காலங்கள் மூன்று வகைப்படும்1.
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
தாவர உறுப்புப் பெயர்கள்:2.
ஈச்ச ஓலை, தாழை மடல், பனையோலை, சோளத்தட்டை, தென்னையோலை, பலா இலை, மாவிலை, மூங்கில் இலை, வாழை இலை, வேப்பந்தழை, கமுகங்கூந்தல், நெற்றாள்.
3.
செடி, கொடி மரங்களின் தொகுப்பிடம்:
4.
ஆலங்காடு, சவுக்குத்தோப்பு, தென்னந்தோப்பு, கம்பங்கொல்லை, சோளக்கொல்லை, தேயிலைத்தோட்டம், பனந்தோப்பு, பலாத் தோப்பு, பூஞ்சோலை.
பொருள்களின் தொகுப்பு:5.
ஆட்டு மந்தை, கற்குவியல், சாவிக்கொத்து, திராட்சைக்குலை, வேலங்காடு, பசு நிரை, மாட்டு மந்தை, யானைக் கூட்டம், வைக்கோற்போர்.
பொருளுக்கேற்ற வினைமரபு:
6.
சோறு உண், நீர்குடி, பால் பருகு, பழம் தின், பாட்டுப்பாடு, கவிதை இயற்று, கோலம் இடு, தயிர் கடை, விளக்கை ஏற்று, தீ மூட்டு, படம் வரை, கூரை வேய்.
குற்றியலுகரம்7.
குறுகிய ஓசையுடைய உகரம் குற்றியலுகரம்.
8.
கு,சு,டு,து,பு,று என்னும் ஆறு வல்லின எழுத்துகள் தனிநெடிலைச் சார்ந்து வரும்போதும், பல எழுத்துகளைச் சார்ந்து சொல்லின் இறுதியில் வரும்போதும் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். அவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம்.
9.
நெடில் தொடர்க் குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம், வன்றொடர்க் குற்றியலுகரம், மென்றொடர்க் குற்றியலுகரம், இடைத்தொடர்க் குற்றியலுகரம் என ஆறுவகைப்படும்.
10.
குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரை
11.
ஈற்று அயலெழுத்தாகத் தனிநெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பெற்று வரும்.
12.
நெடில் தொடர்க் குற்றியலுகரம் மட்டுமே இரண்டு எழுத்துக்களைப் பெற்று வரும். எடுத்துக்காட்டு ஆடு, மாடு, காது.