்றோர் மொழி - செய்தித்தொடர்
9. பாடம் படித்தாயா? - விழைவுத் தொடர்
10. என்னே, அருவியின் அழகு! - உணர்ச்சித் தொடர்
11. கண்ணன் பாடம் படித்தான் - உடன்பாட்டுத் தொடர் (செய்தி)
12. கண்ணன் பாடம் படித்திலன் - எதிர்மறைத் தொடர் (செய்தி)
ADSENSE HERE!

No comments:

Post a Comment