Breaking News

92 ஆண்டுகளுக்குப் பிறகு கணித மேதையின் சமன்பாடு நிரூபணம்!

ADSENSE HERE!
கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் மரணத்தருவாயில் எழுதிய கணிதச் சமன்பாடு, கருந்துளை செயல்பாட்டை விளக்குகிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர்.
கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் 1920ஆம் ஆண்டு தன் மரணத்தருவாயில், ஒரு கணிதச் சமன்பாடு பற்றி, தனது வழிகாட்டியும், பிரபல கணித மேதையுமான ஜி.எச். ஹார்டிக்கு கடிதம் எழுதினார்.அதில், சில அதற்கு முன் கேள்விப்பட்டிராத கணிதச் செயல்பாட்டு முறைகள் விளக்கப்பட்டிருந்தன.

அச் செயல்பாட்டு முறைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றியும்  குறிப்பிடப்பட்டிருந்தது.கணிதச் செயல்முறைகளும், சமன்பாடுகளும் ஓர் அச்சை மையமாகக் கொண்டு, வரைபடம் போல வரையப்பட்டிருந்தன.

"சைன் அலைகள்' வடிவில் அந்த வரைபடம் அமைந்திருந்தது. அந்தச் சமன்பாட்டில் எந்த உள்ளீடு அலகைக் கொடுத்தாலும், அதற்கு வெளியீட்டு அலகு (அல்லது விடை) கிடைக்கும் வகையில் அந்த கணிதச் சமன்பாடு அமைந்திருந்தது.அந்த சமன்பாடுகள், கருந்துளையின் செயல்பாடுகளைப் பற்றியது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் இப்போது தெரிவித்துள்ளனர்.
இது குறித்து டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.எமோரி பல்கலைக்கழக கணிதவியல் வல்லுநர் கென் ஒனோ கூறியதாவது:

கடந்த 90 ஆண்டுகளாக ஆராயப்பட்டு வந்த ராமானுஜத்தின் புதிர்க்கடிதத்தில் இருந்த சமன்பாடுகளுக்கு நாங்கள் தற்போது தீர்வு கண்டிருக்கிறோம்.அவரின் சமன்பாடுகள் சரியானது என நாங்கள் கண்டறிந்துள்ளோம்.1920ஆம் ஆண்டுகளில் கருந்துளை பற்றி யாரும் பேசவேயில்லை. ஆனால், ராமானுஜன் அது பற்றிய "மாடுலர் வழிமுறை'களை கண்டறிந்து கூறினார். அவரின் இந்தப் பணி, கருந்துளை பற்றிய ரகசியங்களை வெளிக்கொணரும் என்றார் கென் ஒனோ.
ADSENSE HERE!

No comments:

Post a Comment