Breaking News

இந்த ஆண்டு விண்வெளி அதிசயங்களுக்கு பஞ்சமில்லை

ADSENSE HERE!

விண்வெளி அதிசயங்களில் பெரும்பாலானவற்றை இந்த ஆண்டு பொதுமக்கள் அதிகமாக
பார்ப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் மூன்று வால் நட்சத்திரங்கள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது.

விண்வெளியில், கோள்கள் நேர்கோட்டில் வருதல், வெள்ளி இடை நகர்தல் போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இவற்றில் எப்போதாவது நெப்டியூன் கோளிற்கு அடுத்துள்ள குயிப்பர் விண்கல் பட்டை மற்றும் ஆர்ட் மேகம் என்றழைக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த வால் நட்சத்திரங்கள் பூமிக்கு அருகே அவ்வப்போது தலைகாட்டுவதும் உண்டு.

இவற்றில் இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் மூன்று வால் நட்சத்திரங்களை பொதுமக்கள் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, பான்ஸ்டார் என்ற வால்நட்சத்திரம் இன்று சூரியனுக்கு மிக அருகில் வரவுள்ளது, இந்த வால் நட்சத்திரத்தை, சூரியன் மறைந்ததும், சுமார் 30 நிமிடங்கள் வரை நாம் பார்க்க முடியும். வரும் 20ஆம் தேதி வரை இதனை பொதுமக்கள் காணலாம். இதனை பார்க்க விஞ்ஞானிகளும் தயாராகி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ரஷ்ய வானியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஐசோன் என்ற வால்நட்சத்திரம், வரும் நவம்பர் 29 ஆம் தேதிக்குப் பிறகு வானில் தெரிய வாய்ப்புகள் உள்ளன. இதனை பொதுமக்கள் வெறும் கண்களால் காண முடியும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக வால்நட்சத்திரங்களோ, விண்கற்களோ பூமிக்கு அருகே வரும்போது, அவை எவ்வளவு ஆண்டு பழமையானது, எங்கிருந்து வருகின்றன என்பதை அறிந்து கொள்ள முடிவதோடு, பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ரகசியத்தையும் அறிந்த கொள்ள முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment