Breaking News

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அளிக்க இணையதள வசதி - யு.ஜி.சி.

ADSENSE HERE!

கல்வித் துறைகளில், ஆசிரியர் பணி, ஆராய்ச்சிப் பணிகள் உள்ளிட்ட, பல்வேறு வேலை வாய்ப்புகளை, இணையதளம் வழியாக
பெறுவதற்கு, யு.ஜி.சி., ஏற்பாடு செய்துள்ளது. இதற்கென, தனி இணையதளத்தை துவக்கி உள்ளது.

இதில், வேலை எதிர்பார்ப்போர், வேலை தரும் கல்வி நிறுவனங்கள் என, இரு பிரிவினரும், பதிவு செய்து கொள்ள வேண்டும் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. "நெட், செட்" மற்றும் பி.எச்டி., முடித்தவர்கள், கல்லூரி மற்றும் பல்கலைகளில், வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக, www.ugc.ac.in என்ற தனி இணையதளம் வழியாக, புது இணையதள வசதியை, யு.ஜி.சி., ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, மேற்படி கல்வி தகுதியைக் கொண்டவர்கள், தங்களைப் பற்றிய விவரங்களை, பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.தாங்கள் எதிர்பார்க்கும் வேலைகளை, அதில் குறிப்பிடலாம்.

அதேபோல், வேலைவாய்ப்புகளை அளிக்க விரும்பும் கல்வி நிறுவனங்களும், தங்கள் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பு விவரங்களை, இந்த இணையதளத்தில் வெளியிடலாம். இரு தரப்பினரையும், சந்திக்க வைப்பதன் மூலம், நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என, யு.ஜி.சி., நம்புகிறது.

கல்லூரிகளில், ஆசிரியர், முதல்வர் உள்ளிட்ட, பணிகளை எதிர்பார்த்து, இதுவரை, 27 ஆயிரத்து 276 பேர், பதிவு செய்துள்ளனர்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment